Monday, February 22, 2010

கிரிக்கெட் தொடர்பதிவு

தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர் பலா சங்கர் அவர்களுக்கு நன்றி .

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
----------------------------------------------------------------------------


1. பிடித்த கிரிக்கெட் வீரர் : டிராவிட் , லாரா , கங்குலி ,லான்ஸ் குளுஷ்ணர் , சேவாக், யுவராஜ் , முரளி

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் : யாரும் என் மண்டைக்கு தோணலை

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : ஸ்ரீ நாத் ,ஆலன் டொனால்ட், வாசிம் அக்ரம் , வாக்கர் யூனிஸ் , அம்புரோஸ் , டி வில்லியர்ஸ் (இவர் இந்தியாவுடன் titan cup தொடரில் 1996 ஆம் ஆண்டு ஆடியவர்)

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : ஸ்ரீ சாந்த் , வெங்கடேஷ் பிரசாத் ,

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் :ஷேன் வார்ன், முரளிதரன் , சக்லைன் முஸ்தாக்

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : வேங்கடபதி ராஜு , பேட் சிம்கோக்ஸ்

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : சேவாக் , டிராவிட் ,ரசாக் ,சச்சின்

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் : சஞ்சய் மஞ்ச்ரேகர்

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : லாரா, கில்கிறிஸ்ட், மைக்கெல் பெவன் ,லான்ஸ் குளுஷ்ணர் ,சங்ககரா

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் : வினோத் காம்ப்ளி

11. பிடித்த களத்தடுப்பாளர் : ஜான்டி ரோட்ஸ் , லாரா ,அசாருதீன்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் : கும்ளே, கங்குலி , நெஹ்ரா

13. பிடித்த ஆல்ரவுண்டர் : லான்ஸ் குளுஷ்ணர் , அப்துல் ரசாக்

14. பிடித்த நடுவர் : குண்டா ஒரு வெள்ளை தாத்தா இருந்தாரே அவரு அப்புறம் நம்ம வெங்கட் ராகவன்

15. பிடிக்காத நடுவர் : சில்வா அப்படின்னு முடியுற பெயர் கொண்ட இலங்கை நடுவர்

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : கவாஸ்கர்

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : ரவி சாஸ்திரி

18. பிடித்த அணி : அப்படி எதுவும் கிடையாது

19. பிடிக்காத அணி : அப்படி எதுவும் கிடையாது . இந்தியாவை வேண்டும் என்றால் சொல்லலாம் (வணிகமயமாக்கம் காரணமாக )

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- தற்சமயம் கிரிக்கெட் விரும்பி பார்ப்பது இல்லை

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- புதிதாக வந்த அணிகளிடம் திறமையை காமிக்கும் பெரிய அணிகள் விளையாடும் போட்டிகள்

22. பிடித்த அணி தலைவர் : கங்குலி, அசாருதீன் , ஸ்மித் , பிளெமிங் , ஹன்சி குரோன்ச்

23. பிடிக்காத அணித்தலைவர் : டிராவிட்

24. பிடித்த போட்டி வகை : 20 - 20

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், ஹேய்டன்-கில்கிறிஸ்ட், சேவாக்-காம்பிர் , அன்வர் - ஆமிர் சொஹைல்

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : எதுவும் தோன்றவில்லை

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : லாரா , முரளி ,வார்னே ,அக்ரம்

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : லாரா , முரளி , வார்னே ,ஸ்டீவ் வாக்

29. பிடித்த விக்கெட் கீப்பர் : சங்ககரா , கில்கிறிஸ்ட் , மொயின் கான் ,நயன் மோங்கியா (கும்ப்ளேக்காக )

தொடர அழைப்பது

ஜான் (இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் . சில உலக சாதனைகள் புரிந்தவர் . அது என்ன என்று அவரிடமே நீங்க கேட்டு தெரிந்து கொள்ளலாம் )

தெக்கிக்காட்டான்

சித்ரா

சமரன்

மயில் இராவணன்

மற்றும் தொடர விரும்புபவர்கள் யாவரும்

Sunday, February 21, 2010

நானும் கொசுவும்

வானம் பார்த்த மாடி பனி சில்லிடும் இரவு
பால் நிற ஒளி சிந்தும் பிறை நிலா

வானில் மிதக்கும் கண்ணடிக்கும் வெள்ளி
மாடியின் குளுமையில் மிதக்கும் நான்

காற்றில் மிதந்தபடி எங்கு இருந்தோ வரும்
வித்தியாசமாக குரைக்கும் நாய்களின் சத்தம்



நேராக கோடு போட்டது போல்
யாரோ செல்லும் வாகன சத்தம்

விதவிதமாக ரீங்காரிக்கும் இரவு பூச்சிகள்
எப்போதாவது எதற்கோ பேசும் கௌலி

இதயம் வாசிக்கும் மெல்லிய மேள இசை
இதை எல்லாம் தன்னுள் அடக்கும் காது

இவையன்றி

எந்த எண்ணங்களும் அற்ற மனநிலை
நான் என்னை உணர்ந்து கொண்டு இருந்தேன்

கலைந்தது என் தவம் காலில் கடித்த கொசுவால்

Thursday, February 18, 2010

பதின்மம்

பதின்ம வயதுக்கு முன்னால் வாழ்க்கையில் எந்த ஒரு நிர்பந்தமும் கிடையாது . வெறும் சந்தோசம் மட்டுமே நிரம்பி இருந்த காலம் . பதின்ம வயதின் முதல் கட்டத்தில் தான் நான் இன்று ஒரு நம்பிக்கை உள்ள மனிதனாக வாழ்வதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டது . அதற்கு காரணம் என் குடும்பத்தார் தவிர ஆசிரியர்களும் , நண்பர்களுமே முழுக்க கரணம் . இந்த காலம் தான் இரவில் வானத்தை பார்த்து வெள்ளிகளை பகலில் வேப்ப மர நிழல் தேடி மண்ணில் விளையாடும் சிறுவனாக இருந்த என்னை ஒரு காரியத்தை செய்து முடிக்க வல்ல நம்பிக்கையையும் , இந்த சமூகத்துடன் பழகும் வித்தையையும் , அதே சமுகம் தரும் ஏமாற்றத்தையும் எப்படி எடுத்து கொள்வது என்று கற்று கொடுத்தது .

9 ஆம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் என் ஆசிரியர் விதைத்த நம்பிக்கை என்னும் விதைதான் இன்று வரை என்னை ஓட செய்து கொண்டு இருக்கிறது .இந்த கால கட்டங்களில் நட்பு என்பது மரத்தில் காய்த்து கனிந்து வெகு சீக்கிரமாக பறிக்கப்படும் அல்லது உதிரும் பழம் போன்று இருந்தாலும் இன்று வரை நான் மறக்க முடியாதது . என் நட்பின் தோழர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கூட எனக்கு தெரியாது .

இந்த முதல் பாதி நட்பு என்பது பிஞ்சு மனங்களின் உக்கிரமான அன்பை பகிர்ந்து கொள்ளும் காலம் இது . இன்று நினைத்தாலும் பிஞ்சு முகங்களின் பாசமும் அவற்றின் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் அர்த்தமற்ற கோபங்களும் பசுமை . இன்றும் நினைவு இருக்கிறது என் வார்த்தைகளில் நான் உணராத வசீகரத்தை உணர்ந்த நண்பனிடம் நான் பேச மறுத்தபோது தன் கண்ணில் இருந்து 5 நிமிடங்களில் ஒரு அருவியே ஏற்படுத்திய அந்த பால் முகம் மாற என் நண்பனை . இது மட்டுமா ஆசிரியரிடம் பிரம்படி வாங்குவதில் ஆரம்பித்து 50 பைசாக்கு வாங்கும் மிட்டாய் வரை பகிர்ந்து கொள்ள துடிக்கும் அந்த நட்பினை .

முதல் பதின்ம பாதியில் பெற்றவர்களின் அன்பு பிடியில் இருந்து கொஞ்சம் விலகி சமுகத்தின் அரவணைப்பிலும் நிராகரிப்பிலும் வாழ ஆரம்பித்தவன் இரண்டாம் பதின்ம பாதியில் சிறு வயது முதல் வாழ்ந்த மண்ணை உறவுகளை விட்டு விலகி வாழ்க்கை என்னும் ஓட்ட பந்தயத்தில் குறைந்தப்பட்ச தகுதியாவது பெற கல்லூரி சென்ற பொழுது எல்லாமே அன்னியம் . ஆனால் அது கற்றுக் கொடுத்தது அன்னியத்தையும் என்னியம் ஆக்குவது எப்படி என்று .

கல்லூரி காலத்தில்தான் பகிர்ந்து உண்ணும் காகையாக வாழும் வாழ்கை எவ்வளவு உன்னதம் என்று புரிந்தது . அக்கறையுடன் அன்னமிடும் விடுதி பணியாளும் , 50 ரூபாயில் பாசத்துடன் பகிர்ந்து உண்டு சிறுகக் சாபிட்டாலும் மகிழ்ச்சி நிறைந்த மனசுடன் வாழ்வை பகிர்ந்த 10 நண்பர்களும் , இளையராஜா முதல் ஈழம் வரை பேசிப் பேசியே இரவை விடிய வைத்த நண்பனும் , என்னுடன் கூட கொஞ்சம் நேரம் பேச வேண்டும் என்பதற்காக என் அன்புக்கு லஞ்சம் கொடுத்தவனும் ,எனக்கு என்ன வேண்டும் என்று கேட்காமலே எனக்கு பிடித்ததை வாங்கி கொடுத்த நண்பனும் , துவளும் நேரத்திலும் தூணாக நின்று தோள் கொடுத்த நண்பர்களும் , அடிப்பட்ட காலை வைத்து நடக்க தவித்தபோது என்னை தூக்கி கொண்டு விடுதி உணவகத்துக்கு தூக்கி சுமந்த நண்பனையும் ,நடுநிசியில் வீட்டில் இருந்து பிரியாணி கொண்டு வந்து தூங்குபவனை எழுப்பி சாப்பிட சொன்ன நண்பனையும் என்று எழுதி கொண்டே போகலாம் அன்பைப் போதித்த நண்பர்களை பற்றி . இன்று வரை என்னை ஒரு அன்புள்ளவனாக இயங்க வைப்பது இவர்கள் தான் .



நான் என்பது இங்கு நான் அல்ல . நான் சந்தித்த மனிதர்களின் பிரதிபலிப்பே ..


இந்த தொடர் பதிவில் என்னை கலந்து கொள்ள சொல்லி என்னை ஊக்கப்படுத்திய அண்ணன் தெக்கிக்காட்டான் அவர்களுக்கு மிகவும் நன்றி .

இந்த தொடர்பதிவில் கலந்து கொள்ள நான் அழைப்பது

ஜான்
பலா சங்கர்
ஜெட்லி
சே குமார்
அக ஆழ்
பின்னோக்கி
புலவன் புலிகேசி
மந்திரன்

Wednesday, February 17, 2010

காற்றில் அலையும் மகரந்தம்

தேடித் தேடி சலித்து விட்டது
ஆனாலும் தேடி கொண்டே இருக்கிறேன்

ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு தேடல்
ஓவ்வொரு தேடலிலும் ஒன்றை காண்கின்றேன்

அந்த ஒன்றில் உன்னை காண முடியவில்லை
அந்த ஒன்று எங்கு இருக்கிறது என்று தெரியா

முடிவற்ற பயணத்தில் முடியா புதிர்களையும்
அவிழ்க்கும் மன திடத்துடன்


காற்றில் அலையும் மகரந்தம் போல்
உன்னைத் தேடி அலைகின்றேன்

உன்னை அடைந்து என் எண்ணக் கரு
முழுதாக எத்தனை நாள் ஆகுமோ

ஆனால் எதுவும் தெரியா என் எண்ணக் கரு
அண்டம் முழுதும் பரவி நிற்கிறது

ஒரு பாதி இல்லாமல் குறைப் பாதியாக
அகத்துள் நீ உறைந்தும்

வழி தெரியா படகாக பயணிக்கிறேன்
உன்னை தேடி என்னை மறந்த நான்

Tuesday, February 16, 2010

போரும் அமைதியும்



அமைதியான அற்புத காலை
கையில் போரும் அமைதியும்

வானில் பூத்த பூக்களை
வெண் பஞ்சு மேகங்கள்

ஆட்டத்தை தொடங்கின
தொடர் சிரிப்புடன் மேகங்கள்

என்ன விடயமடா இன்று
என்றேன் மேகங்களிடம்

மறுபடியும் தொடங்கியது
வான்மேகங்களின் ஆட்டம்

குலுங்கி குலுங்கி சிரித்து
மேக கண்கள் சொரிந்தன நீரை

கடும் போர் ஆரம்பித்தது
மண்ணில் விழும் மழைத் துளிகளுக்குள்

எதற்கு தெரியுமா
அழகான கோலம் வரைய



ஆட்டத்தை முடித்தன அமைதியாக
மகிழ்ச்சியாக கரு மேகங்கள்

எனை பார்த்து கேட்டது ஒரு மேகம்
அழகாக இருக்கிறேனா என்று

நான் சொன்னேன் வெண்மையை விட
கருப்பில் தான் அழகு என்று

எப்படி என்று கேட்டது
வெக்கத்துடன் அந்த மேகம்

நான் சொன்னேன் நீ கறுப்பானால்
பூமியும் குளிர்கிறது நீயும் குளிர்கிறாய் என்று

தடுமாறிய குரலில் சொன்னது
முகம் கருத்த மேகம்

எல்லாம் உங்கள் கையில் தான்
தயவு செய்து மரங்களை வெட்டாதீர்கள்

மழை துளிகளின் போர் முடிந்து
என் எண்ண துளிகளின் போர் தொடங்கியது

Thursday, February 11, 2010

தீக்குச்சி மெழுகுவர்த்தி அரிக்கேன் விளக்கு

தீக்குச்சி



தொட்டால் பற்றிக் கொள்ளும்
கடுங் கோபக்காரன்
அந்த கோபத்திலும் ஒளி
ஏற்றும் பாசக்காரன்


மெழுகுவர்த்தி



அரும்பு மீசை வச்ச
வெள்ளைக்காரன்
உருகி உருகி வெளிச்சம்
காட்டும் தங்க மனசுக்காரன்

அரிக்கேன் விளக்கு



கம்பியில் தொங்கும்
கண்ணாடி உடம்புக்காரன்
தன் உடம்பில் கரி பூசி
வீட்டை அழகாக்கும் ஒப்பனைக்காரன்

மெழுகுவர்த்தி படம் :தெக்கிகாட்டான்

Monday, February 8, 2010

BEAUTIFUL COUNTRY திரைப்படமும் வியட்நாம் போரும்

சென்ற வாரம் கிழக்கு பதிப்பகத்தில் திரையிடப்பட்ட "beautiful country" படத்தின் பின்புலத்தை பற்றியது இந்த பதிவு . படத்தை பற்றி நண்பர் பலா சங்கர் ஒரு பதிவு சுந்தர கண்டம் என்ற பெயரில் போட்டு உள்ளார்.

வியட்நாமில் 1953 இல் ஆரம்பிக்கப்பட்ட போர் 1975 இல் முடிவடைந்தது . இந்த போர் இடதுசாரி ஆதரவு பெற்ற படைக்கும் இடதுசாரி எதிர்ப்பாளர்களுக்கும் நடைபெற்றது . இந்த போரில் அமெரிக்காவின் பங்கு அதிகம் . அமெரிக்க போர்
வீரர்கள் மற்றும் படைகலங்கள் பொதுவாக GI என்று அழைக்கப்படுவார்கள் .இந்த வார்த்தை beautiful country படத்தின் நாயகன் அவனுடைய நண்பர்களுடன் விளையாடும்போது வரும் வசனத்தில் கூட வரும் .

வியட்நாம் சென்ற அமெரிக்க படை வீரர்கள் அவர்களது உடல் தாகத்தை தணிக்க வியட்நாம் பெண்களை கற்பழிக்க ஆரம்பித்தார்கள் . வியட்நாமில் விபச்சாரமும் பெருகியது . சிலர் திருமணம் கூட செய்து கொண்டார்கள் .இதனால் வியட்நாமில் நிறைய amerasian குழைந்தைகள் பிறந்தனர் .

1975 இல் போர் முடிந்ததும் அமெரிக்க வீரர்கள் அமெரிக்காவிற்கு திரும்பினர் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை வியட்நாமில் விட்டு விட்டு . சில வீரர்கள் மோசமான காயங்களால் பாதிக்கப்பட்டு இருந்தனர் . 1980 க்கு அப்புறம் amerasian பிரிவினரால் அரசியல் மற்றும் சமுக தளங்களில் ஏற்பட்ட அதிர்வு அமெரிக்க அரசை யோசிக்க வைத்தது . ஏற்கனவே அமெரிக்க வீரர்கள் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர் . இப்பொழுது அவர்களது குழந்தைகளும் மனைவிகளும் . இதனை ஒட்டி அமெரிக்க அரசாங்கம் amerasian நாடு திரும்பும் சட்டத்தின்படி 1988 ஆம் ஆண்டு வியட்நாமில் உள்ள amerasian மக்களுக்கு விசா வழங்க முடிவு செய்தது . கிட்டத்தட்ட 23000 பேர் முக சாயலை மட்டுமே அடிப்படையாக கொண்டு அமெரிக்க விசா வாங்கி குடிபெயர்ந்தனர் . இவர்களது வாழ்க்கை தரம் அமெரிக்காவிலும் பெரிதா சொல்லி கொள்ளும்படி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது



இந்த வியட்நாம் போரில் வியட்நாமின் பொருளாதாரமும் மனித வளமும் பெரும் அளவு சிதைந்து போனது . மனித உயிர் பலிகள் கிட்டத்தட்ட 15 லட்சத்திற்கும் மேலான வியட்நாம் பகுதியை சேர்ந்த மக்களும் 50000 க்கும் அதிகமான அமெரிக்க வீரர்களும் . காணமல் போனவர்களும் நிறைய .

இந்த போரிலும் வேதியியல் சார்ந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன . அதன் பெயர் "NAPLAM" . இந்த வெடிபொருளை வீசினால் சத்தம் இருக்காது ஆனால் பெரிய தீ பிழம்பை ஏற்படுத்தி விடும் .அப்படி வீசப்பட்ட குண்டு ஒன்று தான் வியட்நாம் போரின் கொடுரத்தை உலகிற்கு காட்டியது அந்த குண்டு விழுந்த ஒரு சிறுமி தன் உடம்பில் ஒரு துணி கூட இன்றி ஓடும் காட்சி புகைப்படமாக 1972 இல் வெளிவந்த பொழுது உலகமே திகைத்துவிட்டது . அந்த சிறுமியின் இப்போதைய புகைப்படம் தான் கீழே உள்ளது .



அந்த சிறுமியின் பெயர் கிம் .இவர் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் .

போரினால் வியட்நாமில் ஏற்பட்ட இந்த சமுக சீரழிவு 2004 ஆம் ஆண்டு நார்வே நாட்டு இயக்குனர் " Hans Petter Moland " எடுத்த "BEAUTIFUL COUNTRY " மூலம் திரைப்படமாக பதிவு செய்யப்பட்டது .

இதே போன்ற சீரழிவுகளை சந்தித்த தமிழ் இனமும் யாரோ ஒரு வெளிநாட்டு இயக்குனருக்காக காத்து கொண்டு இருக்கிறது