Thursday, February 11, 2010

தீக்குச்சி மெழுகுவர்த்தி அரிக்கேன் விளக்கு

தீக்குச்சி



தொட்டால் பற்றிக் கொள்ளும்
கடுங் கோபக்காரன்
அந்த கோபத்திலும் ஒளி
ஏற்றும் பாசக்காரன்


மெழுகுவர்த்தி



அரும்பு மீசை வச்ச
வெள்ளைக்காரன்
உருகி உருகி வெளிச்சம்
காட்டும் தங்க மனசுக்காரன்

அரிக்கேன் விளக்கு



கம்பியில் தொங்கும்
கண்ணாடி உடம்புக்காரன்
தன் உடம்பில் கரி பூசி
வீட்டை அழகாக்கும் ஒப்பனைக்காரன்

மெழுகுவர்த்தி படம் :தெக்கிகாட்டான்

17 comments:

  1. மீன், முதல் நான்கு வரிகள் ரொம்ப உணர்ச்சிப் பூர்வமா இருந்திச்சு... கவிதைகள் அருமையா இருக்கு. எஞ்சாய்ட்! ஓ! கேட்டது மெழுவர்த்திப் படமா...

    ReplyDelete
  2. கம்பியில் தொங்கும்
    கண்ணாடி உடம்புக்காரன்
    தன் உடம்பில் கரி பூசி
    வீட்டை அழகுக்கும் ஒப்பனைக்காரன்

    ............excellent. ரொம்ப ரசிச்சேன்.

    ReplyDelete
  3. " தொட்டால் பற்றிக் கொள்ளும்
    கடுங் கோபக்காரன் " தீக்குச்சிக்கு ஏற்ற சொற்கள்.
    நன்றாகவே இருந்தது

    ReplyDelete
  4. Rombavey therittada.... varthaigalai nanraga payanpaduthi irukkey... Superb

    ReplyDelete
  5. நல்லா இருக்கு பாஸ்.நிறைய கவிதைகள் எழுதுங்கள்.

    ReplyDelete
  6. எளிமையான, ரசிக்கத்தகுந்த அழகான வரிகள்.

    ReplyDelete
  7. படமும் வரிகளும் அருமை..:)

    ReplyDelete
  8. இந்த அனைவரும் நம்ம சொந்தக்காரனுங்க...நல்லா இருக்கு நண்பா

    ReplyDelete
  9. அனைத்தும் பிடித்தது.

    ReplyDelete
  10. டியுப் லைட் விட்டுடிங்களே பாஸ்

    ReplyDelete
  11. Yaaru da unakku ipdilam elutha soli kuduthaanga???
    - Mathavan

    ReplyDelete
  12. நறுக்குன்னு இருந்துச்சு..

    சுருக்கின்னு இருந்துச்சு..


    நன்றி..

    ReplyDelete
  13. ஆமா ரோமியோ .. டேய் மாதவா, ஜான் தான் எனக்கு வாத்தியார் .
    எல்லோருக்கும் நன்றி

    ReplyDelete
  14. அருமையான கவிதை.பிடிச்சிருக்கு

    ReplyDelete