Friday, December 18, 2009

கடைசி வரை எழுதப்படாத கவிதை


உன்னை பற்றி கவி எழுத
புரண்டு புரண்டு யோசித்தேன்

உன் கரு மீன் விழிகளும்
அது பேசும் மொழிகளும்

அம்பு போன்ற உன் இமைகளும்
அதன் நடுவில் பொட்டும்

பிறை போன்ற உன் நெற்றியும்
அப்பிறை மறைக்கும் கார்மேக கூந்தலும்

எப்பொழுதும் என்னை இழுக்கும்
ஒளி வீசும் உன் மூக்குத்தியும்

எப்போதும் என்னை பற்றி பேசும்
உன் கல் பதித்த கம்மலும்

ரோசாப்பூ நிற உன் உதடும்
அது பூக்கும் புன்னகையும் தான்

என் மனதில் தோன்றியதே ஒழிய
கடைசி வரை கவிதை வரவில்லை

14 comments:

  1. //எப்பொழுதும் என்னை இழுக்கும்
    ஒளி வீசும் உன் மூக்குத்தியும் //

    மூக்குத்தி இருக்கும் பெண்களின் அழகே தனி.........
    அழகான வர்ணணை....

    ReplyDelete
  2. ஜோதில ஐக்கியமாயிட்டீங்க போல... வாழ்த்துக்கள்...சூப்பர்.

    ReplyDelete
  3. நன்றி சித்ரா , சங்கவி ,பலா பட்டறை

    @பலா பட்டறை

    அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது

    ReplyDelete
  4. நண்பா.. உன்னோட ரூட் மாறுதே.. சிக்கிட்டியா??? கவிதை சும்மா நச்சுனு இருக்கு!

    ReplyDelete
  5. //நண்பா.. உன்னோட ரூட் மாறுதே.. சிக்கிட்டியா??? கவிதை சும்மா நச்சுனு இருக்கு//

    அய்யய்யோ நான் இத சொல்லலீங்க காதல் கவிதைகள் எழுதற ஜோதில (எங்கள மாதிரி :)) ) அத சொன்னேன்.. தவறில்லையே ??

    ReplyDelete
  6. ////நண்பா.. உன்னோட ரூட் மாறுதே.. சிக்கிட்டியா??? கவிதை சும்மா நச்சுனு இருக்கு//

    அய்யய்யோ நான் இத சொல்லலீங்க காதல் கவிதைகள் எழுதற ஜோதில (எங்கள மாதிரி :)) ) அத சொன்னேன்.. தவறில்லையே ??
    //

    தப்பே இல்லை ..

    எல்லோரு சொல்லி வச்ச மாதிரி ஒரே கேள்விய கேக்குறீங்களா .. அதன் கொஞ்சம் குழம்பிட்டேன் ..

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. Kavithai sollitu .. kaviythai varlanu sonn unga comedy enakku pidichuruku.. kavithai arumai

    ReplyDelete
  9. idhuvaraikkum illennalum ... inimey neenga try panna; kanippa chikkumnu unga kavithai solludhu

    ReplyDelete
  10. நன்றி சாத்தப்பன் , பிரபா , ஸ்ரீதர் ,கமலேஷ் ..

    //idhuvaraikkum illennalum ... inimey neenga try panna; kanippa chikkumnu unga kavithai solludhu//

    இப்படி எல்லாம் பேசப்படாது

    ReplyDelete