Saturday, December 12, 2009

காதல் கனவு

ஓர்குட்ல profile பாத்துகிட்டு இருக்கும் ராஜ்கண்ணன் விடுமுறைக்கு ஊருக்கு போறதுக்காக மடிவாலா போய் பேருந்துல உக்காந்துட்டான் . நல்ல அசதி .. பேருந்துல இவன் எரிச்சலை கிளப்பிற மாதிரி காதல் பாட்டுகள போட்டுக்கிட்டு இருந்தாங்க . பய ஏற்கனவே ஆப்பு வாங்குனதுல வெறுத்து போய் இருந்தான் .

பேருந்துல ஒரு அழகான அமைதியான பொண்ணு ஏறிச்சு . பய பாத்துட்டு பாக்காத மாதிரி திரும்பிகிட்டான் . அந்த பொண்ணு நேர ராஜ்கண்ணன் பக்கத்துல வந்து உக்காந்துச்சு ..

பய இருக்கிற இம்சை போதாது அப்படின்னு நினைச்சுகிட்டு சன்னல் பக்கம் வேடிக்கை பாக்க ஆரம்பிச்சான் . அப்படியும் பயலுக்கு ஒரு பயம் அந்த பொண்ணு ஏதும் இவன்கிட்ட பேசி காதல் கீதல்னு மனசு மறுபடியும் லோல்படனுமா அப்படின்னு காதுல ear phone எடுத்து மாட்டி பாட்டுல முங்கிட்டான் .

ஒரு ரெண்டு பாட்டு கேட்டு இருப்பான் . "EXCUSE ME" அப்படின்னு தேன்ல குழைச்ச மாதிரி ஒரு குரல் . என்னனு பாத்த அந்த பொண்ணு .. பய பம்மிகிட்டே என்ன என்றான் .
பேருந்துல பக்கத்து சீட் பேருந்து வேற 3 மணி நேரம் போகணும் .. கொஞ்சம் உங்க கூட பேசிகிட்டு வரலாமா என்று தன் மீன் விழிகளை உருட்டி கேட்டாள்.

ராஜ்கண்ணன் விலகி போனாலும் வேலில போற ஓணான் வேட்டிக்குள்ள வந்து விழுதே அப்படினுட்டு .. பேச்சை ஆரம்பிச்சான் .. அந்த பொண்ணுக்கு ராஜ்கண்ணனை ரெம்ப பிடிச்சு போச்சு .. mobile number கூட பரிமாறிகிட்டங்கா. ஊருக்கு போயும் பேசினார்கள் . பெங்களூர் வந்தும் பேசினார்கள் ..



ஒரு நாள் அந்த பொண்ணுகிட்டே இருந்து ராஜ்கண்ணன் மொபைலுக்கு ஒரு SMS வந்தது . பய என்னனு பாத்தான். அந்த பொண்ணு தன் காதலை வெளிப்படுத்தி இருந்தாள் .. பய நமக்கும் ஒரு காதல் வாழ்கை வர போகுதுன்னு பெருமையா நினைச்சிகிட்டு வானத்துல மிதந்துகிட்டு இருந்தான் ..

சனி ஞாயிறு விடுமுறை வந்தது . ஊருக்கு அந்த பொண்ணுடன் கிளம்பினான் .பேருந்திலேயே காதல் மொழி பேசினார்கள் .இந்த பய புதுசா லவ் பண்றதால கைவசம் இருந்த காதல் மொக்கைகள கொஞ்சம் அவுத்து விட்டான் .. அதுல அந்த பொண்ணு கடுப்பாகி சண்டை போட்டுகிட்ட வேற சீட் தேடி போக பய முதல் நாளை இப்படியே இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முழிக்க .....

பேருந்து ஓட்டுனர் ஒரு "sudden break" போட்டார் . பய எந்திருச்சு பாத்த பக்கத்து சீட்ல யாருமே இல்லை .....எல்லாம் கனவு ..பேருந்து "electronics city" கூட தாண்டலை ..

கனவுல கூட ஆப்பா அப்படின்னு காத்து போன பலூன் மாதிரி வெறுத்து போய் அப்படியே மறுபடியும் தூங்கிட்டான் .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

6 comments:

  1. யோவ் எப்படிய்யா இப்படி சிரிக்க வைக்கிறீங்க... நல்லாருங்க :))

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி அண்ணே .. ஏதோ நம்மளால முடிஞ்சது

    ReplyDelete
  3. மீன்துள்ளி.. நீ அவன விடறதா இல்ல.. என்னமோ பண்ணு... வாழ்துக்கள்

    ReplyDelete
  4. கனவுல கூட ஆப்பா அப்படின்னு காத்து போன பலூன் மாதிரி வெறுத்து போய் அப்படியே மறுபடியும் தூங்கிட்டான் .
    ......................கனவில் கூட அவன் ஆசை நிராசை ஆயிடுச்சே! த்சோ த்சோ த்சோ.....

    ReplyDelete
  5. Nalla irundhathu, Nalla sirukathai. ENI la, Nalla Timepass.

    ReplyDelete