Saturday, December 19, 2009

எப்படி கேட்பது அவளிடம்


செந்தில் இன்னைக்கு தான் ஒரு வழிய டீம்ல இடம் கிடைச்சு வேலை பாக்க போறான் ,, ஆமா அவன் 3 மாசமா பென்ச்ல வேலை இல்லாமல் சும்மா சுத்திகிட்டு இருந்தான் ...

வழக்கம் போல டீம்ல இவனை அறிமுகப்படித்தி வச்சாங்க. அப்புறம் அவனுக்கு கொடுத்த சீட்ல போய் உக்காந்தான் .மதிய சாப்பாடு நேரம் வந்தாச்சு .. அப்போ தான் அந்த பொண்ண கவனிச்சான் .பாத்த உடனே பயலுக்கு பிடிச்சு போச்சு .. சரி அப்படின்னு சொல்லிட்டு போய் சாப்பிட்டு விட்டு வந்தான் ..அவனுக்கு வழக்கம் போல மதிய சாப்பாடு திருப்தி இல்லை ..

பய மனசுகுள்ள ஒரு கணக்கு போட்டான் .. இந்த பொண்ணை எப்படியாவது சம்மதிக்க வச்சிட்ட பிரச்சினை இல்லை.. வாழ்க்கை அப்படியே வசந்தமா ஆயிடும் ..

இப்படியே ஒரு வாரம் போச்சு .. அவனுக்கு அந்த பொண்ணுகிட்டே தினமும் எப்படியாவது கேட்டுடணும் அப்படின்னு தோணுச்சு. ஆனா அவன் கேக்கலை .. இது தான் முதல் முறை .. ரெம்ப தயங்கினான் .மனசு பாக்கிறதுக்கு முன்னால் தவிக்கிது பாத்துட்ட தயங்குது ..அவன் என்ன பண்ணுவான் .

வெள்ளி கிழமை காலைல எந்திரிச்சதும் முடிவு பண்ணிட்டான் .. இன்னைக்கு கேட்டுற வேண்டியது தான் .எவ்ளோ நாள் தான் நினைச்சு நினைச்சு ஏங்கிகிட்டு இருக்கிறது . அப்படியே அசிங்கப்பட்டாலும் சனி ஞாயிறு லீவ்ல எல்லாம் மறந்துடும் அப்படின்னு முடிவு பண்ணினான் .

அலுவலகத்துக்கு வந்து வழக்கம் போல வேலைய பாத்தான் .. மதியம் சாப்பாடுக்கு முன்னால கூச்சத்துடன் கேட்டே விட்டான் "execuse meee . நீ வீட்டுல இருந்து கொண்டு வர மதிய சாப்பாட்டை நான் எடுத்துக்கிறேன்... . வெளிய சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு ... முடிஞ்ச இனிமேல் நீ எனக்கும் சேத்து எடுத்துட்டு வா "

அந்த பொண்ணு சிரித்து கொண்டே " சரி என்றாள் . இவன் அன்று ஆவலுடன் அவளுடன் முதன் முதலாக மதிய உணவு சாப்பிட்டான் "

25 comments:

  1. ச்சே..என்னா பாஸ்..நானும் என்னவோ நினைச்சு ஒரே மூச்சுல படிச்சு பார்த்து நல்லா ஏமாந்துட்டேன்.நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. என்ன பண்றது பூங்குன்றன் .. bachelors நிலைமை அப்படி
    நன்றி க‌ரிச‌ல்கார‌ன்

    ReplyDelete
  3. இவ்வளவு தாராள மனதுடைய நண்பர்கள், இந்த விலைவாசியில் ..............உண்மை காதலை விட அரியது. நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  4. ஆஹா... ஏன் இப்படி?

    ReplyDelete
  5. நன்றி சித்ரா .. சும்மாதான் பிரதாப்

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்கே.. உன்னை பத்தின விஷயம் தானே.. :-P

    ReplyDelete
  7. ட்விஸ்ட் இருக்கும்னு நினைச்சேன்..ஆனா
    மதிய சாப்பாடுன்னு நினைக்கில.....

    ReplyDelete
  8. நாக்கை தொங்க போட்டுட்டு அலையறானுங்கன்னு சொல்றது இதத்தானோ

    ReplyDelete
  9. எல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்குது தோழரே..... :))

    ReplyDelete
  10. கடைசில சாப்பாடு ராமன் அப்படின்னு பேரு வந்துச்சே ..
    என்ன கொடுமை சரவணன் ..

    ReplyDelete
  11. வாங்க தமிழுதயம் .. நீங்க சொல்லுறது சரி தான் ..
    பலா பட்டறை அடுத்த காதல் தான் ..
    மந்திரன் நண்பா ஊர் ஆயிரம் சொல்லும்டா .. நமக்கு நல்ல சாப்பாடு தான் முக்கியம்

    ReplyDelete
  12. Nalla irukku,
    Idhu unmaya nadantha vidayama??

    ReplyDelete
  13. மீன், நல்லா டிவிஸ்ட் கொடுக்க கத்துக்கிட்டே... நல்லா இரு! :)

    ReplyDelete
  14. அவனுக்கு வழக்கம் போல மதிய சாப்பாடு திருப்தி இல்லை ..
    இந்த வரியை படிக்கும் போதே மீதி கதையை யூகிக்க முடிஞ்சது !!! கதை ரொம்ப நல்ல இருந்தது

    ReplyDelete
  15. நல்ல கதை... ஆனந்த விகடனில் வரும் ஒரு நிமிடக் கதைகள் போல... நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. @இயற்கை நேசி
    ஏதோ நம்மளால முடிஞ்சது ...

    @ ஆழிமழை
    இந்த வரி வேண்டாம்னு தான் முதல்ல யோசிச்சேன் .. அப்புறம் இருக்கட்டுமே அப்படின்னு விட்டுட்டேன் .

    நன்றி ராம்குமார் - அமுதன் ,சே.குமார்

    ReplyDelete
  17. எப்பூடி இப்படியெல்லாம்.....:-)
    நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  18. சமையலுக்கு ஆள் செட் பண்ணதான் அக்கம்பக்கத்துல கேட்கப்போறீங்களோன்னு நினைச்சேன்... :))

    ReplyDelete
  19. @துபாய் ராஜா ..

    என்னங்க நீங்க ,சமையலுக்கு ஆள் செட் பண்றதை விட அவளைய செட் பண்ணிடலாமே ...

    ReplyDelete
  20. வருகைக்கு நன்றி பிரியா

    ReplyDelete
  21. //அப்படியே அசிங்கப்பட்டாலும் சனி ஞாயிறு லீவ்ல எல்லாம் மறந்துடும் அப்படின்னு முடிவு பண்ணினான் .//
    பிரம்மச்சாரிகளின் வாழ்க்கையை இவளவு எளிமையாகவும் சொல்ல முடியுமா ?
    அருமை தலைவா .

    ReplyDelete