Tuesday, February 16, 2010

போரும் அமைதியும்



அமைதியான அற்புத காலை
கையில் போரும் அமைதியும்

வானில் பூத்த பூக்களை
வெண் பஞ்சு மேகங்கள்

ஆட்டத்தை தொடங்கின
தொடர் சிரிப்புடன் மேகங்கள்

என்ன விடயமடா இன்று
என்றேன் மேகங்களிடம்

மறுபடியும் தொடங்கியது
வான்மேகங்களின் ஆட்டம்

குலுங்கி குலுங்கி சிரித்து
மேக கண்கள் சொரிந்தன நீரை

கடும் போர் ஆரம்பித்தது
மண்ணில் விழும் மழைத் துளிகளுக்குள்

எதற்கு தெரியுமா
அழகான கோலம் வரைய



ஆட்டத்தை முடித்தன அமைதியாக
மகிழ்ச்சியாக கரு மேகங்கள்

எனை பார்த்து கேட்டது ஒரு மேகம்
அழகாக இருக்கிறேனா என்று

நான் சொன்னேன் வெண்மையை விட
கருப்பில் தான் அழகு என்று

எப்படி என்று கேட்டது
வெக்கத்துடன் அந்த மேகம்

நான் சொன்னேன் நீ கறுப்பானால்
பூமியும் குளிர்கிறது நீயும் குளிர்கிறாய் என்று

தடுமாறிய குரலில் சொன்னது
முகம் கருத்த மேகம்

எல்லாம் உங்கள் கையில் தான்
தயவு செய்து மரங்களை வெட்டாதீர்கள்

மழை துளிகளின் போர் முடிந்து
என் எண்ண துளிகளின் போர் தொடங்கியது

15 comments:

  1. //மறுபடியும் தொடங்கியது
    வான்மேகங்களின் ஆட்டம்
    //

    //நான் சொன்னேன் நீ கறுப்பானால்
    பூமியும் குளிர்கிறது நீயும் குளிர்கிறாய் என்று

    //

    சூப்பர்....செந்தில்....
    க்யா ஐடியா ஜி...

    ReplyDelete
  2. மழை துளிகளின் போர் முடிந்து
    என் எண்ண துளிகளின் போர் தொடங்கியது

    ........அக்கறையோடு எழுதப்பட்ட கவிதை. அருமையா இருக்குங்க.

    ReplyDelete
  3. //நான் சொன்னேன் நீ கறுப்பானால்
    பூமியும் குளிர்கிறது நீயும் குளிர்கிறாய் என்று
    //

    இந்த இடத்தில் ரசனை...

    ReplyDelete
  4. //மழை துளிகளின் போர் முடிந்து
    என் எண்ண துளிகளின் போர் தொடங்கியது//

    சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து...
    சிறுசா இருக்கையில் திருத்திக்கோ... தவறு
    சிறுசா இருக்கையில் திருத்திக்கோ...

    அது தெரிஞ்சும், தெரியாம நடந்திருந்தா திரும்பவும் வராம பார்த்துக்கோ....

    நல்ல கருத்துள்ள கவிதை அருமை.

    ReplyDelete
  5. ஓசோன் தந்தது இயற்கை... அதில் ஓட்டை போட்டவன் மனிதன்...


    இயற்கையை பாதுகாக்கும் நல் நோக்கோடு எழுதப்பட்ட உங்கள் கவிதை அருமை...

    ReplyDelete
  6. படம் + கவிதை அழகு! ஏன் ரீடர்ல அப்டேட் ஆகல :(

    வாழ்த்துகள் மீன்ஸ் ..:)

    ReplyDelete
  7. தெரியலியே பலா .இன்னைக்கு அம்பாசமுத்திரம் வரைக்கு போய் இருந்தேன் .. உங்க நினைவு வந்துட்டு போச்சு

    ReplyDelete
  8. ஆஹா, அருமையான முறையில் இருக்கே ...இயற்கை விழிப்புணர்வோட ஒரு கவிஜா. அந்த ஃபோட்டோ எங்கம்மா கிடைக்குது இதுமாதிரியெல்லாம், அருமை.

    ReplyDelete
  9. தெக்கி அண்ணே படம் google images ல கிடைச்சது

    ReplyDelete
  10. மீன் உன்னோட பதிவுலயே ரொம்ப பிடிச்சது எனக்கு இது தான்!! ரொம்ப அருமையா இருக்கு!!

    ReplyDelete
  11. \\எல்லாம் உங்கள் கையில் தான்
    தயவு செய்து மரங்களை வெட்டாதீர்கள்//

    What a Idea Sirji :)))

    ReplyDelete
  12. உண்மைதான்...நல்லா இருக்கு...

    ReplyDelete