நிலவுக்கு என்ன வெட்கமோ
அடிக்கடி மேகத்தில் ஒளிகிறது
மேகத்திற்கு என்ன படபடப்போ
காற்றோடு காற்றாக ஓடுகிறது
காற்றுக்கு என்ன பரபரப்போ
மரத்தை வேகமாக தழுவி நகர்கிறது
மரத்திற்கு என்ன பயமோ
பீதியில் உறைந்து நிற்கிறது
பசிக்கு என்ன உக்கிரமோ
என் வயிறு கபகபன்னு எரிகிறது
யாருக்கு என்ன குறையோ
எங்கிருந்தோ முனகல் சத்தம்
என்ன என்று நிதானித்தால்
எதுவும் புலப்படவில்லை
மனதின் சோகங்களும்
மாலையின் மழை துளிகளும்
கண்ணீராக சொரிந்தன
மரத்தின் அசையா இலைகளில் இருந்து
என்ன ஆச்சு என் இப்படி
என்றேன் மரத்திடம்
மரம் சொன்னது
நாளை என்னை வெட்ட போறாங்க
ஏதோ புதுசா பாலம் கட்டப் போறங்களாம்
நிசப்தத்துடன் வார்த்தை இன்றி நான்
நிலவுக்கு என்ன வெட்கமோ
ReplyDeleteஅடிக்கடி மேகத்தில் ஒளிகிறது
மேகத்திற்கு என்ன படபடப்போ
காற்றோடு காற்றாக ஓடுகிறது
.....கவிதையில் அழகும் ஆதங்கமும் தெரிகிறது. வாழ்த்துக்கள்!
அழகான கவிதை...அழகான வரிகள்...
ReplyDelete// என்னை வெட்ட போறாங்க
ReplyDeleteஏதோ புதுசா பாலம் கட்டப் போறங்களாம்
நிசப்தத்துடன் வார்த்தை இன்றி நான் //
நல்ல கவிதை நண்பரே..!
என்ன செய்ய பாலம் கட்ட மட்டுமா மரம் வெட்டுகிறார்கள்?
எப்ப அரசியல் கூட்டம் நடந்தாலும் மரங்கள் வெட்டத்தானே படுகின்றன.
உங்கள் நியாயமான ஆதங்கம் கவிதையூடே இழையோடுகின்றது.
ReplyDelete