Friday, November 13, 2009

வன்முறை - சிறுகதை

வன்முறை

சமுத்திரம் முதுகலை பட்டம் வாங்கி 4 வருடம் ஆகிறது .. தான் குடும்ப தொழிலை கவனித்து கொண்டு எப்படியும் ஒரு அரசாங்க வேலைக்கு போய் விட வேண்டும் என்பது அவன் லட்சியம் . இதற்கு இடையில் தன் உறவு பெண் செல்வியையும் காதலித்து கொண்டு இருந்தான் .

செல்வியின் அப்பா சமுத்திரத்தை இந்த வருடத்துக்குள் திருமணம் பண்ண சொல்லி வலியுறுத்தி கொண்டு இருந்தார் .

சமுத்திரமோ அரசாங்க வேலைக்கு போயிட்டு கண்டிப்பா திருமணம் பண்ணி கொள்கிறேன் என்று சொல்லி கொண்டு இருக்கிறான் .

ஒரு நாள் சமுத்திரம் கடையில் இருந்தப்ப அங்கு வந்த செல்வியின் அப்பா அவனிடம் ஒரு செய்திதாளை கொடுத்து அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் பெறுவதை சொன்னார் .

சமுத்திரம் அதை வாங்கி படித்து விட்டு ரெம்ப மகிழ்ச்சி மாமா என்றான் .
இந்த தடவை தனக்கு வேலை கிடைத்து விடும் என்று உறுதியாக சொன்னான் .
அதற்கு செல்வியின் அப்பா " ரெம்ப மகிழ்ச்சி மாப்பிள்ளை " என்றார் .

சமுத்திரம் விண்ணப்பம் செய்தான் . தேர்வு நாளும் வந்தது . தேர்வு நடை பெறும் இடம் திருநெல்வேலி தூய சவேரியார் பள்ளி .

தேர்வுக்காக சமுத்திரம் சங்கரன்கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு திருநெல்வேலி கிளம்பினான் . நன்றாக படித்து இருந்ததால் ஆவலுடன் வினா தாளை எதிர் நோக்கி இருந்தான் .

பேருந்து கிளம்பி ஒரு 30 நிமிடங்கள் தான் இருக்கு .. திடீர் என்று பேருந்து தாக்கப்பட்டது .
பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அலறி கொண்டு இருந்தார்கள்

சமுத்திரம் பதட்டத்துடன் என்ன என்று விசாரித்தான் . யாரோ ஒரு அரசியல் தலைவரை கட்சியில் இருந்தும் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கி விட்டார்களாம் . அவர் ஆதரவாளர்கள் கலவரம் செய்கிறார்கள் என்று சொன்னார்கள் .

சமுத்திரம் விசாரித்த பொழுது திருநெல்வேலி செல்வது இப்போதைக்கு கடினம் . அப்படியே சென்றாலும் தேர்வு பாதி முடிந்து விடும் என்று தோன்றியது .

சமுத்திரம் துக்கம் தாளாமல் வீட்டுக்கு திரும்பினான் .

வீட்டுக்கு வந்தால் அப்பாவுடன் 10 முதல் 15 பேர்கள் தீவிரமாக ஆலசோனை செய்து கொண்டு இருந்தார்கள் . சமுத்திரத்திடம் அவன் அப்பா " எங்க போயிட்டு வாரே " என்றார் .

அவன் நடந்த சம்பவங்களை சொன்னான் .

அதற்கு சமுத்திரம் அப்பா சொன்னார் " நம்ம தலைவர தான் கட்சிய விட்டு தூக்கிட்டாங்க . நான் தான் இந்த கலவரத்தை தூண்டி விட்டேன் என்று " எந்த வித பதட்டமும் இல்லாமல் .

சமுத்திரம் அப்படியே அதிர்ந்து நின்றான் .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

No comments:

Post a Comment