Monday, May 3, 2010

காற்றில் கரையும் ஓவியங்கள்


எப்பொழுதாவது போன் பேசும்போதும்
gtalk ஓர்குட்டில் உன் பெயர் பார்க்கும்போதும்

காற்றில் அலையும் சிறகு
ஓவியம் வரைவது போல்

உன்னை காணாத கண்கள்
உன் முகம் வரைகின்றன

எத்தனை முறை வரைந்தும்
காற்றிலேயே கரைக்கின்றேன் உன் முகத்தை

முகம் மறந்தவன் நானா
முகம் மறைத்தவன் தான் நீயா

என் கண்கள் வரைந்து கொண்டே
தேடும் உன் முகத்தை

உன்னை காணும் வரை
உன்னை காணும் வரை




சந்திக்காமலே என் எண்ணங்களை ஆக்கிரமிக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் .....

11 comments:

  1. மீனு,

    இதை அப்படியே காதலிக்கு அட்ரெஸ் பண்ற மாதிரி இருந்திருந்தா இன்னும் கவிஜா தூக்கலா இருக்கும். நண்பர்களை இந்த அளவிற்கு நேசிக்கிறதில நீயும் ஓர் ஆளுதான்யா... :)

    //காற்றில் அலையும் சிறகு
    ஓவியம் வரைவது போல் //

    ரொம்ப அழகியலோட இருக்கு அந்த வரிகள்... பிடிச்சிருக்கு, பிடிச்சிருக்கு!!

    ReplyDelete
  2. //இதை அப்படியே காதலிக்கு அட்ரெஸ் பண்ற மாதிரி இருந்திருந்தா இன்னும் கவிஜா தூக்கலா இருக்கும்//

    ரீப்பிட்டு

    ReplyDelete
  3. எங்கே பெண்கள் ஊருக்கு போனதும் எங்கள மறந்துருவீகளோன்னு நினைச்சேன்...கவிதையிலே பதில் சொல்லிட்டீங்க...

    ReplyDelete
  4. மயில் ஒரு பொண்ணை பத்தி எழுதினதுதான் . சரி போனா போகட்டும் அப்படின்னு நண்பர்கள் அப்படின்னு மாத்திட்டேன் . பசங்களும் எங்களை பத்தி எழுதலை அப்படின்னு feelingss . .அதான் கொஞ்சம் கவிதையா மாத்திவிட்டேன் ..

    நீங்க ரெம்ப feel பண்ணாதீங்க

    ReplyDelete
  5. Welcome back, friend! அடிக்கடி எழுதுங்க...... அருமையாக இருக்குதுங்க.

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்கு தலைவரே.

    ReplyDelete
  7. அருமையாக இருக்குதுங்க.

    ReplyDelete
  8. மீன் - நீ பெங்களூர் போனதுல இருந்து ஒரு மாதிரி தான் திரியுற... வெளியூர் போகலாம்னாலும் வரதில்லை.. அதற்கான அர்த்தம் உன் கவிதையில் தெரியுது.. ரொம்ப நல்லா வந்திருக்கு.. (எங்க கூட கன்னியாகுமரி வராத வருத்தமா??)

    ReplyDelete
  9. super machi...mannikkavum tamil theriyathu :)

    ReplyDelete