வானம் பார்த்த மாடி பனி சில்லிடும் இரவு
பால் நிற ஒளி சிந்தும் பிறை நிலா
வானில் மிதக்கும் கண்ணடிக்கும் வெள்ளி
மாடியின் குளுமையில் மிதக்கும் நான்
காற்றில் மிதந்தபடி எங்கு இருந்தோ வரும்
வித்தியாசமாக குரைக்கும் நாய்களின் சத்தம்
நேராக கோடு போட்டது போல்
யாரோ செல்லும் வாகன சத்தம்
விதவிதமாக ரீங்காரிக்கும் இரவு பூச்சிகள்
எப்போதாவது எதற்கோ பேசும் கௌலி
இதயம் வாசிக்கும் மெல்லிய மேள இசை
இதை எல்லாம் தன்னுள் அடக்கும் காது
இவையன்றி
எந்த எண்ணங்களும் அற்ற மனநிலை
நான் என்னை உணர்ந்து கொண்டு இருந்தேன்
கலைந்தது என் தவம் காலில் கடித்த கொசுவால்
நல்லா இருக்குங்க...
ReplyDelete-
ட்ரீமர்
இதையெல்லாம் அவதானிக்க அமைதி உனக்கு எங்கிருந்துவே கிடைக்குது...
ReplyDelete//அடக்கும் காது// சரி, ஏன் இந்த இடத்தில காது... ?
மேல சொன்ன எல்லா ஒலிகளையும் தனக்குள் அடக்குகிறது காது . அதுவே நினைச்சாலும் மீண்டும் அந்த ஒலிகள் வராது . அதன் அப்படி போட்டேன் .
ReplyDeleteஇவ்வளவும் நெல்லை வீட்டுல தான் .
இவ்வளவும் நெல்லை வீட்டுல தான் //
ReplyDeleteஅதானே பார்த்தேன், இங்க இருக்கற சத்தத்துல டைனோசர் கடிச்சாலே தெரியாதே..!!:))
எந்த எண்ணங்களும் அற்ற மனநிலை
ReplyDeleteநான் என்னை உணர்ந்து கொண்டு இருந்தேன்
கலைந்தது என் தவம் காலில் கடித்த கொசுவால்
................நெல்லை கொசுக்கள், அண்ணாவுக்கு ஹாய் சொல்ல வந்திருக்கும். :-)
கவிதை நல்லா இருக்கு.
தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்..
ReplyDeletehttp://palaapattarai.blogspot.com/2010/02/blog-post_22.html
//நேராக கோடு போட்டது போல்
ReplyDeleteயாரோ செல்லும் வாகன சத்தம்//
ithu thaan gummunu irukku..vandi pora sound vachae..athu nera poguthu nu solraan paaruyya...
intha payyanukkulla ennavo irunthirukku paaren..
@ samaran நமக்குள்ள நிறைய ஒளிஞ்சு இருக்குடா . கொஞ்சம் கொஞ்சம்தான் வெளிய வரும்
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteபிரமாதமுங்க........
ReplyDeleteரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.