Monday, February 22, 2010

கிரிக்கெட் தொடர்பதிவு

தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர் பலா சங்கர் அவர்களுக்கு நன்றி .

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
----------------------------------------------------------------------------


1. பிடித்த கிரிக்கெட் வீரர் : டிராவிட் , லாரா , கங்குலி ,லான்ஸ் குளுஷ்ணர் , சேவாக், யுவராஜ் , முரளி

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் : யாரும் என் மண்டைக்கு தோணலை

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : ஸ்ரீ நாத் ,ஆலன் டொனால்ட், வாசிம் அக்ரம் , வாக்கர் யூனிஸ் , அம்புரோஸ் , டி வில்லியர்ஸ் (இவர் இந்தியாவுடன் titan cup தொடரில் 1996 ஆம் ஆண்டு ஆடியவர்)

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : ஸ்ரீ சாந்த் , வெங்கடேஷ் பிரசாத் ,

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் :ஷேன் வார்ன், முரளிதரன் , சக்லைன் முஸ்தாக்

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : வேங்கடபதி ராஜு , பேட் சிம்கோக்ஸ்

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : சேவாக் , டிராவிட் ,ரசாக் ,சச்சின்

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் : சஞ்சய் மஞ்ச்ரேகர்

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : லாரா, கில்கிறிஸ்ட், மைக்கெல் பெவன் ,லான்ஸ் குளுஷ்ணர் ,சங்ககரா

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் : வினோத் காம்ப்ளி

11. பிடித்த களத்தடுப்பாளர் : ஜான்டி ரோட்ஸ் , லாரா ,அசாருதீன்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் : கும்ளே, கங்குலி , நெஹ்ரா

13. பிடித்த ஆல்ரவுண்டர் : லான்ஸ் குளுஷ்ணர் , அப்துல் ரசாக்

14. பிடித்த நடுவர் : குண்டா ஒரு வெள்ளை தாத்தா இருந்தாரே அவரு அப்புறம் நம்ம வெங்கட் ராகவன்

15. பிடிக்காத நடுவர் : சில்வா அப்படின்னு முடியுற பெயர் கொண்ட இலங்கை நடுவர்

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : கவாஸ்கர்

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : ரவி சாஸ்திரி

18. பிடித்த அணி : அப்படி எதுவும் கிடையாது

19. பிடிக்காத அணி : அப்படி எதுவும் கிடையாது . இந்தியாவை வேண்டும் என்றால் சொல்லலாம் (வணிகமயமாக்கம் காரணமாக )

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- தற்சமயம் கிரிக்கெட் விரும்பி பார்ப்பது இல்லை

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- புதிதாக வந்த அணிகளிடம் திறமையை காமிக்கும் பெரிய அணிகள் விளையாடும் போட்டிகள்

22. பிடித்த அணி தலைவர் : கங்குலி, அசாருதீன் , ஸ்மித் , பிளெமிங் , ஹன்சி குரோன்ச்

23. பிடிக்காத அணித்தலைவர் : டிராவிட்

24. பிடித்த போட்டி வகை : 20 - 20

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், ஹேய்டன்-கில்கிறிஸ்ட், சேவாக்-காம்பிர் , அன்வர் - ஆமிர் சொஹைல்

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : எதுவும் தோன்றவில்லை

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : லாரா , முரளி ,வார்னே ,அக்ரம்

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : லாரா , முரளி , வார்னே ,ஸ்டீவ் வாக்

29. பிடித்த விக்கெட் கீப்பர் : சங்ககரா , கில்கிறிஸ்ட் , மொயின் கான் ,நயன் மோங்கியா (கும்ப்ளேக்காக )

தொடர அழைப்பது

ஜான் (இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் . சில உலக சாதனைகள் புரிந்தவர் . அது என்ன என்று அவரிடமே நீங்க கேட்டு தெரிந்து கொள்ளலாம் )

தெக்கிக்காட்டான்

சித்ரா

சமரன்

மயில் இராவணன்

மற்றும் தொடர விரும்புபவர்கள் யாவரும்

12 comments:

 1. விநோத் காம்ப்ளி-ய கூட நான் மறந்துட்டேன். பல என்னோட ஒத்து போகுது.

  http://varadaradj.blogspot.com/2010/02/blog-post_11.html

  தொடர் பதிவு சூப்பராப்போவுது. ரைட்டு

  :)

  ReplyDelete
 2. ஸ்ரீசாந்த் பயலை யாருக்குமே பிடிக்கமாட்டுதே... எனக்கும் பிடிக்காத உருப்படாத பய...

  ReplyDelete
 3. கிரிக்கெட்....எனக்கும் இதுக்கும் கொஞ்சம் தூரம்
  அதிகம்....சோ நோ கமெண்ட்ஸ்...

  ReplyDelete
 4. ஏன் இந்த கொலை வெறி நாஞ்சில்
  யோவ் ஜெட்லி நீ நம்ம ஆள்யா

  ReplyDelete
 5. அடேங்கப்பா... ஜெட் வேகத்துல போட்டு அசத்தறீங்க.. அம்புட்டு வெறியாவா இருக்கோம்..ஹா ஹா.. அன்புடன் மணிகண்டன் நெம்ப சந்தோஷமா இருப்பார்..:)) நன்றி மீன்ஸ்.

  --
  லான்ஸ் குலூஸ்னர் நான் மிஸ் பண்ணிட்டேன்.!
  ---
  தொடருபவர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

  ReplyDelete
 6. நன்றி பலா அழைப்பிற்கு .

  ReplyDelete
 7. வேடிக்கை பாக்க வந்த என் கையிலேயும் கிரிக்கெட் விளையாட மட்டையை தூக்கி கொடுத்துட்டீகளே............! டீம் விளங்குனாப்புலதான். கிடைச்ச சான்ஸ் விட மாட்டோம்ல. ........

  ReplyDelete
 8. ஸ்ரீசாந்த்தின் திமிரால்தான் எனக்கும் பிடிக்காது...

  ReplyDelete
 9. ரொம்ப நல்லாயிருக்கு.

  ReplyDelete
 10. ட்வென்டி ட்வென்டி மேட்ச் பார்த்த மாதிரி இருக்கு மீன்ஸ்.. :)

  //ஷங்கர் Said...
  அன்புடன் மணிகண்டன் நெம்ப சந்தோஷமா இருப்பார்//

  ஆமாங்க ஷங்கர்.. என்னை தொடர வச்ச மோகனுக்கும், தொடர்ந்த நர்சிம்'க்கும் நன்றி..

  ReplyDelete
 11. ஆஹா! மீன், இதில என்னய இறக்கி விட்டிருகாயா, எனக்குத் தெரியாமப் போச்சே!! நமக்கும் இந்த விளையாட்டுக்கும் ரொம்பத் தூரம், இதுக்கு அப்பனனா கிட்டிப்புல்லு பத்திக் எழுதச் சொல்லுறீயளா வாரேன் ;-). நிஜாமாவே, ரொம்ப லயித்து இந்தக் கேம் நான் விளையாண்டதுமில்ல, பார்த்ததுமில்ல... sorry to disappoint you...

  ReplyDelete
 12. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete