Monday, December 28, 2009

என் நண்பனின் காதல்

என் நண்பனின் காதல்

சந்திரன் என் அறை நண்பன் . பய ஒரு பொண்ணை காதலிச்சிட்டு இருந்தான் .. அந்த பொண்ணும் தான் இவனை காதலிச்சது ..

எப்போ பாத்தாலும் SMS அனுப்பிகிட்டு இருப்பான் .. நாங்களும் அவன் கிட்டே கேப்போம் " மச்சி எப்படிடா லவ் பண்றது அப்படின்னு" ..அவன் எதவது அடிச்சு விடுவான் . எங்க அறைல வேற யாரும் லவ் பண்ணலை.. அவன் தான் காதல் மன்னன் எங்களை பொறுத்தவரை ..

சனி ஞாயிறு லீவ்ல பய அந்த பொண்ணு கூடத்தான் சுத்திகிட்டு இருப்பான் .எங்கேடா போற அப்படின்னு கேட்ட அவள பாக்க போறேன் அப்படின்னு தான் சொல்லுவான் எங்கே போறான்னு சொல்லவே மாட்டான் ..

அப்ப ஒரு புது படம் ஒன்னு ரிலீஸ் ஆச்சு ..படம் நல்ல இருக்குனு சொன்னங்க .. வாடா நாம எல்லோரும் சேந்து நைட் show போகலாம் அப்படின்னு கேட்டோம் .. இல்லை மச்சி நான் அவ கூட matinee show போறேன் . நீங்க போயிட்டு வாங்கடா அப்படின்னு வழிஞ்சான் .

நாங்களும் "சரி நமக்கு தான் யாரும் இல்லை..அவனுக்குத்தான் ஆள் இருக்கு அப்படின்னு " வேற எதுவும் பேசலை .அவன் வழக்கம் போல பந்தாவா கிளம்பினான் .எனக்கு தாம்பரத்தில ஒரு வேலை இருக்குடா , நான் நேர படத்துக்கு வந்துடுறேன் அப்படின்னு சொல்லிட்டு நான் கிளம்பினேன் .

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் போன அங்கே நம்ம சந்திரன் நின்னுகிட்டு இருந்தான் .என்னை பாத்ததும் சந்திரன் ஒரு தூணுக்கு பின்னாலே ஒளிஞ்சான்.
நான் கொஞ்சம் குழம்பி போய் "எதுக்கு இவன் இப்போ ஒளியுறான் , ஒரு வேலை அவன் காதலி மொக்கை பிகர இருக்குமோ " அப்படின்னு யோசிச்சேன் .. அவன சுத்தி எந்த பொண்ணும் இல்லை ..நாம விடுவோமா ...


ஒளிஞ்சவனை பிடிச்சு என்னடா படத்துக்கு போரேன்னு சொல்லிட்டு இங்கே இருக்கே அப்படின்னு கேட்டேன் ..

அதுக்கு அவன் சொன்னான் " இல்லைடா ..பசங்க கிட்டே நான் சொல்லுறதை சொல்லிடதடா .. எனக்கு காதலி எல்லாம் யாரும் இல்லை .. சும்மா ஒரு "build up" கொடுக்க அப்படி சொன்னேன்" .

நான் கேட்டேன் "அப்புறம் அந்த SMS ,படத்துக்கு போறது எல்லாம் .. " . அதுவாடா நாங்க மொத்தம் 3 பேர் . எங்களுக்கு ஊர் சுத்துறதுல தான் விருப்பம் .சென்னை வந்து ஒரு build up கொடுக்கணும் அப்படின்னு முடிவு பண்ணினோம் .. அதுக்காக இந்த திட்டம் போட்டோம் . எங்க மொபைல் நம்பரை எதவது ஒரு பொண்ணு பேர்ல வச்சுக்குவோம் .எங்களுக்கு உள்ளே நாங்க sms பண்ணிக்குவோம் .. சனி ,ஞாயிறு எங்கேயாவது போய் சுத்திட்டு வீட்டுக்கு திரும்பிருவோம் " அப்படின்னு சொன்னான் .

அவன் சொல்லி முடிக்க அவன் நண்பர்கள் வந்து சேந்தாங்க .அட பாவிகளா " ஒரு டீமா தான் இது எல்லாம் பண்றீங்களா" அப்படின்னு வாயில ஒரு பெரிய வடையவே போற மாதிரி வாய புளந்து ஆச்சரியமா கேட்டேன் .

நான் சரி நீ அறைக்கு வா பேசிக்கலாம் அப்படினேன் .


அவன் என் கைய பிடிச்சிகிட்டு " மச்சான் ரூம்ல மட்டும் சொல்லிடதடா ..நீ என்ன சொல்லுறிய அதை கேக்குறான்டா " அப்படினான் ..

இப்போ நமக்கு ராஜவாழ்க்கைதான் போங்க .அடிக்கடி ஹோட்டல் விருந்து , கேக்குறப்ப எல்லாம் கடைல ஜூஸ் , இளநி வாங்கி கொடுக்கிறான் . எப்பாவது ஊருக்கு A /C ரயில் இல்லேன்னா பேருந்து .


படங்கள் : மீன்துள்ளி செந்தில்

Saturday, December 26, 2009

கரு மேகங்களின் அழுகை


ஏண்டி உம்முன்னு இருக்கே
என்று கேட்டதும் அடுத்த நொடி

கண்களில் அருவியாய் கண்ணீரை
சொரிந்து கொண்டு

அம்மா வைஞ்சுகிட்டு இருக்க என்று
என் நெஞ்சில் சாய்ந்த என்னவள்

திடீர் என்று கை ஜில்லிட்டது

என்னவள் அழுவது தாங்காது
கரு மேகங்களும் ஆழ ஆரம்பித்தன

Thursday, December 24, 2009

ஆட்டு குட்டியாக

உன் தலையில்
புல்லு கட்டுடன்

உன் கையில்
ஆட்டு குட்டியுடன்

வரப்பில் நீ
உன் ஒய்யார நடையுடன்

நான் என் மனதில்
காதலுடன்அந்த ஆட்டு குட்டியாக
ஏங்கினேன்

அதுவும் நடந்தது

என் தலையில்
புல்லு கட்டுடன்

கயிறு இல்லாத
ஆட்டு குட்டியாக

உன் முன்னால்
நான்

நீ பின்னால் உன்

ஒய்யார நடையுடன்


புகைப்படம் : மீன்துள்ளி செந்தில்

Tuesday, December 22, 2009

இளையராஜாவின் இசையும் பா மற்றும் சீனிகம்மும்

இளையராஜாவின் இசையும் பா மற்றும் சீனிகம்மும்பெரும்பாலான பதிவர்கள் பா மற்றும் சீனி கம் படங்களில் இளையராஜாவின் இசை சிறப்பாக அமைந்து உள்ளது என்று சொல்லி வருகிறார்கள்..ஒரு தீவிர இளையராஜாவின் இசை ரசிகனாக இது மறுக்கதக்கது .

இளையராஜாவின் இசையில் ARR வருகைக்கு அப்புறம் electronics instruments அதிகம் தென்பட ஆரம்பித்தன. அது அவரின் இசைக்கு ஒரு உயிரை கொடுக்கவில்லை ... ஆனால் அது இனிமையாக இருந்து இருக்கலாம் .. இது மட்டும் அல்லாமல் சில வருடங்கள் அவருக்கு அதிக படங்கள் இல்லாதது , திரை உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற விசயங்களால் அவரின் பாடக தோழர்கள் SPB , M வாசுதேவன் , ஜானகி , சுசீலா , ஜேசுதாஸ் பயன்படுத்த முடியாமல் புதிய பாடகர்களை அவர் அறிமுகபடுத்தியது போன்றவை அவரின் இசையின் பழைய இனிமையை கொடுக்க முடியவில்லை .

சேது படத்தில் இளையராஜாவின் சிறந்த இசை கொஞ்சம் சிறப்பாக அமைந்து இருந்தது ரெம்ப நாளைக்கு அப்புறம் ... அதை விட்டால் ஒன்று இரண்டு பாடல்கள் அவ்ளோ தான் . அதற்கு அப்புறம் விருமாண்டியில் கூட அவரின் இசையை கேக்க முடியவில்லை ..

இன்றும் அவரது பழைய படங்களின் பாடல்களும் , பின்னணி இசையும் அவராலே மறுபடியும் இசைக்க முடியாதவை ...

"nothing but wind " மற்றும் "how to name it " போன்ற வாத்திய தொகுப்புகள் கிட்ட அவர் வெளியிட்ட திருவாசகம் , music of messiah போன்ற தொகுப்புகள் கூட நெருங்க வில்லை .

கேட்டு பாருங்கள்

ராஜா ராஜா சோழன் நான்

தென்றல் வந்து தீண்டும் பொது

பூங்காற்று புதிதானது

அடி ஆத்தாடி

கொடியிலே மல்லிகை பூ

ஊரு விட்டு ஊரு வந்து

புத்தம் புது காலை பொன்னிற வேளை

இன்னும் பல பல

அப்புறம் சொல்லுவீர்கள் நான் சொன்னது சரிதான் என்று

Saturday, December 19, 2009

எப்படி கேட்பது அவளிடம்


செந்தில் இன்னைக்கு தான் ஒரு வழிய டீம்ல இடம் கிடைச்சு வேலை பாக்க போறான் ,, ஆமா அவன் 3 மாசமா பென்ச்ல வேலை இல்லாமல் சும்மா சுத்திகிட்டு இருந்தான் ...

வழக்கம் போல டீம்ல இவனை அறிமுகப்படித்தி வச்சாங்க. அப்புறம் அவனுக்கு கொடுத்த சீட்ல போய் உக்காந்தான் .மதிய சாப்பாடு நேரம் வந்தாச்சு .. அப்போ தான் அந்த பொண்ண கவனிச்சான் .பாத்த உடனே பயலுக்கு பிடிச்சு போச்சு .. சரி அப்படின்னு சொல்லிட்டு போய் சாப்பிட்டு விட்டு வந்தான் ..அவனுக்கு வழக்கம் போல மதிய சாப்பாடு திருப்தி இல்லை ..

பய மனசுகுள்ள ஒரு கணக்கு போட்டான் .. இந்த பொண்ணை எப்படியாவது சம்மதிக்க வச்சிட்ட பிரச்சினை இல்லை.. வாழ்க்கை அப்படியே வசந்தமா ஆயிடும் ..

இப்படியே ஒரு வாரம் போச்சு .. அவனுக்கு அந்த பொண்ணுகிட்டே தினமும் எப்படியாவது கேட்டுடணும் அப்படின்னு தோணுச்சு. ஆனா அவன் கேக்கலை .. இது தான் முதல் முறை .. ரெம்ப தயங்கினான் .மனசு பாக்கிறதுக்கு முன்னால் தவிக்கிது பாத்துட்ட தயங்குது ..அவன் என்ன பண்ணுவான் .

வெள்ளி கிழமை காலைல எந்திரிச்சதும் முடிவு பண்ணிட்டான் .. இன்னைக்கு கேட்டுற வேண்டியது தான் .எவ்ளோ நாள் தான் நினைச்சு நினைச்சு ஏங்கிகிட்டு இருக்கிறது . அப்படியே அசிங்கப்பட்டாலும் சனி ஞாயிறு லீவ்ல எல்லாம் மறந்துடும் அப்படின்னு முடிவு பண்ணினான் .

அலுவலகத்துக்கு வந்து வழக்கம் போல வேலைய பாத்தான் .. மதியம் சாப்பாடுக்கு முன்னால கூச்சத்துடன் கேட்டே விட்டான் "execuse meee . நீ வீட்டுல இருந்து கொண்டு வர மதிய சாப்பாட்டை நான் எடுத்துக்கிறேன்... . வெளிய சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு ... முடிஞ்ச இனிமேல் நீ எனக்கும் சேத்து எடுத்துட்டு வா "

அந்த பொண்ணு சிரித்து கொண்டே " சரி என்றாள் . இவன் அன்று ஆவலுடன் அவளுடன் முதன் முதலாக மதிய உணவு சாப்பிட்டான் "

Friday, December 18, 2009

கடைசி வரை எழுதப்படாத கவிதை


உன்னை பற்றி கவி எழுத
புரண்டு புரண்டு யோசித்தேன்

உன் கரு மீன் விழிகளும்
அது பேசும் மொழிகளும்

அம்பு போன்ற உன் இமைகளும்
அதன் நடுவில் பொட்டும்

பிறை போன்ற உன் நெற்றியும்
அப்பிறை மறைக்கும் கார்மேக கூந்தலும்

எப்பொழுதும் என்னை இழுக்கும்
ஒளி வீசும் உன் மூக்குத்தியும்

எப்போதும் என்னை பற்றி பேசும்
உன் கல் பதித்த கம்மலும்

ரோசாப்பூ நிற உன் உதடும்
அது பூக்கும் புன்னகையும் தான்

என் மனதில் தோன்றியதே ஒழிய
கடைசி வரை கவிதை வரவில்லை

Thursday, December 17, 2009

மழையோடு மழையாகமழையில் நனைந்து தண்ணி
சொட்டச் சொட்ட

பேருந்தில் ஏறினேன்
உற்சாகத்துடன்

வழக்கம் போல் தலை குனிந்த
தாமரையாய் என் தேவதை

காத்து இருந்து பூத்த
என் விழிகள்

புன்னகை சொரிந்தன
அவளை நோக்கி

அதிசயமாக என்னை
ஆழ ஊடுருவி

அவள் விழிகள்
என்னை நோக்கின

ஆஹா அடித்தது காதல் பரிசு
இது என் மனது

பேருந்து நிலையத்தில் அவள் அப்பன்
கிடா மீசையுடன்

பேருந்தை விட்டு இறங்கியதும்
ஓட்டம் பிடித்தேன்

அடிப்பாவி இதுக்குத்தான்
இந்த தூண்டிலா என்று

மழையோடு மழையாக
நொந்து கொண்டே

Tuesday, December 15, 2009

ஒத்தையடி பாதை


ஒத்தையடி பாதை

மண்டை காய்ந்து

தனியனாக உன் நினைவில்

போய் கொண்டு இருந்தேன்

என் வீட்டை நோக்கி

நீ கடந்து சென்றாய்

என்னை நனைத்து விட்டு

ஆமாம்

உன் தண்ணீர் குடம் ஓட்டை

Monday, December 14, 2009

குடைக்குள் மழை

மழை பெய்யப்போகிறது
குடை எடுத்து வா

என்றாள்
என் தேவதை

மழை பெய்யாமலே
நனைந்தேன்

அவள் அன்பில்மழை பெய்கிறது
குடை எடுத்து வா

என்றாள்
என் தேவதை

குடை பிடித்தும்
நனைந்தேன்

ஆம் அவள் கொஞ்சம்
குண்டுதான்


குடை எடுத்து சென்றேன்

மழையும் பெய்தது

குடை பிடித்தும் நனைந்தேன்

அடச்சே

குடையில் ஓட்டை

Sunday, December 13, 2009

ஆபீஸ் காதல்

ஆபீஸ் காதல்

ராஜ்கண்ணன் கனவுலயும் ஆப்பு வாங்கி ரெம்ப கடுப்பு ஆயிட்டான் . ஊர்க்கு போயிட்டு வந்ததால எல்லாத்தையும் மறந்து மகிழ்ச்சிய இருந்தான் .வீட்டுல ஆதித்யா சேனல்ல நகைச்சுவை நிகழ்ச்சி பாத்துகிட்டு இருந்தான் .. என்ன பண்றது அவன் நிலைமை இப்படி ஆயி போச்சு .அவன் மொபைல் சிணுங்கும் சத்தம் கேட்டது .. அது சிணுங்கியது "சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் ஒரு தேதி " .இதுல இந்த பாட்டு வேறயா நீங்க நினைக்கிறது புரியுது . மொபைல எடுத்து யார் call பண்றாங்க அப்படின்னு பாத்தான் . அவங்க அப்பா போன்ல .

எடுத்து என்ன அப்பா எப்படி இருக்கீங்க அப்படினான் .. அதுக்கு அவர் நான் நல்ல இருக்கேன் " நம்ம headmaster மாமா பொண்ணுக்கு உன் கம்பெனில வேலை கிடைச்சிருக்கு .. நீ இருக்கிற பக்கம் தான் வீடு பாத்து இருக்கார் . என்ன ஏதுன்னு போய் பாத்துக்கோ .. பையன் இல்லாத வீடு தேவையான உதவி பண்ணு" அப்படி என்றார். சரி அப்பா என்று சொன்ன ராஜ்கண்ணன் ஒரே யோசனையா இருந்தான் .

என்னடா இது மறுபடியும் ஒரு பொண்ண அப்படின்னு . அவனுக்கு சின்ன வயசில அந்த பொண்ண தெரியும் .அப்போ அந்த அளவுக்கு அழகா இருக்க மாட்டாள் ..மனசுக்கு நிம்மதியா இருந்த மாதிரி இருந்தது .


headmaster மாமா பெங்களூர் வந்தாச்சு . அவங்க வீட்டுக்கு போனான் . நல்ல மரியாதையும் அன்பும் அங்கே அவனுக்கு கிடைத்தது .. headmaster மாமா அவரது மனைவியிடம் " கண்ணனை பாரும்மா சின்ன வயசில எப்படியோ இருந்தான் . இப்போ பாரு ஆள் நல்ல அழகா இருக்கான் " அப்படி என்றார் .. அதற்கு அத்தையும் "ஆமா கண்ணா மாமா சொல்லுறது சரி தான் " என்று சொன்னங்க .

அந்த நேரம் பாத்து சிரிச்சிகிட்டே ஒரு பொண்ணு வந்துச்சு . இவன் அப்போ கூட கொஞ்சம் கூட மனசை அலைபாயாம பாத்துகிட்டான். அவனுக்கு கொஞ்சம் கட்டுப்பாடுடன் இருப்பதாக தோன்றியது . மனசுக்குள்ள சிங்கம் சிங்கம்டா அப்படின்னு நினைச்சுகிட்டான் .

அந்த பொண்ணும் இவன் கூட நல்ல பேசுச்சு ,, இவனும் நல்லாத்தான் எந்த ஒரு சலனமும் இல்லாம பேசிகிட்டு இருந்தான் ... கடல் ஏன் அமைதியாவே இருக்குனு அவனுக்குள்ள ஒரு குழப்பம் இருந்தாலும் வெளிய காட்டிக்கொள்ளவில்லை .

அந்த பொண்ணு இவன் கிட்ட ஒரு கேள்வி கேட்டுச்சு . பய கொஞ்சம் ஆடித்தான் போய்ட்டான் . அது என்ன என்றால் " யாரையாவது லவ் பண்றீங்களா" . பய மனசுக்குள்ளயே ஏற்கனவே ரெண்டு ஆப்பு வாங்கியாச்சு . கொஞ்சம் சுதாரிச்சு அப்படி எதுவும் இல்லை அப்படி என்றான். சொல்லிட்டு பேசாம இருந்து இருக்கலாம் . இப்போ தான் சும்மா இருக்கிற ஆப்பு மேல உக்கார போறம்னு தெரியாம ஒரு கேள்வி கேட்டான் " நீ யாரைவது லவ் பண்றியா" . அதுக்கு அந்த பொண்ணு "நாளைக்கு தெரியும்" அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாள் .
பய ரெம்ப குழம்பி போய்ட்டான். மனசுக்குள்ள ஒரு கணக்கு போட்டான் . வாங்கின ரெண்டு ஆப்புல ஒன்னு கனவு .. அடுத்தது நாம அந்த பொண்ணு கூட பேசினது கூட கிடையாது .. ஆனா இந்த தடவை நாம பேசி இருக்கோம் பழகி இருக்கோம் .. ஏற்கனவே வந்த கனவு கூட இப்போ நடக்கிற நிகழ்வுகளை தொடர்புபடுத்தி மறுபடியும் காதல் வானில் சிறகு அடிக்க ஆரம்பிச்சான் .

மறுநாள் ரெண்டு பேரும் பேருந்துல ஆபீஸ் போகும்போது அந்த பொண்ணு ஒரு பிரிக்காத மொபைல் ஒன்னு கொடுத்தாள் . இதை வச்சு இருங்க . நான் அப்புறமா உங்க கிட்டே பேசுறேன் அப்படின்னு.பய பொண்ணு மொபைல் கிப்ட்ல இருந்து காதல் ஆரம்பிக்க போகுது அப்படின்னு துள்ளி குதிக்காத குறைக்கு நடந்து போனான் .

மதியம் அந்த பொண்ணுகிட்டே இருந்து call வந்துச்சு .மனசுக்குள்ள ரொமான்ஸ் பொங்க போனை எடுத்தான் .அந்த பொண்ணு "மொபைல வெளியே எடுங்க. உங்க பக்கத்து சீட்ல என் கல்லூரி தோழனும் நான் காதலிக்கிற பையன் இருப்பான். அவன்கிட்ட போனை கொடுங்க " அப்படி என்றாள் .

பய tension ஆகி பல்லை நர நர என்று கடித்தான் . அது அந்த பொண்ணுக்கு கேட்டுச்சோ இல்லையோ அந்த போனுக்கு கேட்டுச்சு .. அந்த போன் சிரித்தது . என்ன என்று அந்த பொண்ணு பார்த்தாள் .அவள் காதலன் இடம் இருந்து phone call" . ஒரு நிமிடம் என்று ராஜ்கண்ணன் தொடர்பை துண்டித்தாள் . இவனுக்கோ இவன் நரம்பையே துண்டிச்ச மாதிரி இருந்துச்சு .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Saturday, December 12, 2009

காதல் கனவு

ஓர்குட்ல profile பாத்துகிட்டு இருக்கும் ராஜ்கண்ணன் விடுமுறைக்கு ஊருக்கு போறதுக்காக மடிவாலா போய் பேருந்துல உக்காந்துட்டான் . நல்ல அசதி .. பேருந்துல இவன் எரிச்சலை கிளப்பிற மாதிரி காதல் பாட்டுகள போட்டுக்கிட்டு இருந்தாங்க . பய ஏற்கனவே ஆப்பு வாங்குனதுல வெறுத்து போய் இருந்தான் .

பேருந்துல ஒரு அழகான அமைதியான பொண்ணு ஏறிச்சு . பய பாத்துட்டு பாக்காத மாதிரி திரும்பிகிட்டான் . அந்த பொண்ணு நேர ராஜ்கண்ணன் பக்கத்துல வந்து உக்காந்துச்சு ..

பய இருக்கிற இம்சை போதாது அப்படின்னு நினைச்சுகிட்டு சன்னல் பக்கம் வேடிக்கை பாக்க ஆரம்பிச்சான் . அப்படியும் பயலுக்கு ஒரு பயம் அந்த பொண்ணு ஏதும் இவன்கிட்ட பேசி காதல் கீதல்னு மனசு மறுபடியும் லோல்படனுமா அப்படின்னு காதுல ear phone எடுத்து மாட்டி பாட்டுல முங்கிட்டான் .

ஒரு ரெண்டு பாட்டு கேட்டு இருப்பான் . "EXCUSE ME" அப்படின்னு தேன்ல குழைச்ச மாதிரி ஒரு குரல் . என்னனு பாத்த அந்த பொண்ணு .. பய பம்மிகிட்டே என்ன என்றான் .
பேருந்துல பக்கத்து சீட் பேருந்து வேற 3 மணி நேரம் போகணும் .. கொஞ்சம் உங்க கூட பேசிகிட்டு வரலாமா என்று தன் மீன் விழிகளை உருட்டி கேட்டாள்.

ராஜ்கண்ணன் விலகி போனாலும் வேலில போற ஓணான் வேட்டிக்குள்ள வந்து விழுதே அப்படினுட்டு .. பேச்சை ஆரம்பிச்சான் .. அந்த பொண்ணுக்கு ராஜ்கண்ணனை ரெம்ப பிடிச்சு போச்சு .. mobile number கூட பரிமாறிகிட்டங்கா. ஊருக்கு போயும் பேசினார்கள் . பெங்களூர் வந்தும் பேசினார்கள் ..ஒரு நாள் அந்த பொண்ணுகிட்டே இருந்து ராஜ்கண்ணன் மொபைலுக்கு ஒரு SMS வந்தது . பய என்னனு பாத்தான். அந்த பொண்ணு தன் காதலை வெளிப்படுத்தி இருந்தாள் .. பய நமக்கும் ஒரு காதல் வாழ்கை வர போகுதுன்னு பெருமையா நினைச்சிகிட்டு வானத்துல மிதந்துகிட்டு இருந்தான் ..

சனி ஞாயிறு விடுமுறை வந்தது . ஊருக்கு அந்த பொண்ணுடன் கிளம்பினான் .பேருந்திலேயே காதல் மொழி பேசினார்கள் .இந்த பய புதுசா லவ் பண்றதால கைவசம் இருந்த காதல் மொக்கைகள கொஞ்சம் அவுத்து விட்டான் .. அதுல அந்த பொண்ணு கடுப்பாகி சண்டை போட்டுகிட்ட வேற சீட் தேடி போக பய முதல் நாளை இப்படியே இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முழிக்க .....

பேருந்து ஓட்டுனர் ஒரு "sudden break" போட்டார் . பய எந்திருச்சு பாத்த பக்கத்து சீட்ல யாருமே இல்லை .....எல்லாம் கனவு ..பேருந்து "electronics city" கூட தாண்டலை ..

கனவுல கூட ஆப்பா அப்படின்னு காத்து போன பலூன் மாதிரி வெறுத்து போய் அப்படியே மறுபடியும் தூங்கிட்டான் .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

orkut காதல்

ராஜ்கண்ணன் ஒரு மென்பொருள் வல்லுநர் .இவன் எப்போவுமே ரெம்ப நல்ல டிரெஸ்ஸிங் பண்ணுவான்..பயலுக்கு ரெம்ப நாளா காதலிக்க ஆசை . ரெம்ப காஞ்சு போன பய .

அன்னைக்கு வழக்கம்போல அலுவலகத்துக்கு தாமதமாக சென்றான். இவன் எப்போவுமே லேட்டா போறதுக்கு ஒரு காரணம் இருக்கு.அது என்ன அப்படின "SHIRT IN" பண்றதுக்கே 30 நிமிடம் ஆகும்.ஆபீஸ்ல ஒரு அழகான அமைதியான பொண்ணு ஒன்னு அவன் சீட் பக்கத்துல உக்கார்ந்து இருந்தது . பய அப்படியே புல்லரிச்சு போய்ட்டான் நம்ம பக்கத்து சீட்ல ஒரு பொண்ண அப்படின்னு .
அந்த பொண்ணு வேற ரெம்ப அமைதியா இருந்ததால பய ரொமான்ஸ் (மேட்டுக்குடி கௌண்டமணி மாதிரி ) விட ஆரம்பிச்சிட்டான் .பய அதுக்கு அப்புறம் ஒரே இளையராஜா பாட்டு தான் .. அப்படியே அதை ஆபீஸ்ல இருக்கும் பொது வேணுமின்னே என்றே சத்தம் வச்சு கேக்குறதுன்னு சொல்லி அந்த பொண்ணுக்கு நூல் விட்டான் . அந்த பொண்ணு வழக்கம் போல அமைதியவே இருந்தது .

இந்த பய புள்ளைக்கு ஒன்னும் புரியலை . சரி நம்ம தமிழ் பாட்டு கேக்குரதல பதில் இல்லையோ அப்படின்னு யோசிச்சு இங்கிலீஷ் பாட்டு கேக்க ஆரம்பிச்சான் ... அதுலயும் ஒரே காதல் பாட்டுதான் .

இப்படியே ரெண்டு நாள் போச்சு ... அந்த பொண்ணுகிட்டே இருந்து எந்த பதிலும் காணோம் . சனி ஞாயிறு விடுமுறை ..

பய ஒரு மார்க்கமாகவே இருந்தான் .. அது வரைக்கு படமே பாக்காத பய சனி ஞாயிறு TV இல் போட்ட "காதல் மன்னனையும் அலைகள் ஒய்வதில்லையும் " பாத்து காதல் சுதி ஏறி போய் இருந்தான் .திங்கள் கிழமை எப்படியாவது அந்த பொண்ணு கிட்டே பேசிடனும் அப்படின்னு ஒரு முடிவுல இருந்தேன் .

திங்கள் கிழமை வந்தவுடனே அந்த பொண்ணு கூப்பிடுச்சு . பயலுக்கு அப்படியே வேர்த்துடுச்சு .

கண்ணன் அப்படின்னு கூப்பிட்டதும் பயலுக்கு அப்படியே வானத்தில பறக்கிற மாதிரி இருந்துச்சு .

அந்த பொண்ணு தன்னை அறிமுகபடித்திட்டு " நான் உங்க டீமா lead பண்ண போறேன் .. இந்த டீம்ல நீங்க தான் senior . எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க " அப்படின்னு சொன்னாள் .

அன்னையோட காதல் முயற்சியை விட்டவன் தான் இப்ப "ஒர்குட்ல profile" பார்க்கிறதோட சரி ..

பின்குறிப்பு : இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் கற்பனையே .இந்த கதை யார் வாழ்க்கையிலாவது நடந்து இருந்தால் கம்பெனி பொறுப்பு அல்ல

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

கூட்டத்திலே தனி ஆள்

கூட்டத்திலே தனி ஆள்காற்று முழுதும் உன் வாசம்

கண்கள் முழுதும் உன் பிம்பம்

நெஞ்சம் முழுதும் உன் காதல்

ஊர் முழுதும் மக்கள் கூட்டம்

நான் மட்டும் தனி ஆளாக

நாம் நினைவுகளில்

எங்கு இருக்கிறாய் என்று தெரியவில்லை

எப்படி இருக்கிறாய் என்று தெரியவில்லை

என் எப்பொழுதும் உன் நினைவாக என்று புரியவில்லை

இதை என் மனம் உணர வழி இல்லை


காதலுடன்

மீன்துள்ளி செந்தில்

Wednesday, December 9, 2009

தெலுங்கானா உதயம்

தெலுங்கானா உதயம்

தெலுங்கானா தற்போதைய ஆந்திரா மாநிலத்தின் 10௦ மாவட்டங்களையும்(வாரங்கல், அடிலாபாத் , கம்மம் , மகாபுப்நகர் , நல்கொண்டா , ரங்காரெட்டி , கரிம்நகர் ,நிசாமாபாத் , மேடக் , ஹைதராபாத் ) கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளையும் உள்ளடக்கிய பகுதி ஆகும் . தெலுங்கானா வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் நிசாம் வசம் இருந்தது . விடுதலைக்கு பின்னர் நிசாம் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார்.சர்தார் படேலின் முயற்சியால் தெலுங்கானா பகுதிகள் இந்தியாவுடன் இணைந்தன .நிசாம் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து விட்டார் .1956 இல் தெலுங்கானா பகுதிகள் ஆந்திராவுடன் சேர்த்து ஆந்திரா மாநிலம் அமையும்போது ஒரு gentleman ஒப்பந்தம் தெலுங்கானா தலைவர்களுக்கும் ஆந்திரா மாநில தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்டது .

இங்கு ஆந்திரா மாநிலம் என்பது வெள்ளையர்களின் ஆட்சின் கீழ் இருந்த பகுதிகள் .

அந்த ஒப்பந்தத்தின் முக்கியமானவை "முதலமைச்சர் பதவி ஒரு பகுதிக்கு கொடுக்கபட்டால் , அடுத்த பகுதிக்கு துணை முதலமைச்சர் கொடுக்க வேண்டும் . அமைச்சரவை முதல் எல்லா இடங்களிலும் தெலுங்கானா பகுதிக்கு ஒதுக்கீடு வேண்டும் " என்பதே .

தெலுங்கானா தலைவர்கள் இவ்வாறு கேட்டதுக்கு ஒரு காரணம் இருந்தது . அது என்ன என்றால் "வெள்ளையர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி கல்வியில் சிறந்து விளங்கியது . தெலுங்கானா பகுதி விவசாயத்தில் சிறந்து விளங்கியது அது போக சில மாவட்டங்களில் பெரிதாக எதுவும் கிடையாது "

1969 இயக்கம் :

1956 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் எதுவும் நிறைவேற்றாத காரணத்தினால் 1969 இல் கலவரம் தெலுங்கானா பகுதிகளில் வெடித்தது . இந்த போராட்டத்தில் சுமார் 360 மாணவர்கள் தன்னுயிரை இழந்தனர் .

இதன் காரணமாக தெலுங்கானா மக்கள் இயக்கம் காங்கிரசில் இருந்து விலக்கப்பட்ட M சென்னா ரெட்டி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது .அடுத்து வந்த தேர்தலில் இந்த கட்சி ஓரளவு வெற்றியும் பெற்றது . 1971 இல் , போராட்டத்த கைவிட்டு இந்த கட்சியின் தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கே பிழைப்பு தேடி சென்றனர் .

2004 இயக்கம் :

1998 இல் பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முயற்சில் இறங்கியது . அப்போது அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்தால் அதில் இருந்து பின்வாங்கியது .. இதனால் மறுபடியும் தெலுங்கானா இயக்கம் வலுபெற்றது . இதன் காரணமாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி (TRS) கட்சி சந்திரசேகர ராவ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது . சந்திரசேகர ராவ் அவர்களின் தெலுங்கானா கோரிக்கையை ஆதரிக்க மறுத்து அவரை தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து நீக்கியது .

2004 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் TRS கூட்டணி அமைத்து போட்டி இட்டது . காங்கிரஸ் தனிமாநில கோரிக்கைக்கு அதரவு தெரிவித்தது . தேர்தலில் வென்றதும் வழக்கம் போல் காங்கிரஸ் தன நிஜ முகத்தை காட்டி தெலுங்கானா மக்களை ஏமாற்றியது . இதனால் மத்திய கூட்டணி அமைச்சரவையில் இருந்து TRS விலகியது . TRS சந்திரசேகர ராவ் நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்தார் . இடைதேர்தலில் கரிம்நகரில் போட்டி இட்ட அவர் பெரிய வித்யாசத்தில் மறுபடியும் வென்றார் .

2008 இல் மறுபடியும் TRS தனது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய செய்து காங்கிரஸ் அரசிற்கு ஒரு அழுத்தம் உண்டாக்கியது . ஆனால் அதற்கு பின் நடைபெற்ற இடைதேர்தலில் TRS பெரிதாக வெற்றி பெறவில்லை .

2009 இல் நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து TRS பெரிதாக வெல்ல முடியவில்லை .

10 நாட்களுக்கு முன்னர் திடீர் என்று சந்திரசேகர ராவ் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார் . ஆரம்பத்தில் இது சும்மாதான் என்று இருந்த காங்கிரஸ் , ஒரு கட்டத்தில் இவரின் மன உறுதியையும் , மக்களின் எழுச்சியையும் பார்த்து பயந்தது .

இது தவிர சந்திரசேகர ராவ் உடல்நிலை மோசமாக சென்று கொண்டு இருந்தது . இந்த சமயத்தில் அனைத்து கட்சியில் உள்ள தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர்களும் தெலுங்கானா கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்க காங்கிரஸ் நிலைமை பரிதாபமானது .

இந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது மாணவர்கள் போராட்டம் வேறு அரசாங்கத்தை பயமுறுத்தியது .. பள்ளி கல்லூரிகள் 15 நாள் விடுமுறை விடப்பட்டன தெலுங்கானா பகுதிகளில் . இந்நிலையில் தெலுங்கானா பகுதியை சேர்ந்த மாணவர்கள் சட்டமன்றத்தை முற்றுகை செய்ய போவதாக அறிவித்தனர் அவர்களின் கோரிக்கை "சட்ட மன்றத்தில் தனி தெலுங்கான மசோதாவை நிறைவேற்றுவது "

தெலுங்கானா முழுக்க நிலைமை மோசமானதால் அவசர அவசரமாக ஆலோசித்த மத்திய அரசு ஒரு வழியாக தனி தெலுங்கானாவை ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு அமைப்பதாக அறிவித்து உள்ளது .


சந்திரசேகர ராவ் அவர்களின் உறுதியான உண்ணாவிரதத்தால் தெலுங்கானா பிறந்தது .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Saturday, December 5, 2009

மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள் செய்யும் அநியாயம்

மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள் செய்யும் அநியாயம்

இந்த ஏர்டெல் மட்டும் இல்லை . எல்லா மொபைல் சர்வீஸ் வழங்கும் நிறுவனங்களும் இப்போது யாருக்காவது கால் பண்ணி * ஐ அமுக்கினால் அவர்களின் காலர் பாட்டு நமக்கு அப்படியே மாறுகிற மாதிரி வச்சு இருக்காங்க...

இந்த முறை ரெம்பவும் மோசமான முறை .. இப்போ எல்லாம் குழந்தைகள் மொபைல வச்சு விளையாடுறது சாதாரணம் .. அப்படி சின்ன பசங்க மொபைல வச்சி விளையாடும்போது சும்மா நான்கு நம்பர் கால் பண்ணி * பட்டன் அமுக்கிட்ட அவ்ளோ தான் 100 ரூபாய்க்கு மேல எடுத்துரானுங்க .

இது மட்டும் இல்லை கிரிக்கெட் ஸ்கோர் அது இது அப்படின்னு சொல்லி ஏகப்பட்ட காசை புடுங்கிகிறாங்க (பெரிய புடிங்கிகள் தான் இவனுங்க )

என்னோட நண்பன் ரெண்டு தடவை என் மொபைல எடுத்து காலர் சாங் வச்சு விட்டு 100 ரூபாய்க்கு ஆப்பு வச்சுட்டான் ..

இவங்களுக்கு இப்படி கொடுக்கிறதை விட இல்லாதவங்களுக்கு கொடுத்த மன திருப்தியாவது இருக்கும் ..

TRAI ல complaint பண்ணலாம் என்றோ அல்லது அதிருப்தியை சொல்லலாம் என்றால் அதுவும் கிடையாது .

இந்த புடிங்கிகள் என்னைக்கு தான் திருந்துவாங்களோ

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

ரேணிகுண்டா - வாழ்த்துக்கள் பன்னீர்செல்வம்

ரேணிகுண்டா - வாழ்த்துக்கள் பன்னீர்செல்வம்

தமிழில் ரெம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கும் ஒரு நல்ல திரைப்படம்

தேவ கோட்டையில் தன் பெற்றோர் கொலைக்கு பழி வாங்கும் முயற்சியில் தோற்று சிறைச்சாலைக்கு சென்று அங்கு அறிமுகமாகும் நான்கு நண்பர்களுடன் தன் பெற்றோர் கொலைக்கு பழி தீர்த்து அங்கு இருந்து தப்பி ரேணிகுண்டா சென்று அங்கு காதல் வயப்பட்டு நண்பர்களையும் தன் உயிரையும் இழக்கும் ஒரு வாலிபனின் (ஜான் ) வாழ்க்கை தான் இந்த படத்தின் கதை . இந்த சாதாரண கதையில் திரைக்கதையும் வசனமும் காட்சி அமைப்புகளுடன் சேர்ந்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றன

இந்த படத்தின் சிறப்பம்சங்கள்

படத்தின் முக்கியமான காட்சிகளில் மழை வருவது போன்ற காட்சி அமைப்பு

சிறைச்சாலையில் முதன் முதலாக அடாவடியாக அறிமுகமாகும் நால்வர் கூட்டணி (குறிப்பாக டப்பா )

சிறைச்சாலையில் ஜான் பெற்றோர்களை கொன்றவனை கொள்ள முடிவு எடுக்கும்போது பின்னால் தோன்றும் மின்னல் (இயக்குனரின் காட்சி அமைப்பு திறமையை காட்டுகிறது )

தான் எப்படி இந்த அடிதடி தொழிலுக்கு வந்தோம் என்று நிஷாந்த் சொல்லும் காட்சி சமுதாயமும் குற்றவாளிகளை உருவாக்குவதில் பங்கு வகிப்பதை இயக்குனர் பதிவு செய்ய உதவி உள்ளது

முதன் முதலாக ஜான் கொலை செய்ய தயங்கும் காட்சியும் அதற்கு அவன் நண்பர்கள் கடைபிடிக்கும் ஒரு விதமான கிடுக்கு பிடியும் அருமை

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து TTR ஐ கலாய்க்கும் காட்சி சூப்பர்

ரேணிகுண்டா வந்து ஜான் மற்றும் டப்பா காதல் செய்யும் விதம் அருமை அதிலும் குறிப்பாக டப்பாவின் வாசனைகள் மற்றும் நடிப்பு அருமை .

இந்த காதல் காட்சிகளில் டப்பாவின் கெட் அப்பு உண்மையில கலக்கல் ..டப்பா ஜானிடம் யாரை ஜான் காதலிக்கிறான் என்று கேக்கும் காட்சியும் , டப்பா தன் நண்பர்களிடம் "என் ஆள இன்னும் நீங்க பாக்கல" என்று சொல்லும் காட்சியும் கலக்கல்

ரேணிகுண்டாவில் இந்த ஐந்து பேர் கூட்டணி செய்யும் கொலையும் அதற்கு இயக்குனர் தேர்வு செய்த இடமும் அருமை . எப்படி கொலை செய்தோம் என்று இந்த கூட்டணி விவரிக்கும் காட்சி மிரட்டல்

ஜானின் காதலியாக வரும் பெண்ணிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் தான் பால் முகம் மாற தோற்றத்தால் மனசில் நிக்கிறார்.

இந்த பெண்ணின் அக்காவாக வரும் பெண்ணின் நடிப்பு அருமை . அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரு குறும்படம் .

சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும் விதம் மிக அருமை

இந்த படத்தில் இயக்குனருக்கு பெரிதும் உதவியவர்கள் ஒளிப்பதிவாளர் சக்தியும் வசனகர்த்தா சிங்கம்புலியும் தான் ...

இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்தும் முகம் சுளிக்கும் விதத்தில் எதுவும் இல்லை

இறுதி காட்சியில் ஜான் கொல்லபடுவதாக சொல்லுவது ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது . இது தான் இந்த படத்தின் வெற்றியோ என்னவோ ? (இதை ஏற்கனவே ஒரு பதிவர் எழுதி இருந்தார் . அவர் சொன்னது சரி தான் என்று தோன்றுகிறது )

படம் முடிஞ்சதும் எல்லோர்கிட்டயும் ஒரு அமைதி திரை அரங்கை விட்டு வெளியே வரும் வரை ........

மறுபடியும் வாழ்த்துகள் பன்னீர்செல்வம் மற்றும் குழு .. மீண்டும் ஒரு நல்ல படத்தை எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து

அன்புடன்

மீன்துள்ளி செந்தில்

Friday, December 4, 2009

இளையராஜாவின் இசை

இளையராஜாவின் இசை

என் வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு விடயங்களில் ஒன்று "இளையராஜாவின் இசை "
நான் சிறு வயதில் பெரிதாக திரை பாடல்கள் கேட்டது கிடையாது . கல்லூரி காலகட்டங்களில் தான் திரை பாடல்கள் அதிகம் கேக்க ஆரம்பிச்சேன் .

அந்த கால கட்டங்களில் எனக்கு அறிமுகமான இசைதான் இந்த இளையராஜாவின் இசை .

ஊருக்கு போறப்ப எல்லாம் ஒரு கேசெட் வாங்குவேன் .. இப்படியே கொஞ்ச நாள் கேட்டு கிட்டு இருந்தேன் ..

அப்புறம் தான் இணையத்தில் தேடி பாட்டுகளை கேக்க ஆரம்பித்தேன் . ஒரு ஒரு பாடலும் ஏதாவது ஒன்றை எனக்கு ஞாபகபடுத்தும் .

வா வா அன்பே - அக்னி நட்சத்திரம் - இந்த பாட்டு கேக்கும்போது ஏதோ ஒரு மலை பகுதில பயணம் செயுற மாதிரி தோணும் ( செந்தாழம்பூ பாட்டு மாதிரி )

அந்தி மழை பொழிகிறது - இதுவும் இதுக்கு வா வா அன்பே பாட்டு மாதிரி தான்

புத்தம் புது காலை பொன்னிற வேலை - இந்த பாட்டு கேக்கும் போது பெங்களூர் மடிவால மார்க்கெட் காலைல எப்படி இருக்குமோ அந்த மாதிரி ஒரு பீல் இருக்கும்

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் - இந்த பாட்டு கேக்கும் போது பெங்களூர் ல இருந்து ஓசூர் பயணம் செய்யிறமாதிரி தோணும்

என்ன பாட்டு பாட என்ன தாளம் போட - இந்த பாட்டின் இசை மாட்டு வண்டில போற மாதிரி தான் இருக்கும் .. ஆனா எனக்கு வானம் என்ற பெரிய போர்வைல முளைச்சு இருக்கிற வெள்ளி நட்சத்திரங்களை மாட்டு வண்டில படுத்துகிட்டு பாத்துகிட்டே ஒரு கிராமத்தை நோக்கி போற மாதிரியே இருக்கும் .

இந்த பாட்டு எந்த படம்னு யாரவது சொன்ன நல்ல இருக்கும் .. டவுன்லோட் லிங்க் கொடுத்த ரெம்ப மகிழ்ச்சி

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி - இந்த பாட்டு கேக்கும் போது காவேரி ஆறு அப்படியே மனசுல வந்து போகும்

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது - அப்படியே ஆத்தங்கரைல ஒரு டூயட் பாடுற மாதிரியே தோணும்

மேகம் கருக்குது மழை வர போகுது வீசி அடிக்குது காத்து - இந்த பாட்டை கேக்கும்போது ஒரு கிராமத்து விலக்குல இருந்து ஊருக்குள்ள போகும்போது அப்படியே நடக்கிற நிறைய விடயங்கள் வருமே அது எல்லாம் தோணும்

அமுதே தமிழே அழகிய மொழியே எனது உயிரே - இந்த பாட்டு கேக்கும் போது ரெம்ப மகிழ்ச்சிய இருக்கும்

ராஜா ராஜா சோழன் நான் - இந்த பாட்ட கேக்கும் போது நமக்கு ஒரு காதலி இருந்து அவ கூட அப்படியே பேசிகிட்டே யாரும் இல்லாத ரெண்டு பக்கமும் மரம் இருக்கிற சாலைல போகணுமுன்னு தோணும் (காதலிக்கு எங்கே போறது .. அதனால பாட்டை மட்டும் கேட்டுகிறது )

வானம் கீழே வந்தால் என்ன பூமி மேலே போனால் என்ன - இந்த பாட்டு கேக்கும் போது எதுக்குமே கவலை கொள்ளாமல் மகிழ்ச்சிய இருக்கணும்னு தோணும்

நிறைய பாடல்கள் இருக்கு இப்போதைக்கு நினைவுக்கு வரலை .

இது தவிர நிறைய இளையராஜா பாடல்கள் பிடிக்கும் . குறிப்பாக அவருடைய வாத்திய தொகுப்புகளான "nothing but wind" , "how to name it " ரெம்ப பிடிக்கும் .

இந்த வாத்திய தொகுப்புகளை எனது நண்பன் ஸ்ரீராம் எனக்கு அறிமுகபடுத்தினான் .

ரெம்ப சோர்வா இருந்த இந்த வாத்திய தொகுப்புகளை கேட்ட மனசு அப்படியே லேசா ஆகிடும்

இளையராஜாவின் இசை எனக்கு பெரிய துணையாக வாழ்கை முழுவுதும் வந்து கொண்டு இருக்கிறது .


இளையராஜாவின் இசையை கேட்டு தான் எனக்கு கிராமிய இசை மீது ஒரு பிடிப்பு வந்தது .. அது தவிர வாத்தியங்களையும் ரசிக்க வைத்தது இந்த இசை குறிப்பாக "நாதஸ்வரம் , கிடார் மற்றும் வயலின்" . இளையராஜா பாடல்களை வரும் உப இசை ரெம்ப பிடிக்கும் .சில சமயங்களில் பாட்டை விட்டு விட்டு அதை கவனிப்பேன் .

இளையராஜாவின் இசையை இந்த உலகில் இருந்து அழித்து விட்டால் நான் இசையை கேட்பது ரெம்ப குறைஞ்சுடும்

என்ன புதிய பாடல்களில் எல்லாம் இளையராஜாவின் இசையில் ஒரு உயிர் இருப்பதாக எனக்கு தோணவில்லை அது பா வாக இருந்தாலும் நந்தலலாவாக இருந்தாலும் .

பழைய பாடல்கள்ள வர்றா மாதிரி இசையில் உயிர் இல்லை .


இந்த மாதிரி உங்களுக்கு பிடித்தவற்றையும் பகிர்ந்து கொள்ளவும்

அன்புடன்

மீன்துள்ளி செந்தில்

Thursday, December 3, 2009

குல தெய்வங்கள்

குல தெய்வங்கள்

பொதுவாக நம்மில் பலர் வெளியூரில் பிழைப்பை பார்ப்பவர்கள் .
சிறு வயதில குல தெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று இருப்போம் .
இப்போ அது எல்லாம் ரெம்ப அரிதான ஒரு விஷயமா ஆயிடுச்சு .
ஆனா இந்த குல தெய்வங்கள் யார்னு பார்த்த ஒரு வகைல நம்ம முன்னோர்கள் தான் .
அதனால ஒரு குடும்பத்தை எடுத்து கிட்ட பெரும்பாலும் குல தெய்வ பெயர்கள தான் இருக்கும் .

யார் யார் குல தெய்வங்களாக ஆக்கப்பட்டனர் .

1 குடும்ப அல்லது ஊர் தலைவர்கள்
2 குடும்பத்திற்காக அல்லது ஊருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் (பெரும்பாலான பெண் தெய்வங்கள்)

குடும்ப அல்லது ஊர் தலைவர்கள் :
பொதுவாக பல தலைமுறைக்கு முன்னால பிழைப்பை தேடி ஊரு ஊராக செல்லும்போது எல்லாத்தையும் வழி நடத்தி செல்லும் தலைவன் பெரும்பாலான சமயங்களில் சாமி ஆக்கப்பட்டு உள்ளனர் .

இது தவிர இப்படி பிழைப்பு தேடி செல்லும் போது அடிக்கலாம் கொடுத்து காப்பற்றியவர்கள் சாமி ஆக்கப்பட்டு உள்ளனர் .


குடும்பத்திற்காக அல்லது ஊருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் (பெரும்பாலான பெண் தெய்வங்கள்) :

அந்த காலத்துல வந்த சண்டைகள ஊருக்காகவோ குடும்பதுககவோ சண்டை போட்டு மரணம் அடைந்தவர்கள் அல்லது வாழ்க்கைய இழந்தவர்கள் சாமி ஆக்கப்பட்டனர் . இது தவிர வீட்டில் உள்ள பெண்களை கவர்ந்து செல்ல எதிரிகளோ அல்லது கொள்ளை கூட்டமோ வரும்போது அவர்களை காப்பத்த முடியாத நிலையில் அவர்களை குடும்பத்தினரை உயிர் நீக்க செய்து விடுவர் . இந்த மாதிரி உயிர் விட்ட பெண்கள் குடும்பத்தின் பெண் தெய்வங்களாக அக்கப்பட்டர்கள் .

இந்த பெண் தெய்வங்கள் பற்றி நாட்டுப்புற கலைகளில் அதிக குறிப்புகள் உள்ளன .


இதன் தற்போதைய வெளிப்பாடுதான் ஈழத்தின் "மாவீரர் இல்லங்கள்" .

இப்பேற்பட்ட தியாக செம்மல்களை நாம் வணங்கி அவர்களின் ஆசிர்வாதங்களை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வருடம் ஒரு முறையாவது இவர்களை நேரில் சென்று தொழுவோம் .

தமிழகத்தின் புகழ் பெற்ற உணவகங்கள் மற்றும் உணவுகள்

தமிழகத்தின் புகழ் பெற்ற உணவகங்கள் மற்றும் உணவுகள்

திருநெல்வேலி - இருட்டு கடை அல்வா
கோவில்பட்டி - கடலை மிட்டாய்
கழுகுமலை - கருப்பட்டி மிட்டாய்
ஆலங்குளம் - முட்டை கோஸ் ( இனிப்பு வகையை சார்ந்தது ).
கடம்பூர் - போளி
உவரி - மஸ்கொத் அல்வா
பிரானூர் பார்டர் - புரோட்டா
சங்கரன்கோவில் - சுல்தான் பிரியாணி
ஸ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா
சாத்தூர் - சேவு மற்றும் வெள்ளரி காய்
கிருஷ்ணன் கோவில் - கொய்யாபழம்
மதுரை - அம்மா மெஸ் கோனார் மெஸ்
திண்டுக்கல் - தலப்பா கட்டு பிரியாணி , வேணு பிரியாணி
தஞ்சாவூர் - அசோக அல்வா
கீரனூர் - முட்டை புரோட்டா (புதுக்கோட்டை ரோட்ல ஒரு கடை )
மணப்பாறை - முறுக்கு
ஆம்பூர் - பிரியாணி (ஆனா எனக்கு சங்கரன்கோவில் பிரியாணி அளவுக்கு இல்லைன்னு தோணுது )
நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சதை பகிர்ந்து கொள்ளவும் ..
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்