Friday, January 22, 2010

சுமை தாங்கி கற்களும் திண்ணைகளும்

பண்டைய காலத்தில் வாணிகம் என்பது மிகவும் கடினமான உடல் உழைப்பு தேவைப்பட்ட தொழில் . இன்று இருந்த போக்குவரத்து வசதிகள் அன்று கிடையாது . பெரும் வணிகர்கள் குதிரை , மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வந்தனர் . சிறு வணிகர்கள் தலையில் பொருட்களை சுமந்து கொண்டு நடை பயணமாகவே செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்தனர் . இப்படி நடை பயணம் செல்லும் வணிகர்களுக்கு , பொது மக்களுக்காக தமிழ் மண்ணில் மக்களால் உதவும் வகையில் அமைக்கப்பட்டதுதான் இந்த சுமைதாங்கி கல் .

சுமை தாங்கி கல் கீழே உள்ள படத்தில் இருப்பது போல் செங்குத்தாக தரையில் இருந்து 4 அல்லது 5 அடி இடைவெளியில் நிற்குமாறு ஊனப்படுகிறது .நிற்கும் ரெண்டு கற்களுக்கு மேல தரைக்கு இணையாக ஒரு கல் வைக்கப்படுகிறது .இதன் பயன் என்ன என்று பாத்தால் நடை பயணிகள் ஒரு ஊரில்இருந்து மற்றும் ஒரு ஊருக்கு செல்லும்போது எந்த நேரத்தில் சென்று அடைவோம் என்று தெரியாது . இந்த மாதிரி நேரங்களில் இடையில் ஓய்வு எடுப்பதற்காக இந்த சுமை தாங்கி கற்கள் உதவுகின்றன . யாருடைய உதவியும் இல்லாமல் இந்த சுமை தாங்கி கல்லின் மீது சுமைகள் இறக்கி வைத்து ஓய்வு எடுத்து விட்டு பின்பு சுமைகள் எடுத்து கொண்டு பயணத்தை தொடரலாம் .


திண்ணை கிராமத்து வீடுகளில் வீட்டின் முன்னால் உள்ள திண்டு போன்ற அமைப்பு ஆகும் .இது கிட்டத்தட்ட ஒரு ஆள் முதல் பல பேர் உறங்க வசதி உள்ள ஒரு திண்டு ஆகும் .


இதுவும் முன் பின் தெரியாத நடை பயணிகளுக்கு ஓய்வு எடுப்பதற்காக கட்டப்பட்டது . ரெம்ப தூரம் பயணம் செய்யும் மக்களுக்கு அசதி ஏற்பட்டால் அவர்கள் இந்த திண்ணைகளில் அந்த வீட்டுக்காரரிடம் அனுமதி பெற்று ஓய்வு எடுத்து செல்லுவார்கள் .


இப்படி மற்றவர்களை பற்றியும் யோசித்து அவர்களுக்கான வசதிகள் செய்து தந்து வாழ்ந்த நாம் சமூகம் இன்று மனதிற்கும் உடமைகளுக்கும் சுவர் எழுப்பி குறுகி போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறது

10 comments:

 1. இப்படி மற்றவர்களை பற்றியும் யோசித்து அவர்களுக்கான வசதிகள் செய்து தந்து வாழ்ந்த நாம் சமூகம் இன்று மனதிற்கும் உடமைகளுக்கும் சுவர் எழுப்பி குறுகி போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறது .........இடையில் என்ன ஆச்சு, நம் மக்களுக்கு? நல்லா தானே இருந்துருக்காங்க. யோசிக்க வேண்டிய விஷயம்.

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு...தெரியாத விஷயம்...
  ஆனா ரெண்டு வாட்டி
  ரெண்டு பாரா வந்தா மாதிரி இருக்கு
  செக் பண்ணுங்க

  ReplyDelete
 3. எவ்வளவோ நல்ல விஷயங்களை நம்ம மறந்துட்டோம் - இதுவும் ஒரு சான்று.. நல்ல ஒரு பதிவு மீன்ஸ்..

  ReplyDelete
 4. அப்படியே..சத்திரங்கள் பற்றியும் எழுதி இருக்கலாமே:)
  நல்லா இருந்துது மீன்ஸ்..:)

  ReplyDelete
 5. இதுவரை அறியாத பதிவு....

  ReplyDelete
 6. மீன்ஸ், வித்தியாசமா யோசித்து மனதினுள் உள்ள உனது ஏக்கத்தை அழகா தவழ விட்டுருக்கிறாய். நல்லாருந்துச்சு - படமும்.

  //...இடையில் என்ன ஆச்சு, நம் மக்களுக்கு? நல்லா தானே இருந்துருக்காங்க. யோசிக்க வேண்டிய விஷயம்...//

  என்னாகியிருக்குங்கிறீங்க, அ) மக்கட் தொகை பெருக்கம் அதனையொட்டிய போட்டி, பொறாமை பிழைத்துக்கிடக்கவென... ஆ) தன் இயல்பு இழத்தல் ஏனெனில் ஆழமற்ற ஒரு வாழ்க்கை வாழும் பொழுது அங்கே mimicking happens :)

  ReplyDelete
 7. மனத்தளவிலும் சரி..உடலளவிலும்..
  நாம் நம் முன்னோர்களை விட மிகமிகக்
  குறுகி விட்டோம்!!

  ReplyDelete
 8. பலா சத்திரங்கள் பற்றி எழுதி இருக்கலாம் .. எனக்கு ஞாபகம் வரலை

  தெக்கி அண்ணே எனக்கு திண்ணை வச்சு வீடு கட்டனும் அப்படின்னு ஒரு ஆசை ...திண்ணைல உக்காந்து பேசுறதே ஒரு தனி சுகம் அண்ணே. அம்மா ஊர்ல இருக்கும்போது தண்ணி எடுக்க போய்டுவாங்க .. நான் திண்ணைல உக்காந்து காத்து இருப்பேன் அம்மாவுக்காக .

  ஆமா அரண்யநிவாஸ் . கேட்ட உலகம் சுருங்கிடுச்சு .. இது நாகரீக உலகம் அப்படின்னு சொல்லுவோம் .

  வருகைக்கு நன்றி சித்ரா , ஜெட்லி , சங்கவி

  ReplyDelete
 9. இன்று அறிவியலால் வந்த சிதைவு தான் இப்படி மற்றவர்களை பற்றியும் யோசித்து அவர்களுக்கான வசதிகள் செய்து தந்து வாழ்ந்த நம் சமூகம் இன்று மனதிற்கும் உடமைகளுக்கும் சுவர் எழுப்பி குறுகி போய் வாழ்கிறது,,,

  ReplyDelete