Saturday, October 29, 2016

அரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்


சென்ற  வாரம்  சனிக்கிழமை  அன்று  காலை விசாகப்பட்டணம்   ரயில்  நிலையத்தில் இருந்து  சட்டிஸ்கர்  மாநிலம் தண்டேவாடா  மாவட்டத்தில் உள்ள  kirandul செல்லும்  பயணிகள்  ரயிலில்  பயணம்  தொடங்கியது  . சனிக்கிழமை  என்பதால்  ரயிலில்  சுற்றுலா  பயணிகள்  கூட்டம்
அதிகம் இருந்தது. நிற்பதற்குத்தான்  இடம் கிடைத்தது. ரயில்  செல்லும் இடம்  எல்லாம்  இருபுறமும் செழிப்பாக  இருந்தது. நெல்  அதிக  அளவில் பயிரிடப்பட்டு  இருந்தது. ரயில் kottavalasa  junction அடைந்ததும்  உட்கார  இடம்  கிடைத்தது .


kottavalasa  junction  முதல்  kirandul வரை  ரயில்  பாதை  இந்தியாவின்  இதயம்  என்று  சொல்லப்படும்  தண்டகாருண்ய  காடுகளில்  அமைக்கப்பட்டு  உள்ளது.
இந்த  ரயில்  பாதை  அமைய  ஒரே  ஒரு காரணம் kirandul  பகுதியில்  ஜப்பான்  பேராசிரியர் Euemera கண்டுபிடித்த  இரும்பு  தாதுவளம் படிமங்கள்தான். kirandul  பகுதியில்  கிடைக்கும்  இரும்பு  தாது  அதனுடைய  தரத்தாலும் கந்தகம்  (sulphur ) அற்ற  தன்மையாலும்  சந்தையில்  மிகவும்  புகழ்  பெற்றது. 445 km நீளம்  கொண்ட மின்மயமாக்கப்பட்ட  இந்த  ரயில்  பாதை  வருடத்திற்கு  3000 கோடிகள்  அளவுக்கு கிழக்கு  கடற்கரை  ரயில்வே  (ECOR ) மண்டலத்தில்  உள்ள  waltair  பிரிவுக்கு (division ) வருமானத்தை  அள்ளி  தருகிறது .இந்த  ரயில்  பாதையானது  58 tunnels , 85 பெரிய  பாலங்களையும்  உள்ளடக்கியது  .

kottavalasa  junction தாண்டியதும்  ரயில் மலை ஏற ஆரம்பித்தது . மேலே  செல்ல  செல்ல tunnels  வரிசை  வரிசையாக  வர  பயணிகள்  தங்கள்  மகிழ்ச்சியை  விசில் அடித்தும்  சத்தம்  போட்டும்  வெளிப்படுத்தினர் . இருபுறமும்  இயற்கை  எழில்  கொஞ்சும்  மலைப்  பிரதேசம் . அங்கங்கே  சில  வீடுகள்  அதை  சுற்றி  விவசாயம்  நடக்கின்றது .. ரயில்  பாதையில் இருந்து  அந்த வீடுகள்  மிக  பள்ளத்தில்  இருப்பதால்  மிகவும்  அழகாக  இருந்தன. அதே  வேளையில் நகரங்களை  ஒப்பிடுகையில்  மிகவும்  குறைந்த  வசதிகளுடன்  வாழ்கின்றார்கள் . நகரங்களில்  உள்ள  பல வசதிகள் மனிதனுக்கு  தேவை  இல்லையோ  என்று  ஒரு  கணம்  தோன்றியது . அதிகமாக  யோசிக்காமல்  சன்னல் வழியாக வேடிக்கை  பார்க்க தொடங்கினேன் .. மின்சார  ரயில்  என்பதை  வேகமும்  மிதமாக  இருந்தது . பக்கத்தில்  இருப்பவர்களும் மகிழ்ச்சியில்  இயற்கை  அழகை  தங்கள்  mobile phone  camera  கொண்டு முடிந்த வரை  சேகரித்து  கொண்டு  வந்தனர் . அவர்களிடம்  எனக்கு  தெரிந்த  தெலுங்கில்  பேச  ஆரம்பித்தேன் .. அவர்கள்  விசாகப்பட்டணத்தில்  ஒரு  அரசு நிறுவனத்தில்  வேலை செய்தவர்களும்  செய்பவர்களுமாய் இருந்தனர். தாங்கள்   3 நாட்கள் பயணமாக  ஒடிசா  மாநிலம்  jegadalpur  சுற்றுலா  செல்வதாகவும்  அங்கு சில  அருவிகளும்  வன  சரணாலயமும்  இருப்பதாக  சொன்னார்கள் .. எங்கள் கூட  பேசியவர்கள்  சாப்பிட  ஆரம்பித்தனர் . அருகில் இருந்த எங்கோ  சொல்லும்  ஒரு  பழங்குடி  இனத்தை  சேர்ந்த  ஒருவரிடம்  என்ன  மொழி  தெரியும் என்று கேட்டார் . அதற்கு  அந்த  பழங்குடி  சிரித்தார்  ஏதோ சொல்லி .. எனக்கு என்ன சொன்னார் என்று  புரியவில்லை .. அருகில் இருந்தவரிடம்  கேட்டான் என்ன  சொன்னார்  என்று  அதற்கு அவர்  எனக்கும்  புரியவில்லை . இந்த  பழங்குடி  மக்கள்  அவர்கள்  பேசும்  மொழி மட்டும்  அறிந்தவர்கள் . மிகவும் நல்லவர்கள்  யாரை பார்த்தாலும்  புன்னகையுடன்  வரவேற்பவர்கள் . முன்பின்  தெரியாதவர்களுக்கும்  உதவும்  மனப்பான்மை  கொண்டவர்கள்  என்று சொன்னார். நான்  சரி என்று மண்டையை  ஆட்டி  ஆமோதித்தேன் .


 ரயில்  அது  தன்  பாதையில்  தனக்கு  தேவையான  மின்சாரத்தை  உறிஞ்சி எந்த கவலையும் இன்று  தன்  பயணிகளின்  கவலையும்  மறக்க  செய்து  சென்று கொண்டு  இருந்தது . நாங்கள் அரக்கு  ரயில்  நிலையத்தில் இறங்குவதாக  திட்டமிட்டு  இருந்தோம் .. அருகில்  இருந்தவரிடம்  எங்கு எல்லாம்  போகலாம்  என்று கேட்டபொழுது  அவர் அரக்கு  ரயில்  நிலையத்திற்கு  முந்திய  ரயில்நிலையத்தில்  இறங்கி   borra  caves  என்று  ஒரு  மிகப்பெரிய  குகை  இருப்பதாகவும்  நீங்கள்  முதலில்  அங்கு  செல்லுங்கள்  அதன்  பின்பு  நீங்கள்  அங்கு  இருந்து  பேருந்தில்  அரக்கு  செல்லலாம்  என்று  சொன்னார் .சரி என்று சொல்லிவிட்டு  borra  caves ரயில்  நிலையம்  வந்ததும்  சொல்லுங்கள்  என்று  சொல்லிவிட்டு  ஏதோ ஏதோ பேசிக்கொண்டு இருந்தோம்.



borra  caves ரயில் நிலையம்  வந்தது. ரயில் பயணிகளில்  கிட்டத்தட்ட  பாதிப்  பேர்  இறங்கி விட்டனர். அங்கு இறங்கியதும்  பொறுமையாக  செல்லலாம்  என்று வெளியே  வந்தோம். வெளியே வந்து பார்த்தால்  அந்த சிறு  ரயில்  நிலையத்தின்  முன்பு  குறைந்தது  30 கார்களும்  15 ஆட்டோக்களும்  சுற்றுலா  பயணிகளுக்காக  காத்து இருந்தன. அங்கு இருந்த  சிலர்  ஒரு ஆளுக்கு  நான்கு ஐந்து  இடங்களை சுற்றிக்  காட்டுவதாகவும்  அதன்  பின்பு அரக்கு  ரயில்  நிலையத்திலோ  அல்லது  பேருந்து  நிலையத்திலோ  இறக்கி  விடுவதாக  சொல்லி  பயணிகளை  ஈர்க்க  முயன்று  கொண்டு  இருந்தனர் . நாங்களோ  அதை  எல்லாம்  பொருட்படுத்தாமல்  வெளியே  சென்று என்னதான்  இருக்கிறது  என்று  பார்க்கலாம்  என்று  நெருக்கமாக்கி  நிறுத்தி  வைக்கப்பட்டு  இருந்த  வாகனங்களை  தாண்டி  நடக்க  ஆரம்பித்தோம் ..வெளியே வந்தால்  எங்களுக்கும்  துணையாக  சில பயணிகள்  நடந்து  கொண்டு இருந்தனர். குகைக்கு  சொல்லும்  சாலை  அருகே  நெருங்கிய  போது அங்கு சுத்தமான சிறு   நீரோடையில் நீர்  சலசலத்து  சென்றது  யாரடா  இவர்கள்  இங்கு  என்ன செய்கிறார்கள்  என்று  . அவர்கள் சலசலத்தது  கூட  அறியாமல்  குகை நோக்கி  நடந்தோம். அங்கு  போகின்ற  வழியில்  சில  கடைகளில்  மூங்கில்களுக்குள்  கோழி  இறைச்சியை  திணித்து  பின்பு  அதை  விறகில்  காட்டி  விற்பனை  செய்து  கொண்டு  இருந்தனர். நாங்கள் எவ்ளோ என்று கேட்ட பொழுது  100 ரூபாய்  என்றனர். கேட்டுவிட்டு  குகை  நோக்கி நடந்தோம்.



குகைக்கு  செல்வதற்கு  முன்பு  நுழைவுக்கட்டணம்  வாங்கினோம்  வயது  வந்தவர்களுக்கு  60 ரூபாயும்  செல்  போனுக்கு  25 ரூபாயும்  வசூலிக்கின்றனர். செல்  போனுக்கு  நுழைவுச்சீட்டு  வாங்கவில்லை என்று  கண்டுபிடித்தால்  500 ரூபாய்  அபராதம்  என்று  எழுதி இருந்ததால்  அனைவரும் செல்  போனுக்கும்  தவறாது   நுழைவுச்சீட்டு  வாங்கிக்கொண்டு  இருந்தனர் .நுழைவுச்சீட்டை  காண்பித்து  உள்ளே படிகள்  கீழ்  நோக்கி சென்று கொண்டு  இருந்தன .நடக்க  ஆரம்பித்தோம் . 10 படிகள்  இறங்கி  இருப்போம்  மிகவும் பள்ளத்தில்  நாங்கள்  பார்த்த கொஞ்சம்  நீர்  ஓடிக்கொண்டு  இருந்த ஆறு  என்னை  கண்டு  கொள்ளாமல்  போகக்கூடாது  என்று  எங்களை  ஈர்த்தது .


 சில  நிமிடங்கள்  நின்று  இருந்தோம்  .. கூட்டம்  அதிகம்  வர  ஆரம்பித்ததால்  மற்றவர்களுக்கு  தொந்தரவாக  இருக்கும் என்று  நடக்க  ஆரம்பித்தோம். குகை  வந்தது.

மிகவும் பிரமாண்டமான  200 மீட்டர்  நீளமுள்ள  இயற்கையில் அமையப்பெற்ற  குகை . ஆந்திர  சுற்றுலா  கழகம்  மிகவும் நேர்த்தியாக படிகளை அமைத்து இருந்தனர். அது  போக  குகையின்  ஓரங்களில்  இருந்த  ஒளி  விளக்குகள் வண்ணங்களை  மாற்றி மாற்றி  தனக்கு  எதிரே  இருந்து  குகைப்பரப்பின்  மீது  உமிழ்ந்து  கொண்டு  இருந்தன. கீழ்  நோக்கி  நடக்க  ஆரம்பித்தோம் .

 குகையின்  மேலே  இருந்த  மிகப்பெரிய  ஓட்டையின்  வழியாக  சூரிய  வெளிச்சம்  உள்ளே  வந்து  கொண்டுஇருந்தன .. படிகளில் நீர்  சொட்ட  சொட்ட  வடிந்து கொஞ்சம் ஈரம்  இருந்தது .












கொஞ்சம் கீழே  இறங்கிய  பின்பு ஒரு லிங்கத்தின்  முன்பு  சிவன்  பிள்ளையார்  முருகன் போட்டோ  வைத்து  ஒருவர்  விபூதி  கொடுத்துக்கொண்டு  இருந்தார்.
அவரிடம்  முருகன்  படத்தை  சுட்டிக்காட்டி  இவர்  பெயர்  என்ன என்று  கேட்டான். அதற்கு அவர் குமாரசாமி  என்று சொன்னார்.

மீண்டும்  கீழ்  நோக்கி  நடக்க  ஆரம்பித்தோம். படிகளில் ஈரம்  கொஞ்சம்  அதிகமாகி  இருந்தது.ஆங்காங்கே  சில இரும்பாலான   ஏணிப்படிகளும்  ஆந்திர  சுற்றுலா  கழகத்தால்  அமைக்கப்பட்டு  இருந்தது.அந்த  ஏணிப்படிகளில்  சில துருப்பிடித்து  இருந்தன .. படிகள்  இப்பொழுது  மேல்  நோக்கி  செல்ல  ஆரம்பித்தன . மேல்  நோக்கி  நடந்தோம்  . மூச்சு  வாங்க  ஆரம்பித்தது . ஒரு இடம் சென்றது  வரிசை தொடங்கியது . மிகவும் குறுகலான  இரும்பாலான  ஏணிப்படி  .ஒருவர் செல்வது  போக  கொஞ்சம்  இடம் இருக்கும்  மிகவும் சாய்வு  குறைவான  ஏணிப்படிகள் .அங்கு  என்ன  இருக்கிறது  என்று  கேட்டால் சிறு  கோவில்  இருப்பதாக  சொன்னார்கள் . வரிசை முடிந்து  மேலே சென்றோம்  .
 
அங்கே   3 ஆட்கள்  மட்டும் நிற்கக்கூடிய  அளவுக்கு ஒரு  பொந்தும் அதில்  சில  சாமி  சிலைகளும் வைக்கப்பட்டு  பூசாரி  ஒருவர்  பூசை  செய்து  கொண்டு இருந்தார்.சாமியை  பார்த்து  விட்டு  வெளியே  வந்துதும்  மேலே  சென்று  ஓய்வு  எடுக்கலாம்  என்று கால்  வலித்தும்   எங்குமே  நிற்காமல்  மேலே  வந்தேன்   . மேலே   வந்ததும்  கீழே  ஓடிக்கொண்டு  இருந்த  ஆற்றை பார்த்தவாறு  உட்கார்ந்து  வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன் .
30 நிமிடங்கள்  கழித்து வெளியே  வந்தேன். அரக்கு  செல்ல  பேருந்து பிடிக்க  பக்கத்தில் உள்ள செல்லவேண்டும். ஆட்டோ  பிடிக்க   நடக்க  ஆரம்பித்தோம். ஒரு ஆட்டோ கிடைத்தது . ஆளுக்கு 30 ரூபாய் கேட்டார்.

 ஆட்டோ பயணம் தொடங்கியது. வழி  எங்கும்  நெல் சாகுபடி குறைந்து  கேப்பை  கேப்பையின் நடுவில்  கம்பும் மற்றும்  சோளம்   பயிரிடப்பட்டு  இருந்தன .ஆங்காங்கே  சில  பருப்பு  வகைகளும்  பயிரிடப்பட்டு  இருந்தன. நாங்கள் பேருந்து  நிறுத்தத்தை  அடைந்தோம் . அங்கு  சோளம் சில  பருப்பு  வகைகளை  கடைகளில்  விற்றுக்கொண்டு  இருந்தனர்.ஆட்டோக்காரர் இப்பொழுது  60 ரூபாய்  வாங்காமல் அரக்கு கூட்டி  சொல்லுகிறேன்  400 ரூபாய்  கொடுங்கள்  என்றார் . தனக்கு  அரக்கு பக்கத்தில் ஒரு ஊர்  என்றும் தான்  அங்கு  செல்வதாகவும்  நீங்கள் வருவதால்  400 ரூபாய்  கேட்கிறேன்  என்றார்.நாங்கள்  300 (240+60) ரூபாய்  கொடுப்பதாக  சொன்னதும்  சரி என்று ஒப்புக்கொண்டு  ஆட்டோக்கார  நண்பரானார். அரக்கு  நோக்கி  பயணம்  தொடங்கியது ..


அரக்கு  செல்லும் வழியில் முதலில்  ஒரு view  point  காண்பித்தார். மிகவும்  அருமையான  view  point . மேலே  இருந்து  பார்த்தால்  கீழே  ஒரு  பள்ளத்தாக்கு . அந்த  பள்ளத்தாக்கில்  அரக்கு  செல்லும்  ரயில் பாதை .. அதை  பார்த்ததும்  போட்டோ பிரேம்களில்  பார்த்த  இயற்கை  காட்சிகள்  நினைவுக்கு  வந்தன .



அங்கு இருந்து  கிளம்பினோம் . அடுத்ததாக  வந்தது  ஆனந்தபுரம்  காப்பித்தோட்டம் . அங்கு கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு  மீண்டும் பயணத்தை தொடங்கினோம் .



மறுபடியும் ஒரு  viewpoint .. இது  சில  திரைப்படங்களில்  வந்த இடம் . குறிப்பாக  சம்திங்  சம்திங்  (something  something ) திரைப்படத்தில்  வரும்  திரிஷா  பிரபு  ஜெயம்  ரவி சார்ந்த  கிராமத்து காட்சிகள் எடுக்கப்பட்ட  இடம் . இங்கே  set  போட்டு  எடுத்ததாக  சொன்னார்  நண்பர். அங்கே  சில  புகைப்படங்களை  எடுத்துவிட்டு நகர்ந்தோம்.




 அரக்கு ஊரின்  கொஞ்சம் முன்பு  மிகப்பெரிய  சரக்கு  ரயில் நின்று  கொண்டு இருந்தது. நண்பர் எங்களை அறைக்கு காபி  அருங்காட்சியகம்  அழைத்து  செல்வதாக  சொன்னார்.  சரி என்று  சொன்னோம் .. காபி அருங்காட்சியகம்  உள்ளெ சென்றோம்.




அங்கு காபி  பற்றிய  முழு வரலாறு  பொம்மைகளாக  பதிவு  செய்யப்பட்டு இருந்தன.அரக்கு  பள்ளத்தாக்கில்  1898ம் ஆண்டு   பிரிட்டிஷாரால்  நீலகிரியில்  இருந்து  கொண்டு வரப்பட்டு  பயிர்  செய்யப்பட்டு இருக்கிறது . அது  சரி வராததால்  மறுபடியும்  1920ம்  ஆண்டு  முயற்சி  செய்து  வெற்றி கண்டு  இருக்கிறார்கள் . காபி  பயிரானது  பெரும்பாலும்  பழங்குடி  மக்களை  கொண்டு  வளர்க்கப்படுகிறது. அங்கேயே  சில  காபி  பொடிகளும்  கொட்டைகளும்  விற்கின்றனர்.


அதன்  பின்பு  நாங்கள்  சென்றது  அரக்கு பழங்குடி  அருங்காட்சியகம் . இந்த
அருங்காட்சியகத்தில்  ஆந்திராவில்  வாழும்  பழங்குடி மக்களை  பற்றி  ஒரு தகவல் பலகை முகப்பில் உள்ளது .. உள்ளெ சென்றால்  அங்கே  சில பழங்குடி  மக்களை  வீடு  சமையல்  அறை  வேட்டையாட  துணை  செய்யும்  பொருட்கள்  இசைக்கருவிகள்  அவர்களது சில சடங்குகள்  என்று set  போட்டு  ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன .


அங்கே பார்த்த  முக்கியமான  ஒன்று  ஒரு பழங்குடி  தலைவனின்  வீடு . அது  சாதாரண  பழங்குடி  மக்களின் வீடு  போல் ஒரு அறை  ஒரு சமையல் அறை  இவற்றுடன்  முன்பக்கம்  ஒரு அறை  ஒப்பீட்டளவில் மிகப்பெரியதாக  உள்ளது . இந்த  அறை  அவர்களால்  சாவடி என்று அழைக்கப்படுகிறது . இந்த  சாவடியானது  அந்த பழங்குடி மக்களின்  பிரச்சனைகளை  தலைவனுடன்  ஆலோசனை  செய்ய  உபயோகப்படுத்தப்படுகிறது .



இது  போக  அரக்கு பகுதியில்  பழங்குடி  மக்களால் பயிரிடப்படும்  பயிர்களின்  விதை  சேகரிக்கப்பட்டு அங்கே  ஒரு  அறையில்  காட்சிக்கு  வைக்கப்பட்டு  உள்ளது .அது போக  விற்பனையும்  செய்கிறார்கள் . இங்கே  தான்    முதன்முதலில்  கருப்பு  நெல்லை  பார்க்கும்  வாய்ப்பு  கிட்டியது .


பழங்குடி அருங்காட்சியகம்  பார்த்துவிட்டு  ரயில்  நிலையம்  சென்றோம்  .  டிக்கெட்  எடுத்துவிட்டு  காத்து  இருந்தபோது  ரயில் தாமதம்  5 மணி  அளவில்  வரும்  என்று  சொன்னார்கள்.சரி என்று  பக்கத்தில் இருந்த  புல்வெளியில் உட்கார்ந்து  கதை  பேசிக்கொண்டு இருந்தோம். மறுபடியும் ரயில்  நிலையம்  சென்று  என்ன  நிலைமை என்று பார்க்கலாம்  என  உள்ளெ  வந்தோம்  அங்கே காய்கறிகள்  மொத்தமாக  வைக்கப்பட்டு  இருந்தன  .அங்கே  இருந்த  பெண்மணியிடம் எங்கே செல்கின்றன   என்று கேட்டோம்  .. அது  ஒடிசா  மாநிலம்  koraput  அனுப்பப்படுவதாக  சொன்னார்  அந்த பெண்மணி .. தொடர்ந்து  நடைமேடையில்  நடந்தோம்  .. அப்பொழுது  அங்கே வேலை  பார்த்து கொண்டு இருந்த  ரயில்வே  ஊழியர்களிடம் கேட்டபோது  ரயில் அரக்கில்  இருந்து விசாகப்பட்டணம்  செல்ல  3 நாட்கள் ஆகும்  என்றார் . ஏன்  என்று  கேட்டபோது  ரயில்வே  தடத்தின்  மீது  ஏதோ  டவர்  விழுந்து விட்டதாகவும் அதை சரி செய்ய  நேரம் ஆகும் என்றார். உடனே அங்கே இருந்து  பேருந்து  நிலையம் வந்து  அப்போதுதான்  கிளம்ப  தயாராக  இருந்த  பேருந்தில்  ஏறினோம்.. ரயில்நிலையத்தில் இருந்து  எங்களுக்கு  முன்பு  வந்து  சேர்ந்த  பயணிகள்  பேருந்தை நிரப்பி  இருந்தனர். ஒரே ஒரு  இருக்கை  கிடைத்தது. சரி என்று விசாகப்பட்டணம்  நோக்கி பயணம் தொடர்ந்தது .






















4 comments: