Sunday, December 13, 2009

ஆபீஸ் காதல்

ஆபீஸ் காதல்

ராஜ்கண்ணன் கனவுலயும் ஆப்பு வாங்கி ரெம்ப கடுப்பு ஆயிட்டான் . ஊர்க்கு போயிட்டு வந்ததால எல்லாத்தையும் மறந்து மகிழ்ச்சிய இருந்தான் .வீட்டுல ஆதித்யா சேனல்ல நகைச்சுவை நிகழ்ச்சி பாத்துகிட்டு இருந்தான் .. என்ன பண்றது அவன் நிலைமை இப்படி ஆயி போச்சு .அவன் மொபைல் சிணுங்கும் சத்தம் கேட்டது .. அது சிணுங்கியது "சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் ஒரு தேதி " .இதுல இந்த பாட்டு வேறயா நீங்க நினைக்கிறது புரியுது . மொபைல எடுத்து யார் call பண்றாங்க அப்படின்னு பாத்தான் . அவங்க அப்பா போன்ல .

எடுத்து என்ன அப்பா எப்படி இருக்கீங்க அப்படினான் .. அதுக்கு அவர் நான் நல்ல இருக்கேன் " நம்ம headmaster மாமா பொண்ணுக்கு உன் கம்பெனில வேலை கிடைச்சிருக்கு .. நீ இருக்கிற பக்கம் தான் வீடு பாத்து இருக்கார் . என்ன ஏதுன்னு போய் பாத்துக்கோ .. பையன் இல்லாத வீடு தேவையான உதவி பண்ணு" அப்படி என்றார். சரி அப்பா என்று சொன்ன ராஜ்கண்ணன் ஒரே யோசனையா இருந்தான் .

என்னடா இது மறுபடியும் ஒரு பொண்ண அப்படின்னு . அவனுக்கு சின்ன வயசில அந்த பொண்ண தெரியும் .அப்போ அந்த அளவுக்கு அழகா இருக்க மாட்டாள் ..மனசுக்கு நிம்மதியா இருந்த மாதிரி இருந்தது .


headmaster மாமா பெங்களூர் வந்தாச்சு . அவங்க வீட்டுக்கு போனான் . நல்ல மரியாதையும் அன்பும் அங்கே அவனுக்கு கிடைத்தது .. headmaster மாமா அவரது மனைவியிடம் " கண்ணனை பாரும்மா சின்ன வயசில எப்படியோ இருந்தான் . இப்போ பாரு ஆள் நல்ல அழகா இருக்கான் " அப்படி என்றார் .. அதற்கு அத்தையும் "ஆமா கண்ணா மாமா சொல்லுறது சரி தான் " என்று சொன்னங்க .

அந்த நேரம் பாத்து சிரிச்சிகிட்டே ஒரு பொண்ணு வந்துச்சு . இவன் அப்போ கூட கொஞ்சம் கூட மனசை அலைபாயாம பாத்துகிட்டான். அவனுக்கு கொஞ்சம் கட்டுப்பாடுடன் இருப்பதாக தோன்றியது . மனசுக்குள்ள சிங்கம் சிங்கம்டா அப்படின்னு நினைச்சுகிட்டான் .

அந்த பொண்ணும் இவன் கூட நல்ல பேசுச்சு ,, இவனும் நல்லாத்தான் எந்த ஒரு சலனமும் இல்லாம பேசிகிட்டு இருந்தான் ... கடல் ஏன் அமைதியாவே இருக்குனு அவனுக்குள்ள ஒரு குழப்பம் இருந்தாலும் வெளிய காட்டிக்கொள்ளவில்லை .

அந்த பொண்ணு இவன் கிட்ட ஒரு கேள்வி கேட்டுச்சு . பய கொஞ்சம் ஆடித்தான் போய்ட்டான் . அது என்ன என்றால் " யாரையாவது லவ் பண்றீங்களா" . பய மனசுக்குள்ளயே ஏற்கனவே ரெண்டு ஆப்பு வாங்கியாச்சு . கொஞ்சம் சுதாரிச்சு அப்படி எதுவும் இல்லை அப்படி என்றான். சொல்லிட்டு பேசாம இருந்து இருக்கலாம் . இப்போ தான் சும்மா இருக்கிற ஆப்பு மேல உக்கார போறம்னு தெரியாம ஒரு கேள்வி கேட்டான் " நீ யாரைவது லவ் பண்றியா" . அதுக்கு அந்த பொண்ணு "நாளைக்கு தெரியும்" அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாள் .
பய ரெம்ப குழம்பி போய்ட்டான். மனசுக்குள்ள ஒரு கணக்கு போட்டான் . வாங்கின ரெண்டு ஆப்புல ஒன்னு கனவு .. அடுத்தது நாம அந்த பொண்ணு கூட பேசினது கூட கிடையாது .. ஆனா இந்த தடவை நாம பேசி இருக்கோம் பழகி இருக்கோம் .. ஏற்கனவே வந்த கனவு கூட இப்போ நடக்கிற நிகழ்வுகளை தொடர்புபடுத்தி மறுபடியும் காதல் வானில் சிறகு அடிக்க ஆரம்பிச்சான் .

மறுநாள் ரெண்டு பேரும் பேருந்துல ஆபீஸ் போகும்போது அந்த பொண்ணு ஒரு பிரிக்காத மொபைல் ஒன்னு கொடுத்தாள் . இதை வச்சு இருங்க . நான் அப்புறமா உங்க கிட்டே பேசுறேன் அப்படின்னு.பய பொண்ணு மொபைல் கிப்ட்ல இருந்து காதல் ஆரம்பிக்க போகுது அப்படின்னு துள்ளி குதிக்காத குறைக்கு நடந்து போனான் .

மதியம் அந்த பொண்ணுகிட்டே இருந்து call வந்துச்சு .மனசுக்குள்ள ரொமான்ஸ் பொங்க போனை எடுத்தான் .அந்த பொண்ணு "மொபைல வெளியே எடுங்க. உங்க பக்கத்து சீட்ல என் கல்லூரி தோழனும் நான் காதலிக்கிற பையன் இருப்பான். அவன்கிட்ட போனை கொடுங்க " அப்படி என்றாள் .

பய tension ஆகி பல்லை நர நர என்று கடித்தான் . அது அந்த பொண்ணுக்கு கேட்டுச்சோ இல்லையோ அந்த போனுக்கு கேட்டுச்சு .. அந்த போன் சிரித்தது . என்ன என்று அந்த பொண்ணு பார்த்தாள் .அவள் காதலன் இடம் இருந்து phone call" . ஒரு நிமிடம் என்று ராஜ்கண்ணன் தொடர்பை துண்டித்தாள் . இவனுக்கோ இவன் நரம்பையே துண்டிச்ச மாதிரி இருந்துச்சு .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

12 comments:

 1. ராஜ்கண்ணன் நாளுக்கு நாள் நெகிழ வைக்கிறான்! நல்ல எழுத்து நடை.. தொடரட்டும்...

  ReplyDelete
 2. ஒரு நிமிடம் என்று ராஜ்கண்ணன் தொடர்பை துண்டித்தாள் . இவனுக்கோ இவன் நரம்பையே துண்டிச்ச மாதிரி இருந்துச்சு .என்னமா உணர்ச்சிகளை வார்த்தையில் கண்டு புடிச்சி எழுதுறீங்க. நல்லா இருக்கு.

  ReplyDelete
 3. நன்றி ஜான் மற்றும் சித்ரா

  ReplyDelete
 4. அழகான கதை, நல்ல நடை...................

  நேரம் இருந்தா என்னோட பதிவை பாருங்களேன்..........

  http://sangkavi.blogspot.com/

  ReplyDelete
 5. ராஜ்கண்ணனின் கதைகளை படிச்சதும் ரொம்ப பீலிங்க்ஸ் ஆகிடுச்சு பாவமுங்க அவரு ...... சீக்கிரம் வத்தலோ சொத்த்தலோணு இல்லாம அவரு பீலிங்க்சுக்கு இணையா ஒரு நல்ல பொன்னை சேர்த்து வையுங்க

  ReplyDelete
 6. ராஜ்கண்ணனின் கதைகளை படிச்சதும் ரொம்ப பீலிங்க்ஸ் ஆகிடுச்சு பாவமுங்க அவரு ...... சீக்கிரம் வத்தலோ சொத்த்தலோணு இல்லாம அவரு பீலிங்க்சுக்கு இணையா ஒரு நல்ல பொன்னை சேர்த்து வையுங்க

  ReplyDelete
 7. @aazhimazhai

  //சீக்கிரம் வத்தலோ சொத்த்தலோணு இல்லாம அவரு பீலிங்க்சுக்கு இணையா ஒரு நல்ல பொன்னை சேர்த்து வையுங்க
  //

  உங்களுக்கு செந்திலை பார்த்தா எப்படி தெரியுது??

  ReplyDelete
 8. ஆழிமழை .. ராஜ்கண்ணன் அவருக்கு பின்னால ரொமான்ஸ் காத்துக்கிட்டு இருக்கு ..

  ReplyDelete
 9. /ஜெட்லி said...
  @aazhimazhai

  //சீக்கிரம் வத்தலோ சொத்த்தலோணு இல்லாம அவரு பீலிங்க்சுக்கு இணையா ஒரு நல்ல பொன்னை சேர்த்து வையுங்க
  //

  உங்களுக்கு செந்திலை பார்த்தா எப்படி தெரியுது?? //

  ஜெட்லி நான் அவன் இல்லைங்கோ

  ReplyDelete
 10. Sendhil,

  Romba nalla kadhai poittu irukku.. unakulla innoruvana !!!

  ReplyDelete
 11. உங்களோட இந்த சீரிஸ்ல எல்லாமே நல்லா இருக்குங்க.... கலக்கல் கதைகள்....

  ReplyDelete
 12. நன்றி ராம் நீங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு .. நெல்லையில் எங்கே ..

  ReplyDelete