Monday, November 30, 2009

திருச்செங்கோடு - ஈரோடு

திருச்செங்கோடு எனக்கு ரெம்ப பிடிச்ச ஊர் . இது வரை இரண்டு தடவை அங்கெ போய் இருக்கேன் . இந்த தடவை போகும்போது பள்ளிபாளையம் வழிய சுத்தி ஈரோட்டுக்கு பேருந்தில் போனேன் .

போற வழி எல்லாம் பசுமையா இருந்தது . நிறைய விவசாயம் செய்துகிட்டு இருந்தாங்க . எங்கேயும் தரிசு நிலமே இல்லை . கரும்பு , நாத்து நிறைய பயிர் செஞ்சு இருந்தாங்க . பள்ளிபாளையம் போனதும் நான் பார்த்த காட்சிகள் என்னை வெகுவாக பாதித்து விட்டது .. அப்படி என்ன பாத்தீங்கன்னு கேட்குறீங்களா .. அது வேற ஒன்னும் இல்லை ஆலைகளில் குறிப்பாக சாய பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அப்படியே ஆத்துல கலந்து நிலத்துல கலந்து மொத்த பூமியையும் நாசபடுத்திகிட்டு இருக்கு .

பொதுவாக இந்த கொங்கு பகுதி மக்கள் மீது எனக்கு ஒரு நல்ல அபிபிராயம் உண்டு . தமிழ்நாட்டின் தொழில் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் ,பிறரை நன்றாக மதிப்பவர்கள் என்று . இந்த மக்கள் எப்படி இதை எல்லாம் கவனிக்காமல் சகித்து கொண்டு வாழ்கிறர்கள் என்று எனக்கு புரியவில்லை

ஈரோடு சென்று வந்த பிறகு இந்த மாதிரி ஒரு தொழில் புரட்சி நம்மை எங்கு கொண்டு செல்லும் என்று ஒரு கேள்வி எழுகிறது .

ஈரோடு செல்லும் வழியில் உள்ள நிலங்கள் எல்லாம் "கூழங்கல்கள் " அதிகம் உள்ள நிலங்கள்தான் இருக்கின்றன . இவை பெரும்பாலும் விவசாயத்திற்கு உகந்தவை அல்ல . ஆனால் இந்த மாதிரி நிலங்களை செம்மைப்படுத்தி விவசாயம் செய்து வரும் இவர்கள் இந்த கழிவு நீரால் நிலத்தை அழிக்கின்றனர் . பேருந்தில் என் பக்கத்தில் அமர்ந்து இருந்தவர் சொன்னது இன்னும் ஒரு அதிர்ச்சி தகவல் " இந்த கழிவு நீரை விவசாயத்திற்கு வேறு பயன்படுத்துகிறார்கள் என்று " .

இந்த பக்கம் ஊர் பெயர்கள் எல்லாம் ரெம்ப வித்தியசகமாக இருந்தன " பிரிதி , பெரும ளசி இன்னும் பல வித்தியாசமான பெயர்கள் .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

4 comments:

  1. திருப்பூர் கதையை முடிச்சிட்டு ஈரோட்டிற்கு நகர்த்தியிருக்காங்க போல... முறையான மறு சுழற்சி அதன் அவசியத் தேவை மற்றும் அரசாங்கத்தின் பங்கு இதெல்லாம் இல்லைன்னா, இப்பொழுது காளன்களைப் போல உள்ளே நுழைந்திருக்கும் ஏனைய அயல் நாட்டு கம்பெனிகள் தமிழக தண்ணீரையும், நிலத்தையும் ஒட்டு மொத்தமாக மாசுப் படுத்தலை யாரும் கட்டுப்படுத்தப் போவதில்லை...

    அவர்களும் ஒரு காரணத்தோடுதான் இங்கு கடையும் விரித்திருக்கிறார்கள்...

    ReplyDelete
  2. அட...

    எங்க ஊர் பக்கம் வந்தீங்களா ???

    //சாய பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அப்படியே ஆத்துல கலந்து நிலத்துல கலந்து மொத்த பூமியையும் நாசபடுத்திகிட்டு இருக்கு//

    என்ன நண்பரே செய்வது, புகார் சொன்னால் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வைத்திருப்பதாக அதிகாரிகளிடம் சொல்கிறார்கள். அவர்களும் சாயப்பட்டறையினர் தரும் 'ஆப்பத்தை' சாப்பிட்டு விட்டு விட்டுகிறார்கள்.

    ReplyDelete
  3. //திருப்பூர் கதையை முடிச்சிட்டு ஈரோட்டிற்கு நகர்த்தியிருக்காங்க போல... முறையான மறு சுழற்சி அதன் அவசியத் தேவை மற்றும் அரசாங்கத்தின் பங்கு இதெல்லாம் இல்லைன்னா, இப்பொழுது காளன்களைப் போல உள்ளே நுழைந்திருக்கும் ஏனைய அயல் நாட்டு கம்பெனிகள் தமிழக தண்ணீரையும், நிலத்தையும் ஒட்டு மொத்தமாக மாசுப் படுத்தலை யாரும் கட்டுப்படுத்தப் போவதில்லை...

    அவர்களும் ஒரு காரணத்தோடுதான் இங்கு கடையும் விரித்திருக்கிறார்கள்..//
    ஆமா அண்ணே ... இப்போ நிறைவேற்றப்பட்ட "கடல் சார் பாதுகாப்பு சட்டம்" கூட இந்த மாதிரி ஒரு வேலைக்காகத்தான் என்று சொல்லப்படுகிறது .

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. //அட...

    எங்க ஊர் பக்கம் வந்தீங்களா ???

    //சாய பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அப்படியே ஆத்துல கலந்து நிலத்துல கலந்து மொத்த பூமியையும் நாசபடுத்திகிட்டு இருக்கு//

    என்ன நண்பரே செய்வது, புகார் சொன்னால் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வைத்திருப்பதாக அதிகாரிகளிடம் சொல்கிறார்கள். அவர்களும் சாயப்பட்டறையினர் தரும் 'ஆப்பத்தை' சாப்பிட்டு விட்டு விட்டுகிறார்கள்//

    என்ன பண்றது .எல்லா இடத்துலயும் கைய வச்சாச்சு .

    உங்க ஊர் எனக்கு ரெம்ப பிடிச்சு இருக்கு . காரணம் தெரியல
    வருகைக்கு நன்றி

    ReplyDelete