Thursday, February 18, 2010

பதின்மம்

பதின்ம வயதுக்கு முன்னால் வாழ்க்கையில் எந்த ஒரு நிர்பந்தமும் கிடையாது . வெறும் சந்தோசம் மட்டுமே நிரம்பி இருந்த காலம் . பதின்ம வயதின் முதல் கட்டத்தில் தான் நான் இன்று ஒரு நம்பிக்கை உள்ள மனிதனாக வாழ்வதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டது . அதற்கு காரணம் என் குடும்பத்தார் தவிர ஆசிரியர்களும் , நண்பர்களுமே முழுக்க கரணம் . இந்த காலம் தான் இரவில் வானத்தை பார்த்து வெள்ளிகளை பகலில் வேப்ப மர நிழல் தேடி மண்ணில் விளையாடும் சிறுவனாக இருந்த என்னை ஒரு காரியத்தை செய்து முடிக்க வல்ல நம்பிக்கையையும் , இந்த சமூகத்துடன் பழகும் வித்தையையும் , அதே சமுகம் தரும் ஏமாற்றத்தையும் எப்படி எடுத்து கொள்வது என்று கற்று கொடுத்தது .

9 ஆம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் என் ஆசிரியர் விதைத்த நம்பிக்கை என்னும் விதைதான் இன்று வரை என்னை ஓட செய்து கொண்டு இருக்கிறது .இந்த கால கட்டங்களில் நட்பு என்பது மரத்தில் காய்த்து கனிந்து வெகு சீக்கிரமாக பறிக்கப்படும் அல்லது உதிரும் பழம் போன்று இருந்தாலும் இன்று வரை நான் மறக்க முடியாதது . என் நட்பின் தோழர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கூட எனக்கு தெரியாது .

இந்த முதல் பாதி நட்பு என்பது பிஞ்சு மனங்களின் உக்கிரமான அன்பை பகிர்ந்து கொள்ளும் காலம் இது . இன்று நினைத்தாலும் பிஞ்சு முகங்களின் பாசமும் அவற்றின் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் அர்த்தமற்ற கோபங்களும் பசுமை . இன்றும் நினைவு இருக்கிறது என் வார்த்தைகளில் நான் உணராத வசீகரத்தை உணர்ந்த நண்பனிடம் நான் பேச மறுத்தபோது தன் கண்ணில் இருந்து 5 நிமிடங்களில் ஒரு அருவியே ஏற்படுத்திய அந்த பால் முகம் மாற என் நண்பனை . இது மட்டுமா ஆசிரியரிடம் பிரம்படி வாங்குவதில் ஆரம்பித்து 50 பைசாக்கு வாங்கும் மிட்டாய் வரை பகிர்ந்து கொள்ள துடிக்கும் அந்த நட்பினை .

முதல் பதின்ம பாதியில் பெற்றவர்களின் அன்பு பிடியில் இருந்து கொஞ்சம் விலகி சமுகத்தின் அரவணைப்பிலும் நிராகரிப்பிலும் வாழ ஆரம்பித்தவன் இரண்டாம் பதின்ம பாதியில் சிறு வயது முதல் வாழ்ந்த மண்ணை உறவுகளை விட்டு விலகி வாழ்க்கை என்னும் ஓட்ட பந்தயத்தில் குறைந்தப்பட்ச தகுதியாவது பெற கல்லூரி சென்ற பொழுது எல்லாமே அன்னியம் . ஆனால் அது கற்றுக் கொடுத்தது அன்னியத்தையும் என்னியம் ஆக்குவது எப்படி என்று .

கல்லூரி காலத்தில்தான் பகிர்ந்து உண்ணும் காகையாக வாழும் வாழ்கை எவ்வளவு உன்னதம் என்று புரிந்தது . அக்கறையுடன் அன்னமிடும் விடுதி பணியாளும் , 50 ரூபாயில் பாசத்துடன் பகிர்ந்து உண்டு சிறுகக் சாபிட்டாலும் மகிழ்ச்சி நிறைந்த மனசுடன் வாழ்வை பகிர்ந்த 10 நண்பர்களும் , இளையராஜா முதல் ஈழம் வரை பேசிப் பேசியே இரவை விடிய வைத்த நண்பனும் , என்னுடன் கூட கொஞ்சம் நேரம் பேச வேண்டும் என்பதற்காக என் அன்புக்கு லஞ்சம் கொடுத்தவனும் ,எனக்கு என்ன வேண்டும் என்று கேட்காமலே எனக்கு பிடித்ததை வாங்கி கொடுத்த நண்பனும் , துவளும் நேரத்திலும் தூணாக நின்று தோள் கொடுத்த நண்பர்களும் , அடிப்பட்ட காலை வைத்து நடக்க தவித்தபோது என்னை தூக்கி கொண்டு விடுதி உணவகத்துக்கு தூக்கி சுமந்த நண்பனையும் ,நடுநிசியில் வீட்டில் இருந்து பிரியாணி கொண்டு வந்து தூங்குபவனை எழுப்பி சாப்பிட சொன்ன நண்பனையும் என்று எழுதி கொண்டே போகலாம் அன்பைப் போதித்த நண்பர்களை பற்றி . இன்று வரை என்னை ஒரு அன்புள்ளவனாக இயங்க வைப்பது இவர்கள் தான் .நான் என்பது இங்கு நான் அல்ல . நான் சந்தித்த மனிதர்களின் பிரதிபலிப்பே ..


இந்த தொடர் பதிவில் என்னை கலந்து கொள்ள சொல்லி என்னை ஊக்கப்படுத்திய அண்ணன் தெக்கிக்காட்டான் அவர்களுக்கு மிகவும் நன்றி .

இந்த தொடர்பதிவில் கலந்து கொள்ள நான் அழைப்பது

ஜான்
பலா சங்கர்
ஜெட்லி
சே குமார்
அக ஆழ்
பின்னோக்கி
புலவன் புலிகேசி
மந்திரன்

17 comments:

 1. அருமையான எழுத்து நடை.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. மீன், நட்பு பாராட்டுவது என்பது உன் விசயத்தில் பால்யத்திலேயே ஆரம்பித்து விட்டது என்பது தெரிகிறது, வரிக்கு வரி. வார்த்தைகளில் உணர்வு மிளிர்ந்து கொண்டிருக்கிறது. அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 3. //////இன்று வரை என்னை ஒரு அன்புள்ளவனாக இயங்க வைப்பது இவர்கள் தான் .
  நான் என்பது இங்கு நான் அல்ல . நான் சந்தித்த மனிதர்களின் பிரதிபலிப்பே ..//////

  .........நட்பின் இலக்கணம் கொண்டு வாழ்க்கையில் எழுதி சென்ற காவியங்களை, கனிவுடன் நினைத்து எழுதி இருக்கிறீர்கள். அருமை!

  ReplyDelete
 4. அழைத்ததற்கு மிக்க நன்றி மீன்ஸ்..:) ஆனால் நான் இதை முன்பே முகிலன் அவர்கள் கேட்க தள்ளி திரிந்த காலம் என்று எழுதிவிட்டேனே..:)
  ---
  நாம் இருவரும் பேசியது குறைவென்றாலும் நான் அறிந்தவரையில் என் மனதிற்கு நெருக்கமாய் இருக்கும் நட்புகளின் நீங்களும் ஒருவர்:) அருமையான பதிவு. வாழ்த்துகள்..:)

  ReplyDelete
 5. நன்றி பலா வருகைக்கும் என்னை ஒரு நல்ல நண்பனாக ஏற்று கொண்டதற்கும்

  ReplyDelete
 6. நல்லா இருக்கு.பழசப் பூராக் கிளறிவிட்டுட்டீங்க.என் மனம் இதோ தஞ்சைத் தெருக்களில் திரியக் கிளம்பிவிட்டது.பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் இரண்டுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. என்னையும் தொடர் பதிவு எழுத வைத்து , பத்த வச்ச்சடியே பரட்டை ..
  நண்பர்களை பற்றி என்னையும் பீல் பண்ண வைத்து விட்டாய் .
  ஆனால் , "அந்த மாதிரி " சம்பவங்கள் சொல்லாமல் விட்டு விட்டாய் . பதின்மம் பார்ட் 2 வருகிறதா என்ன ?

  ReplyDelete
 8. நட்புக்கு மரியாதை.... வாழ்வியலின் யதார்த்தம் மிக அழகாய் சொல்லியிருக்கிங்க... பாராட்டுக்கள்.

  ReplyDelete
 9. நன்றி கருணா ,மந்திரன் , மயில் , சித்ரா , தெக்கி அண்ணன் , butterfly சூர்யா

  ReplyDelete
 10. நான் என்பது இங்கு நான் அல்ல . நான் சந்தித்த மனிதர்களின் பிரதிபலிப்பே..
  Awe some da! pinra..

  ReplyDelete
 11. நான் என்பது இங்கு நான் அல்ல . நான் சந்தித்த மனிதர்களின் பிரதிபலிப்பே..

  Good

  ReplyDelete
 12. ம் விரைவில் எழுதுறேன்...

  ReplyDelete
 13. அழைப்புக்கு நன்றி மீன். விரைவில் வெளியிடுகிறேன். தாமதத்திற்கு மன்னியுங்கள்.

  ReplyDelete
 14. அழைப்பிற்கு நன்றி மீன். விரைவில் வெளியிடுகிறேன். தாமதத்திற்கு மன்னியுங்கள்.

  ReplyDelete
 15. Hello,

  I saw your postings and your photo. Are you from Meenthulli (a) Keelaneelithanallur? If yes, can you please let me know your real name.

  Please reply. I'll be eagerly waiting for your reply.

  Thanks
  Jee

  ReplyDelete
 16. yes .. i am from meenthulli . My name is Senthil Kumar . Can you please let me know about you

  ReplyDelete
 17. Very nice to meet you! My parents say I was born in Meenthulli...but raised in p.kottai..studied in Chennai...living in U.S.

  I like the way you have written this article - Great job!

  Wish you all the very best!!!

  ReplyDelete