Monday, June 21, 2010

காற்றில் கரையும் நாட்பொழுது

சன்னல் ஓரத்தில் கசியும் சூரிய ஒளி
சன்னலோர மரத்தில் காதல் மொழி பேசும் குருவிகள்
இரவில் பெய்த மழையில் இலையுடன் மலர்ந்த
காதலை வலியுடன் வழுக்கி செல்லும் மழை துளிகள்


வீட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து
காற்றில் கலந்து வரும் இளையராஜாவின் இசை
இவற்றை எல்லாம் ஒரு நொடியில் மறக்க செய்து
பசி தூண்டும் இட்லி கொப்பரை விசில்
கண்ணாடி சன்னலில் தன்னைத் தான் கொத்துகிறோம்
என்று தெரியாமலே கொத்தும் மைனா
அனுமதி இன்றி சன்னலோர இலை ஊடுருவி
என் உடலிலும் படுக்கையிலும் படம் வரையும் சூரிய ஒளி

பின்பகல் நித்திரை களைந்து எட்டி பார்த்தால்
வானத்திற்கு வண்ணம் பூசி அழகாக்கும் சூரியன்
பகல் நேர இரை தேடல் முடிந்து கூட்டமாக
வீடு தேடி செல்லும் பறவை கூட்டங்கள்
ஒற்றை தட்டலில் ஒளிர்ந்து ஊரையே
அழகாக்கும் தெரு விளக்குகள்
தெரு விளக்கில் கோபம் கொண்டு மேற்கு தொடர்ச்சியில்
வேகமாக ஒளியத் துடிக்கும் சூரியன்
காதலனை பார்க்க வரும் முழு நிலவு
பொறாமையில் நிலவை மறைக்கும் வெண் மேகங்கள்
மேகத்தையும் நிலவையும் கண்ணடித்து
ரசிக்கும் வானில் மிதக்கும் நட்சத்திரங்கள்

இரவையே இசை மயமாக்கும் எங்கிருந்தோ
வரும் பூச்சிகள் எழுப்பும் ஒலி
இப்படி நிரம்பி வழியும் தருணங்களுடன்
காற்றில் கரையும் நாட்பொழுது

16 comments:

  1. சில வரிகளில், ஒரு நாள் பொழுதை, அழகான வார்த்தைகளில் வர்ணித்திருப்பது அழகு.

    ReplyDelete
  2. //காதலனை பார்க்க வரும் முழு நிலவு
    பொறாமையில் நிலவை மறைக்கும் வெண் மேகங்கள்
    மேகத்தையும் நிலவையும் கண்ணடித்து
    ரசிக்கும் வானில் மிதக்கும் நட்சத்திரங்கள//

    நல்லா வந்திருக்கு மீன்.. என்னமோ மிஸ் பண்ற போல...

    ReplyDelete
  3. "பகல் நேர இரை தேடல் முடிந்து கூட்டமாக
    வீடு தேடி செல்லும் பறவை கூட்டங்கள்" Remembering the kalugumalai school days!! Nalla irukku thambi! keep it up!

    ReplyDelete
  4. Kaatril kaaraiyum natpoludhu! this suites well for the content!!

    ReplyDelete
  5. செந்தில் தாமிரபரணி ஆற்றில குளிச்சாவே இந்த மாதிரி எண்ணங்கள் வந்து சரளமா வந்து விழுமோ!

    அருமையா இருக்குப்போய், சரம் கோத்த மாதிரி கலக்கல்... :)

    ReplyDelete
  6. அழகாய் ஒரு கவிதை....... அருமைங்க.....!!!

    ரொம்ப நாளா ஆளையே காணோமே.... அடிக்கடி எழுதுங்க.....

    ReplyDelete
  7. அழகா இருக்குங்க இந்த கவிதை.

    ReplyDelete
  8. //பொறாமையில் நிலவை மறைக்கும் வெண் மேகங்கள்
    மேகத்தையும் நிலவையும் கண்ணடித்து
    ரசிக்கும் வானில் மிதக்கும் நட்சத்திரங்கள் //

    ரசிச்சு, ரசிச்சு எழுதி இருக்கறீங்க....

    ReplyDelete
  9. //கண்ணாடி சன்னலில் தன்னைத் தான் கொத்துகிறோம்
    என்று தெரியாமலே கொத்தும் மைனா //

    அழகு வரிகள்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. காற்றில் கரையும் நாட்பொழுது....

    அழகு.

    ReplyDelete
  11. நல்ல கவிதை.

    ரசிச்சு எழுதியிருக்கீங்க.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. Time irunthal enathu valaikku varavum....

    http://www.vayalaan.blogspot.com

    ReplyDelete
  13. hai...

    enathu valaipoovirkku ungalai varaverkirean...

    http://www.vayalaan.blogspot.com

    ReplyDelete
  14. hai...

    enathu valaipoovirkku ungalai varaverkirean...

    http://www.vayalaan.blogspot.com

    ReplyDelete
  15. அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
    ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
    இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
    உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    ReplyDelete