Monday, November 30, 2009

திருச்செங்கோடு - ஈரோடு

திருச்செங்கோடு எனக்கு ரெம்ப பிடிச்ச ஊர் . இது வரை இரண்டு தடவை அங்கெ போய் இருக்கேன் . இந்த தடவை போகும்போது பள்ளிபாளையம் வழிய சுத்தி ஈரோட்டுக்கு பேருந்தில் போனேன் .

போற வழி எல்லாம் பசுமையா இருந்தது . நிறைய விவசாயம் செய்துகிட்டு இருந்தாங்க . எங்கேயும் தரிசு நிலமே இல்லை . கரும்பு , நாத்து நிறைய பயிர் செஞ்சு இருந்தாங்க . பள்ளிபாளையம் போனதும் நான் பார்த்த காட்சிகள் என்னை வெகுவாக பாதித்து விட்டது .. அப்படி என்ன பாத்தீங்கன்னு கேட்குறீங்களா .. அது வேற ஒன்னும் இல்லை ஆலைகளில் குறிப்பாக சாய பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அப்படியே ஆத்துல கலந்து நிலத்துல கலந்து மொத்த பூமியையும் நாசபடுத்திகிட்டு இருக்கு .

பொதுவாக இந்த கொங்கு பகுதி மக்கள் மீது எனக்கு ஒரு நல்ல அபிபிராயம் உண்டு . தமிழ்நாட்டின் தொழில் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் ,பிறரை நன்றாக மதிப்பவர்கள் என்று . இந்த மக்கள் எப்படி இதை எல்லாம் கவனிக்காமல் சகித்து கொண்டு வாழ்கிறர்கள் என்று எனக்கு புரியவில்லை

ஈரோடு சென்று வந்த பிறகு இந்த மாதிரி ஒரு தொழில் புரட்சி நம்மை எங்கு கொண்டு செல்லும் என்று ஒரு கேள்வி எழுகிறது .

ஈரோடு செல்லும் வழியில் உள்ள நிலங்கள் எல்லாம் "கூழங்கல்கள் " அதிகம் உள்ள நிலங்கள்தான் இருக்கின்றன . இவை பெரும்பாலும் விவசாயத்திற்கு உகந்தவை அல்ல . ஆனால் இந்த மாதிரி நிலங்களை செம்மைப்படுத்தி விவசாயம் செய்து வரும் இவர்கள் இந்த கழிவு நீரால் நிலத்தை அழிக்கின்றனர் . பேருந்தில் என் பக்கத்தில் அமர்ந்து இருந்தவர் சொன்னது இன்னும் ஒரு அதிர்ச்சி தகவல் " இந்த கழிவு நீரை விவசாயத்திற்கு வேறு பயன்படுத்துகிறார்கள் என்று " .

இந்த பக்கம் ஊர் பெயர்கள் எல்லாம் ரெம்ப வித்தியசகமாக இருந்தன " பிரிதி , பெரும ளசி இன்னும் பல வித்தியாசமான பெயர்கள் .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Thursday, November 19, 2009

Wednesday, November 18, 2009

தொடக்கப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி

பொதுவாக 4 வது 5 வது படிக்கும்போது தான் நம்ம வாழ்க்கைல புதுசா நிறைய கத்துக்குவோம் .. அதுல ரெண்டு முக்கியமானது சைக்கிள் மற்றும் நீச்சல் கத்துகிறது .

இந்த வயசு பயலுக சைக்கிள் ஒட்டுரேன்னு சொல்லி தெருவல போறவங்கள மிரள வைப்பானுங்க .. அந்த சைக்கிள் உயரம் கூட இருக்க மாட்டானுங்க . அந்த "பெடல்" கூட எட்டாது . ரெண்டு காலையும் உள்ளார விட்டு கிட்டு வேகம் போறதுல அவன்களுக்கு ஒரு மகிழ்ச்சி . இந்த வயசுல இதுல ஏறபடுற மன தைரியம் தான் அவனுக்கு பின்னால ரெம்ப உதவுது . அப்புறம் சும்மா நிக்கிற சைக்கிள்ள ஏறி உக்காந்துகிட்டு சைக்கிள் ஓட்டுறது .

அப்புறம் நீச்சல் . இந்த வயசுல பெரிய பசங்கள பார்த்து பொறமைபடுற விடயம் இந்த நீச்சல் . நம்மள குளிக்கும் போது கரையவோ படியவோ பிடிச்சு நீச்சல் அடிக்க சொல்லிட்டு நீச்சல் தெரிஞ்சவனுங்க அலப்பரய கொடுப்பானுங்க .. நமக்கு எப்போடா உள்ளே குதிச்சு நீச்சல் அடிப்போம்னு இருக்கும் .. இந்த நேரத்தில சில குரூப் கிணத்துல குளிப்பானுங்க . அவனுங்க நம்மள கூட்டிட்டு போய் கிணத்துல தள்ளி விட்டு அங்கேயும் ஒரு வழிய அடிக்க வச்சுரவாங்க . அப்புறம் என்ன காலைல ஒரு குளியல் , மதிய சாப்பட்டுக்கு அப்புறம் ஒரு குளியல் (சில நேரம் சாப்பிடாமலே ) , சாயும்காலம் ஒன்னு .

இது தவிர கிராமத்து மற்றும் சிறு நகரங்களில் வாழும் இந்த பசங்க விளையாடும் விளையாட்டுகள் அதிகம் .
கண்ணாமூச்சி , கிரிக்கெட் , கோலி , சில்லங்குச்சி , கபடி இன்னும் பிற

நகரத்தில் உள்ள பசங்களுக்கு இதுவும் போச்சு .

Monday, November 16, 2009

உணவகங்கள் மடிவாலா மற்றும் BTM பெங்களூர்

பொதுவாக தமிழ்நாட்டில் இருப்பவர்கள் பெங்களூர் செல்லுவதற்கு தயங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் உணவு .
ஆனால் மடிவாலா ,BTM மற்றும் அல்சூரில் வாழும் மக்களுக்கு பொதுவாக இந்த பிரச்சினை கிடையாது .
இந்த இடங்களில் சிறந்த தமிழ் உணவகங்களை பற்றி ஒரு சின்ன பதிவு
முதலில் மாருதி நகர் ,
காரைக்குடி :
இது தான் இங்கே நம்பர் 1 . இந்த கடை ஸ்பெஷல் இடியப்பம் , பொடி தோசை .
இரவு 8 மணிக்கு ஆரம்பிச்சா 10.30 வரைக்கும் கடை இருக்கும் . எப்போ போனாலும் கூட்டம்தான் . வாய்க்கும் பாக்கெட்டுக்கும் நிறைவான ஒரு உணவகம் .

பொங்கல் :
இந்த கடைல தோசை தான் சூப்பர் .. விதவிதமா தோசை போடுவாங்க . தஞ்சாவூர் , மல்லி , பொடி , ரவ , பொடிமசாலா , ரவமாசலா அப்படின்னு . விலை கொஞ்சம் அதிகம் . கூட்டமும் கூட

இந்த ரெண்டு தவிர ராஜேஸ்வரி மற்றும் காவேரி உணவகங்களும் நல்ல இருக்கும்

அல்சூர் :
PPP பவன் :
இங்கே டிபன் அயிட்டங்கள் எல்லாம் நல்ல இருக்கும் .

Friday, November 13, 2009

சென்னை மனிதர்கள்

நான் சென்னை வருவதற்கு முன்னால் சென்னை எந்திரமயமான வாழ்க்கை வாழும் மனிதர்களை நிரம்பிய ஊர் என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன் . நான் பார்த்த இரண்டு சம்பவங்கள் அதை மாற்றின .

நான் சூளைமேட்டுல அப்போ இருந்தேன் .. அலுவலகம் வடபழனில . கங்கை அம்மன் கோவில் தெரு வழிய 30 நிமிடம் நடந்த வடபழனி வந்துரலாம் .. வர வழில ஒருத்தர் தள்ளு வண்டில இளநீர் விற்பார் . தினம் அவர்கிட்டே ஒரு இளநீர் வாங்குவது பழக்கம் . அப்படி தான் ஒரு நாள் வாங்கும்போது " தம்பி ஒரு நிமிடம் அப்படி என்றார்" .
சரி அப்படினுட்டு நான் காத்து இருந்தேன் . பக்கத்தில ஒரு கடைல பீடி வாங்கிட்டு திரும்புனார் .. அந்த பக்கம் ஒரு நாய் அவர பாத்துகிட்டு இருந்தது .. அவர் வந்திட்டியா அப்படின்னு சொல்லிட்டு 50 காசுக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்தார் .

ஒரு நாள் வடபழனில இருந்து திருவல்லிகேணிக்கு பேருந்துல போய் கிட்டு இருந்தேன் , நல்ல மழை பேஞ்சுகிட்டு இருந்தது . பேருந்துல ஒரே ஒருத்தர் மட்டும் நின்னுகிட்டு இருந்தார் . ஒரு 20 வயசு இருக்கும் .. பெண்கள் பக்கம் ஒரு அம்மா மட்டும் ஒரு சீட்ல உக்காந்து இருந்தாங்க . அந்த அம்மாவுக்கு ஒரு 40 வயசு இருக்கும் . பேருந்து ஒரு நிறுத்தத்தை தாண்டி இருக்கும் .. அப்பவும் அந்த இருக்கை காலியாதான் இருந்தது .

அந்த அம்மா நின்னுகிட்டு இருந்தவரை குப்பிட்டு " ராசா என் நின்னுகிட்டு வரே . வா இங்கே வந்து ஊக்காரு . நீ என் புள்ளை மாதிரி கூச்ச படதே " அப்படின்னு சொன்னாங்க .


இது தவிர சென்னையில் என்னை கவர்ந்த மனிதர்கள் என்றால் அது கிராமத்தில் இருந்து வந்து நல்ல வேலை ஒன்றுக்கு சென்று தான் குடும்பத்தை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று கையில் சான்று இதழ்களுடன் கண்களில் கனவுகளை சுமந்து கொண்டு மடிப்பு கழியாத ஆடைகளுடன் ஓவ்வொரு நாளும் தான் வாழ்கையை தேடும் இளைஞர்கள்


அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன குறிப்பாக ஈழ தமிழர்கள்

தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன குறிப்பாக ஈழ தமிழர்கள்

முதலில் தமிழர்களாகிய நாம் உலக அளவில் ஒரு அமைப்பை அரசியல் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு ஏற்படுத்த வேண்டும் . அந்த அமைப்பு பொது மக்களிடம் பண வசூல் செய்து நிதி ஆதாரங்களை உருவாக்க வேண்டும் .
அந்த நிதி கொண்டு உலகெங்கும் உள்ள தமிழர்களை கொண்டு பல தரப்பட்ட தொழில்களில் இறங்க வேண்டும் . தொழில் மட்டும் அல்லாமல் பள்ளி , கல்லூரி அமைத்து தமிழர்களுக்கான வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் . இந்த அமைப்பு நடத்தும் நிறுவனங்களில் தமிழ் உணர்வினை பெருக்க வேண்டும் .

இந்த உலக அமைப்பு வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண துணை நிற்க வேண்டும் .. அதற்காக தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் குழு அமைக்க வேண்டும் .

இந்த உலக அமைப்பு தமிழர்களுக்காக உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த நண்பர்களை ஏற்படுத்த வேண்டும் .அதன் மூலம் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த உரிமைகள் பறி போக விடாமல் தடுக்கலாம்

இது தவிர ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்விற்கு பல திட்டங்கள் செயல் படுத்த வேண்டும் .

தற்போது உள்ள நிலைமையில் இந்த மாதிரி ஒரு அமைப்பை ஈழ தமிழர்கள் தான் ஆரம்பிக்க முடியும் .பின்பு தமிழக மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழர்களை இணைத்து கொள்ளலாம் .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

வன்முறை - சிறுகதை

வன்முறை

சமுத்திரம் முதுகலை பட்டம் வாங்கி 4 வருடம் ஆகிறது .. தான் குடும்ப தொழிலை கவனித்து கொண்டு எப்படியும் ஒரு அரசாங்க வேலைக்கு போய் விட வேண்டும் என்பது அவன் லட்சியம் . இதற்கு இடையில் தன் உறவு பெண் செல்வியையும் காதலித்து கொண்டு இருந்தான் .

செல்வியின் அப்பா சமுத்திரத்தை இந்த வருடத்துக்குள் திருமணம் பண்ண சொல்லி வலியுறுத்தி கொண்டு இருந்தார் .

சமுத்திரமோ அரசாங்க வேலைக்கு போயிட்டு கண்டிப்பா திருமணம் பண்ணி கொள்கிறேன் என்று சொல்லி கொண்டு இருக்கிறான் .

ஒரு நாள் சமுத்திரம் கடையில் இருந்தப்ப அங்கு வந்த செல்வியின் அப்பா அவனிடம் ஒரு செய்திதாளை கொடுத்து அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் பெறுவதை சொன்னார் .

சமுத்திரம் அதை வாங்கி படித்து விட்டு ரெம்ப மகிழ்ச்சி மாமா என்றான் .
இந்த தடவை தனக்கு வேலை கிடைத்து விடும் என்று உறுதியாக சொன்னான் .
அதற்கு செல்வியின் அப்பா " ரெம்ப மகிழ்ச்சி மாப்பிள்ளை " என்றார் .

சமுத்திரம் விண்ணப்பம் செய்தான் . தேர்வு நாளும் வந்தது . தேர்வு நடை பெறும் இடம் திருநெல்வேலி தூய சவேரியார் பள்ளி .

தேர்வுக்காக சமுத்திரம் சங்கரன்கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு திருநெல்வேலி கிளம்பினான் . நன்றாக படித்து இருந்ததால் ஆவலுடன் வினா தாளை எதிர் நோக்கி இருந்தான் .

பேருந்து கிளம்பி ஒரு 30 நிமிடங்கள் தான் இருக்கு .. திடீர் என்று பேருந்து தாக்கப்பட்டது .
பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அலறி கொண்டு இருந்தார்கள்

சமுத்திரம் பதட்டத்துடன் என்ன என்று விசாரித்தான் . யாரோ ஒரு அரசியல் தலைவரை கட்சியில் இருந்தும் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கி விட்டார்களாம் . அவர் ஆதரவாளர்கள் கலவரம் செய்கிறார்கள் என்று சொன்னார்கள் .

சமுத்திரம் விசாரித்த பொழுது திருநெல்வேலி செல்வது இப்போதைக்கு கடினம் . அப்படியே சென்றாலும் தேர்வு பாதி முடிந்து விடும் என்று தோன்றியது .

சமுத்திரம் துக்கம் தாளாமல் வீட்டுக்கு திரும்பினான் .

வீட்டுக்கு வந்தால் அப்பாவுடன் 10 முதல் 15 பேர்கள் தீவிரமாக ஆலசோனை செய்து கொண்டு இருந்தார்கள் . சமுத்திரத்திடம் அவன் அப்பா " எங்க போயிட்டு வாரே " என்றார் .

அவன் நடந்த சம்பவங்களை சொன்னான் .

அதற்கு சமுத்திரம் அப்பா சொன்னார் " நம்ம தலைவர தான் கட்சிய விட்டு தூக்கிட்டாங்க . நான் தான் இந்த கலவரத்தை தூண்டி விட்டேன் என்று " எந்த வித பதட்டமும் இல்லாமல் .

சமுத்திரம் அப்படியே அதிர்ந்து நின்றான் .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Thursday, November 12, 2009

பணம் மட்டும் தான் வாழ்க்கையா ???

பணம் மட்டும் தான் வாழ்க்கையா ???

பொதுவாக எனக்கும் எனது நண்பர்களுக்கும் பணம் பற்றி பெரிய விவாதமே அவ்வபோது எழுவது உண்டு .

பணத்தை பற்றி எனது எண்ணம் " பணம் என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று . ஆனால் பணத்தால் எல்லாவற்றையும் பெற முடியாது . உதாரணத்துக்கு உண்மையான அன்பு , கனிவான உபசரிப்பு மற்றும் பல " .

ஆனால் என் நண்பர்கள் சொல்லுவது " பணம் தான் முக்கியம் . பணத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் . பணம் இல்லை என்றால் நம்மை விட்டு நண்பர்கள் உறவினர்கள் கூட பிரிந்து விடுவார்கள் "

இப்படிப்பட்ட நண்பர்கள் , உறவினர்கள் நம்முடன் இருப்பதை விட நம்மை விட்டு பிரிந்து போவது நல்லது . அவர்களுக்காக நாம் ஒன்றும் வருத்தப்பட வேண்டியது இல்லை என்பது என் எண்ணம் ..

"ஒரு மனிதன் தனது துயரத்தில் தான் உண்மையான மனிதர்களை அறிகின்றான் " என்று சொல்லப்படுவது உண்டு .

எனக்கு மாசற்ற அன்பின் ஆழத்தை உணர்த்திய நிகழ்வை பகிர விரும்புகிறேன் .

நான் கல்லூரி semester விடுமுறையில் இருந்த நேரம் அது . அப்போ ஒரு கல்லூரி வளாக தேர்வுக்காக திருச்சி சென்று இருந்தேன் . வழக்கம் போல நம்மள over qualified நு சொல்லி விரட்டி விட்டுட்டங்கா . நம்ம லட்சணம் நமக்கு தான் தெரியும் . நான் வீட்டுக்கு வந்தப்ப என் மருமகன் "மனோ " இருந்தான் . அவனுக்கு அப்போ ஒரு 4 வயசு இருக்கும் .

அப்போ என் அம்மா அவன்கிட்ட "மனோ உனக்கு மாமா சாப்பிட்ரதுக்கோ விளையாடுரதுகோ ஒன்னும் வாங்கிட்டு வரலை அப்படின்னு சொன்னாங்க ".
அதுக்கு அவன் சொன்னான் " எனக்கு மாமா வந்ததை போதும் .. அது எல்லாம் வேணாம் ஆச்சி " அப்படின்னு .

இங்கே அந்த அன்பு தான் எனக்கு பெருசா தெரிஞ்சது .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

அங்க நிக்குறான்யான் தமிழன் !!!

அங்க நிக்குறான்யான் தமிழன்

MICROSOFT பில் கேட்ஸ் MICROSOFT EUROPE தலைமை அதிகாரியை தேர்வு செய்ய ஒரு நேர்முக தேர்வு நடத்துகிறார் .
ஒரு 5000 பேருக்கு மேல நேர்முக தேர்வுக்கு வந்து இருந்தாங்க . அதுல ஒரு ஆள் நம்ம ராமசாமி .

பில் கேட்ஸ் வருகைக்கு நன்றி சொல்லிட்டு , .NET தெரியாதவர்கள் கிளம்பலாம் என்றார் . 2000 பேர் கிட்டே அறையை விட்டு கிளம்பிட்டாங்க .

நம்ம ராமசாமி அவனுக்கு அவனே சொல்லிகிட்டான் " நமக்கு தான் .NET தெரியாது .. இருக்க போறதால ஒன்னும் குறைய போறது இல்லை . இருந்து தான் பாப்போம் "

மறுபடியும் பில் கேட்ஸ் 100 பேர் கொண்ட டீமா manage பண்ணாதவங்க கிளம்பலாம் என்றார் . 2000 பேர் கிட்டே அறையை விட்டு கிளம்பிட்டாங்க .

நம்ம ராமசாமி இப்போவும் அவனுக்கு அவனே சொல்லிகிட்டான் " நம்ம நம்மளயே சரியாய் பாத்துக்க மாட்டோம் .. இதுல இது வேறயா .. இருக்கிறதால ஒன்னும் குறைய போறது இல்லை . இருந்து தான் பாப்போம் "

மறுபடியும் பில் கேட்ஸ் management பட்டம் இல்லாதவங்க கிளம்பலாம் அப்படின்னு சொன்னார் .

இப்போ ஒரு 500 பேர் கிட்டே கிளம்பினாங்க
நம்ம ராமசாமி இப்போவும் அவனுக்கு அவனே சொல்லிகிட்டான் " நம்ம 10 வதே 10 attempt .. இதுல இது வேறயா அப்படின்னு நினச்சு கிட்டான் .. இருக்கிறதால ஒன்னும் குறைய போறது இல்லை . இருந்து தான் பாப்போம் "

மறுபடியும் பில் கேட்ஸ் "serbo-croat" மொழி தெரியாதவங்க கிளம்பலாம் அப்படின்னார் . ஒரு 498 பேர் கிளம்பிட்டாங்க .

இப்போவும் நம்ம ராமசாமி "serbo-croat ன என்னனு கூட தெரியாது .இருக்கிறதால ஒன்னும் குறைய போறது இல்லை . இருந்து தான் பாப்போம் " அப்படின்னு சொல்லிகிட்டான்

பில் கேட்ஸ் ஆரம்பிச்சார் . இப்போ நீங்க ரெண்டு பேர் தான் candidates . நீங்க ரெண்டு பேரும் "serbo-croat" மொழில பேசுங்க கேட்போம் அப்படின்னார் .

நம்ம ராமசாமி ஆரம்பிச்சான் "எந்த ஊரு ? ' "

இதுக்கு இன்னொருத்தன் சொன்னான் " திருநெல்வேலி பக்கம் "

அங்க நிக்குறான்யான் தமிழன் !!!


டிஸ்கி : மின் அஞ்சலில் வந்த நகைச்சுவை இது
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Tuesday, November 10, 2009

காய்ந்த திராட்சை மற்றும் அத்தி பழம் செய்முறை

திராட்சை :

திராட்சை கொத்து ல இருந்த முதலில் பழைய மற்றும் சேதம் அடைந்த திராட்சைகள் நீக்க வேண்டும் . இப்பொழுது நன்றாக உள்ள திராட்சைகளை வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும் . துணி மூடி காய வைத்தால் தூசியில் இருந்து பாதுகாக்கலாம் . இதற்கு விதை இல்லாத திராட்சை பயன்படுத்துவது நலம்

அத்தி :

அத்திப்பழத்தை வெட்டி நன்றாக கழுவி 3 நாள்கள் வெயிலில் காய வைக்க வேண்டும்
3 நாட்களுக்கு பின்பு நன்றாக கழுவி தூசி முதலானவற்றை நீக்கி பின்பு காய்ந்த பழத்தில் இருக்கும் தண்ணீரை நீக்க வேண்டும்.

மீண்டும் 2 நாட்கள் வெயிலில் துணி மூடி காய வைக்க வேண்டும் . 2 நாட்களுக்கு பின்பு எடுத்தால் இப்போ காய்ந்த அத்தி பழம் தயார் . இப்போ இதை எடுத்து கண்ணாடி டப்பா ல பத்திரப்படுத்த வேண்டியது தான் .

Saturday, November 7, 2009

தென் மாவட்ட மக்களின் கடவுள் சார்ந்த பெயர்கள்

தென் மாவட்ட மக்களின் கடவுள் சார்ந்த பெயர்கள்

இங்கு பெரும்பாலும் முருகன் சார்ந்த பெயர்களே அதிகம் .. அதற்கு அடுத்தபடியாக சிவன் மற்றும் அம்மன் பெயர்கள் அதிகம் .

இவற்றை தவிர புகழ் பெற்ற வீரர்களின் பெயர்களும் உண்டு .

முதலில் முருகன் சார்ந்த பெயர்கள் பற்றி காண்போம் .

வேலு - இந்த பெயர் அதிகம் பேருக்கு உண்டு.. ஒரே குடும்பத்தில் நிறைய வேலுக்கள் உண்டு. உதாரணத்திற்கு எனது குடும்பத்தில் பெரிய வேலு , சின்ன வேலு , வேலு , கறுத்த வேலு ( இந்த கறுத்த சம்பந்தமான பெயர்கள் அதிகம்) ,ஐவேல் , வேலம்மா , வேலுத்தாய் , வேல் ராஜ் ,

முருகன் , கந்தன் ,ஆறுமுகம் - இது அனைவரும் அறிந்ததே

மேலே சொன்னவை எல்லாம் பொது பெயர்கள் .


கடற்கரை , கடலாச்சி , கடல் துரை - இந்த பெயர்கள் எல்லாம் திருச்செந்தூரில் கடலோரமாக இருக்கும் வேலனை குறிப்பன

இங்கு ஒரு முக்கியமான விடயம் என்ன என்றால் இந்த முருகன் பெயர் கொண்ட மக்கள் பெரும்பாலும் தன் குல தெய்வ கோவில் தவிர வேறு கோவிலுக்கு அதிகம் செல்லாதவர்கள் .

அடுத்து சிவன் சார்ந்த பெயர்கள் :

கருப்பசாமி - இந்த பெயர் பொதுவாக சிவனை குறிப்பது .. அறிந்தோ அறியாமலோ இந்த சாமி நாட்டுபுற மக்களின் முதல் தெய்வம் ஆகிவிட்டது .

கருப்பு சம்பந்தமான மற்றுமொரு பெயர் - கருஞ்சிவன் (இது என் தாத்தா ஒருவரின் பெயர்)

மாடசாமி , சுடலை - இந்த பெயர் சுடுகாட்டில் வாழும் சிவன் பெயர் .

அய்யனார் - இதுவும் சிவன் பெயர்தான்

ஆதிமூலம் - சிவன் தான் ஆதி என்பதை உணர்த்தும் பெயர் .

குருசாமி - இது சிவன் ஒரு குரு என்பதை சொல்லும் பெயர்

பெரியசாமி - இது சிவன் ஒரு பெரியவன் என்பதை சொல்லும் பெயர் .


அம்மன் பெயர்கள் :


இசக்கி - இது தென் மாவட்டங்களில் ஆண் பெண் இருபாலர்க்கும் வைக்கப்படும் பெயர்

மாரி - இது தென் மாவட்டங்களில் ஆண் பெண் இருபாலர்க்கும் வைக்கப்படும் பெயர்

இது தவிர தன் குல தெய்வங்களின் பெயர்களும் உண்டு .

தென்மாவட்டங்களில் பொதுவாக முன்னோர்களின் பெயரைதான் குழந்தைகளுக்கு வைப்பது வழக்கம் .. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்த சில மாற்றங்கள் இந்த பெயர் வைக்கும் பழக்கங்களை பாதித்து இருக்கின்றன .

இப்படி பெயர் வைத்த இந்த மக்கள் பெரும்பாலும் குல தெய்வ கோவில்களை தவிர வேறு எந்த கோவிலுக்கும் (குறிப்பாக பெரிய கோவில்கள் ) சென்றது கிடையாது .

இப்போ பெயர்களையும் சிதைத்து சாமின்னு சொல்லிட்டு கண்டவன்கிட்டேயும் கை கட்டி நிக்கிறோம் ...

இதுக்கு எங்க சாமிய பார்க்க போன நான் தொட்டு கும்பிட என்ன குளிக்க வச்சு அலங்காரம் பண்ணி அழகு பாக்க கூட முடியும் .
நீங்களும் இந்த மாதிரி பெயர்கள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

ஓம்கார் சுவாமிகளே உங்களின் தகவலுக்கு ஒரு மறுப்பு

ஓம்கார் சுவாமிகளே உங்களின் தகவலுக்கு ஒரு மறுப்பு

//பிரபஞ்ச ஆற்றல் மரங்கள் மேல் இறங்கும் பொழுது அவ்வாற்றலை ப்ராண சக்தியாக மாற்றுகிறது அல்லவா? இது 1:1 என்ற விகிதத்தில் தான் மாற்றும். ஆனால் பசுக்கள் 1:100 என்ற விகிதத்தில் மாற்றம் செய்யும்.//
http://vediceye.blogspot.com/2009_11_01_archive.html

மேற்கண்ட தகவல் உங்கள் பதிவுலிருந்து பெறப்பட்டது .. இது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை உடையது என்று எனக்கு தெரியவில்லை.

நீங்கள் சொன்னதை படித்தவுடன் இணையத்தில் தேடிய போது பசு எப்படி வெப்பமயமாதலை அதிகரிக்கிறது என்றுதான் அதிக தகவல்கள் கிடைத்தன . நீங்கள் சொன்ன தகவல் பற்றி எங்கும் கிடைக்கவில்லை .

அவை என்ன என்றால் , மாடுகளில் இருந்து வெளிப்படும் மீத்தேன் மற்றும் அம்மோனியா கிட்டத்தட்ட வாகனங்களில் இருந்து வெளிப்படும் மாசுக்கு சமாக கருதப்படுகின்றது .

இந்த விடயத்தில் உச்சகட்டமாக சில நாடுகள் பசு வளர்க்க வரி விதிக்கலாமா என்று கூட யோசித்து வருகின்றன .

மேலதிக தகவலுக்கு http://animals.howstuffworks.com/mammals/methane-cow.htm

இது போக உங்களை போன்று வேத கால வாழ்கை , பாரத கலாச்சாரம் பற்றி பேசுபவர்கள் அதிகமாக தவறான அல்லது ஆதாரமற்ற தகவல்களை கூறுவது ஏன் ?

மிக பெரிய உதாரணம் ஆனந்த விகடன் "மதன்" .

இந்த பதிவு உங்கள் இடம் இருந்து எதிர்பார்ப்பது தகுந்த ஆதாரம் அல்லது நீங்கள் சொன்ன தகவல்களை திரும்ப பெறுதல் .

உங்களுக்காக ஒரு தகவல் :

அரியானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன பசுக்களை உணவுக்காக அறுத்த சில தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து கொல்லப்பட்டனர் .. இது நமக்கு தகவல் ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ??????? ..


என்றும் அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Friday, November 6, 2009

Telecom Testing Openings

Requirement : EMS/NMS testing .
Domain Knowledge : L2/L3 , switches , routers preferable
Experience : 3+ years
Job Location : Chennai
This is an urgent requirement

Requirement : L2/L3 testing
Domain knowledge : L2/L3 protocols with TCL , EXPECT
Experience : 3+ years
Job Location : Bangalore
Please send your resume to mkvsenthilkumar@gmail.com