Monday, February 8, 2010

BEAUTIFUL COUNTRY திரைப்படமும் வியட்நாம் போரும்

சென்ற வாரம் கிழக்கு பதிப்பகத்தில் திரையிடப்பட்ட "beautiful country" படத்தின் பின்புலத்தை பற்றியது இந்த பதிவு . படத்தை பற்றி நண்பர் பலா சங்கர் ஒரு பதிவு சுந்தர கண்டம் என்ற பெயரில் போட்டு உள்ளார்.

வியட்நாமில் 1953 இல் ஆரம்பிக்கப்பட்ட போர் 1975 இல் முடிவடைந்தது . இந்த போர் இடதுசாரி ஆதரவு பெற்ற படைக்கும் இடதுசாரி எதிர்ப்பாளர்களுக்கும் நடைபெற்றது . இந்த போரில் அமெரிக்காவின் பங்கு அதிகம் . அமெரிக்க போர்
வீரர்கள் மற்றும் படைகலங்கள் பொதுவாக GI என்று அழைக்கப்படுவார்கள் .இந்த வார்த்தை beautiful country படத்தின் நாயகன் அவனுடைய நண்பர்களுடன் விளையாடும்போது வரும் வசனத்தில் கூட வரும் .

வியட்நாம் சென்ற அமெரிக்க படை வீரர்கள் அவர்களது உடல் தாகத்தை தணிக்க வியட்நாம் பெண்களை கற்பழிக்க ஆரம்பித்தார்கள் . வியட்நாமில் விபச்சாரமும் பெருகியது . சிலர் திருமணம் கூட செய்து கொண்டார்கள் .இதனால் வியட்நாமில் நிறைய amerasian குழைந்தைகள் பிறந்தனர் .

1975 இல் போர் முடிந்ததும் அமெரிக்க வீரர்கள் அமெரிக்காவிற்கு திரும்பினர் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை வியட்நாமில் விட்டு விட்டு . சில வீரர்கள் மோசமான காயங்களால் பாதிக்கப்பட்டு இருந்தனர் . 1980 க்கு அப்புறம் amerasian பிரிவினரால் அரசியல் மற்றும் சமுக தளங்களில் ஏற்பட்ட அதிர்வு அமெரிக்க அரசை யோசிக்க வைத்தது . ஏற்கனவே அமெரிக்க வீரர்கள் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர் . இப்பொழுது அவர்களது குழந்தைகளும் மனைவிகளும் . இதனை ஒட்டி அமெரிக்க அரசாங்கம் amerasian நாடு திரும்பும் சட்டத்தின்படி 1988 ஆம் ஆண்டு வியட்நாமில் உள்ள amerasian மக்களுக்கு விசா வழங்க முடிவு செய்தது . கிட்டத்தட்ட 23000 பேர் முக சாயலை மட்டுமே அடிப்படையாக கொண்டு அமெரிக்க விசா வாங்கி குடிபெயர்ந்தனர் . இவர்களது வாழ்க்கை தரம் அமெரிக்காவிலும் பெரிதா சொல்லி கொள்ளும்படி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுஇந்த வியட்நாம் போரில் வியட்நாமின் பொருளாதாரமும் மனித வளமும் பெரும் அளவு சிதைந்து போனது . மனித உயிர் பலிகள் கிட்டத்தட்ட 15 லட்சத்திற்கும் மேலான வியட்நாம் பகுதியை சேர்ந்த மக்களும் 50000 க்கும் அதிகமான அமெரிக்க வீரர்களும் . காணமல் போனவர்களும் நிறைய .

இந்த போரிலும் வேதியியல் சார்ந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன . அதன் பெயர் "NAPLAM" . இந்த வெடிபொருளை வீசினால் சத்தம் இருக்காது ஆனால் பெரிய தீ பிழம்பை ஏற்படுத்தி விடும் .அப்படி வீசப்பட்ட குண்டு ஒன்று தான் வியட்நாம் போரின் கொடுரத்தை உலகிற்கு காட்டியது அந்த குண்டு விழுந்த ஒரு சிறுமி தன் உடம்பில் ஒரு துணி கூட இன்றி ஓடும் காட்சி புகைப்படமாக 1972 இல் வெளிவந்த பொழுது உலகமே திகைத்துவிட்டது . அந்த சிறுமியின் இப்போதைய புகைப்படம் தான் கீழே உள்ளது .அந்த சிறுமியின் பெயர் கிம் .இவர் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் .

போரினால் வியட்நாமில் ஏற்பட்ட இந்த சமுக சீரழிவு 2004 ஆம் ஆண்டு நார்வே நாட்டு இயக்குனர் " Hans Petter Moland " எடுத்த "BEAUTIFUL COUNTRY " மூலம் திரைப்படமாக பதிவு செய்யப்பட்டது .

இதே போன்ற சீரழிவுகளை சந்தித்த தமிழ் இனமும் யாரோ ஒரு வெளிநாட்டு இயக்குனருக்காக காத்து கொண்டு இருக்கிறது

10 comments:

 1. அருமையான தகவல்கள்.. கடைசி வரிகள் நச்.!

  இந்த படம் பார்க்கும் எல்லோருக்குள்ளும் ஒரு காட்ச்சியினை விரிக்கும் என்பதில் ஐயமில்லை மீன்ஸ்..:)

  ReplyDelete
 2. ஏற்கனவே ஷங்கர் பதிவுல படிச்சேன்... நீங்க எழுதினதையும் படித்தப் பிறகு, அந்த பட‌த்தை பார்க்க ஆவலா இருக்கு...

  ReplyDelete
 3. \\இதே போன்ற சீரழிவுகளை சந்தித்த தமிழ் இனமும் யாரோ ஒரு வெளிநாட்டு இயக்குனருக்காக காத்து கொண்டு இருக்கிறது//

  உள்நாட்டில் இதற்கு எல்லாம் செலவு செய்ய ஆள் இல்லை. ஆனால் பேசுவதற்கு நிறைய பேரு இருகிறார்கள். காந்தி படத்தையே வெளிநாட்டுகாரன் தான் எடுத்தான். கொடுமை பாஸ்.

  ReplyDelete
 4. இதே போன்ற சீரழிவுகளை சந்தித்த தமிழ் இனமும் யாரோ ஒரு வெளிநாட்டு இயக்குனருக்காக காத்து கொண்டு இருக்கிறது//

  குலோசிங்ல அடிச்சு பச்சக்கின்னு வாயடைச்சுப் போக வைச்சிருச்சு, பதிவு. பகிர்விற்கு நன்றி, மீன். கிடைச்சா பார்க்கணும்.

  ReplyDelete
 5. கடைசியிலே நல்லா உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறீங்க.சூப்பர் படம்.

  ReplyDelete
 6. //ஒரு சிறுமி தன் உடம்பில் ஒரு துணி கூட இன்றி ஓடும் காட்சி புகைப்படமாக 1972 இல் வெளிவந்த பொழுது உலகமே திகைத்துவிட்டது . அந்த புகைப்படம் தான் கீழே உள்ளது .
  //

  அந்த படம் இது இல்ல செந்தில்....

  ReplyDelete
 7. இதே போன்ற சீரழிவுகளை சந்தித்த தமிழ் இனமும் யாரோ ஒரு வெளிநாட்டு இயக்குனருக்காக காத்து கொண்டு இருக்கிறது.


  .............வாழை பழத்தில் ஊசியாய் இந்த வார்த்தைகள்............... !!! சரியா சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 8. அந்த படம் இது இல்ல ஜெட்லி ஆனால் அந்த பெண் இவங்கதான், உடம்புல இருக்கறது அனுகுண்டோட பாதிப்பு..:(

  ReplyDelete
 9. //இதே போன்ற சீரழிவுகளை சந்தித்த தமிழ் இனமும் யாரோ ஒரு வெளிநாட்டு இயக்குனருக்காக காத்து கொண்டு இருக்கிறது //

  உண்மை தான்

  ReplyDelete
 10. Nalla padhivu.. kandippa andha padam pakkara avalai undakki irukku

  ReplyDelete