Saturday, November 7, 2009

ஓம்கார் சுவாமிகளே உங்களின் தகவலுக்கு ஒரு மறுப்பு

ஓம்கார் சுவாமிகளே உங்களின் தகவலுக்கு ஒரு மறுப்பு

//பிரபஞ்ச ஆற்றல் மரங்கள் மேல் இறங்கும் பொழுது அவ்வாற்றலை ப்ராண சக்தியாக மாற்றுகிறது அல்லவா? இது 1:1 என்ற விகிதத்தில் தான் மாற்றும். ஆனால் பசுக்கள் 1:100 என்ற விகிதத்தில் மாற்றம் செய்யும்.//
http://vediceye.blogspot.com/2009_11_01_archive.html

மேற்கண்ட தகவல் உங்கள் பதிவுலிருந்து பெறப்பட்டது .. இது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை உடையது என்று எனக்கு தெரியவில்லை.

நீங்கள் சொன்னதை படித்தவுடன் இணையத்தில் தேடிய போது பசு எப்படி வெப்பமயமாதலை அதிகரிக்கிறது என்றுதான் அதிக தகவல்கள் கிடைத்தன . நீங்கள் சொன்ன தகவல் பற்றி எங்கும் கிடைக்கவில்லை .

அவை என்ன என்றால் , மாடுகளில் இருந்து வெளிப்படும் மீத்தேன் மற்றும் அம்மோனியா கிட்டத்தட்ட வாகனங்களில் இருந்து வெளிப்படும் மாசுக்கு சமாக கருதப்படுகின்றது .

இந்த விடயத்தில் உச்சகட்டமாக சில நாடுகள் பசு வளர்க்க வரி விதிக்கலாமா என்று கூட யோசித்து வருகின்றன .

மேலதிக தகவலுக்கு http://animals.howstuffworks.com/mammals/methane-cow.htm

இது போக உங்களை போன்று வேத கால வாழ்கை , பாரத கலாச்சாரம் பற்றி பேசுபவர்கள் அதிகமாக தவறான அல்லது ஆதாரமற்ற தகவல்களை கூறுவது ஏன் ?

மிக பெரிய உதாரணம் ஆனந்த விகடன் "மதன்" .

இந்த பதிவு உங்கள் இடம் இருந்து எதிர்பார்ப்பது தகுந்த ஆதாரம் அல்லது நீங்கள் சொன்ன தகவல்களை திரும்ப பெறுதல் .

உங்களுக்காக ஒரு தகவல் :

அரியானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன பசுக்களை உணவுக்காக அறுத்த சில தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து கொல்லப்பட்டனர் .. இது நமக்கு தகவல் ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ??????? ..


என்றும் அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

6 comments:

  1. நாட்டுல எத்தனையோ கார் ஓடிட்டு இருக்காமா..இந்த ஓம்கார் -உம் கொஞ்சம் ஓட்டிட்டு..சாரி ஓடிட்டு இருக்கார் :-))


    வந்தமா கோமாதா பிரியானி அதாங்க beefbiriyani தின்னமான்னு போன என்னையமாதிரி ஆளுங்களுக்கு தேவையான பதிவு தான் இது :-)

    ReplyDelete
  2. யுவன் பிரபாகரன் அவர்களே !
    எவனும் பசுக்கூட்டத்தை கள்ளத்தனமாக ஓட்டிச்சென்று/கடத்திசென்று வெட்டிக்கொல்வதில்லை. அந்தபசுவால் பயன் பெற்றவன் இனி பயன் பெறமுடியாது என்ற நிலை வரும்போது அதை நான் ஃபங்க்ஷனிங் ப்ராப்பர்ட்டியாககருதி விற்று விடுகிறான். அதை வாங்கி சென்றே வெட்டுகிறான். வித்தவனுக்கு கோவணம் அவுக்கிறத விட்டுட்டு வாங்கினவனை சத்தாய்க்கிறது, திங்கிறவனுக்கு சாபம் விடறது. பூச்சி காட்றது, வேதம் வேதகாலம்னு பீலா விடறதுல்லாம் டுபுக்கு . விட்டா அவங்க பலதும் சொல்வாங்க. அவுக வெங்காயம் சாப்பிடமாட்டாங்க உங்களையும் சாப்பிடாத சாப்டா அறுந்து விழுந்துரும்னுவாங்க விட்ருவிங்களா? அவுங்க விடறதெல்லாம் ரீலு. நீங்க ஆகாதிங்க டீலு. பீஃப் பிரியாணி விக்கிறவனுக்கு ஆல்ட்டர்னேடிவ் தொழில் இருந்தா அவன் ஏன் அதை செய்யப்போறான். நீங்க இந்த பார்ப்பானுங்க டகுலுக்கு பயந்து பிரியாணியை விட்ராதிங்க. தேடிப்பிடிச்சு சாப்பிட சொல்லலே. இதர மருத்துவ காரணங்கள், சுத்தம் சுகாதார காரணங்கள் இருந்தாலே ஒழிய இதுக்காக ஃபீல்பண்ணவும் தேவையில்லை. இதுக்கொரு மறுப்பு மொழியும் போடத்தேவையில்லை

    ச்சும்மா வந்த பணத்துல அமுதம் வாங்கி குடிச்சாலும் அது விஷமாதான் வேலை செய்யும். உழைச்சு வாங்கின பணத்துல நீங்க பீஃப் பிரியாணி சாப்பிட்டா எந்த சாமியும் கண்ணை குத்திராது. அப்படி வந்தா எனக்கு ரீடைரக்ட் பண்ணுங்க. தாளி எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லே . இவனுக ஃப்ராடு மட்டும் சக்ஸஸ் ஆகக்கூடாது. ஓகே

    ReplyDelete
  3. சித்தூர் முருகேசன் அண்ணன் சொன்ன மாதிரி இவங்க என்ன சொன்னாலும் கேட்க முடியுமா ? ஏற்கனவே இப்படி நிறைய சொல்லி நம்ம நடை முறைய மாத்திட்டாங்க ..

    வருகைக்கு நன்றி சித்தூர் முருகேசன் (எனது தம்பி பெயர் கூட முருகேசன் ) , யுவன் பிரபாகரன்

    ReplyDelete
  4. சித்தூர் அண்ணே இவங்க சொல்லுற சாமியே நம்ம சாமி .. எல்லா சாமியும் நம்மாலே மாதிரியா கருப்பு அண்ணே . நம்ம சாமிய நம்மகிட்டே இருந்து பிரிச்சிட்டு அதுக்கு புது கதையும் எழுதி நம்மள நம்ம சாமிகிட்டே இருந்து பிரிச்சிட்டங்க

    ReplyDelete
  5. இதுல என்ன கொடுமைனா பசு மாடு வளர்க்கிற நமக்கு இவங்க படம் எடுக்கிறது அதுவும் பசுவை பற்றி மனப்பாடம் பண்ணிட்டு வந்து ..

    ReplyDelete
  6. அட்றா சக்கை ! அட்றா சக்கை ! இனி அந்த பிருகஸ்பதியே இறங்கி வந்தாலும் நம்மை ஒன்னும் பண்ண முடியாது. முழிச்சிக்கிட்டோமில்லே !

    ReplyDelete