Saturday, November 7, 2009

தென் மாவட்ட மக்களின் கடவுள் சார்ந்த பெயர்கள்

தென் மாவட்ட மக்களின் கடவுள் சார்ந்த பெயர்கள்

இங்கு பெரும்பாலும் முருகன் சார்ந்த பெயர்களே அதிகம் .. அதற்கு அடுத்தபடியாக சிவன் மற்றும் அம்மன் பெயர்கள் அதிகம் .

இவற்றை தவிர புகழ் பெற்ற வீரர்களின் பெயர்களும் உண்டு .

முதலில் முருகன் சார்ந்த பெயர்கள் பற்றி காண்போம் .

வேலு - இந்த பெயர் அதிகம் பேருக்கு உண்டு.. ஒரே குடும்பத்தில் நிறைய வேலுக்கள் உண்டு. உதாரணத்திற்கு எனது குடும்பத்தில் பெரிய வேலு , சின்ன வேலு , வேலு , கறுத்த வேலு ( இந்த கறுத்த சம்பந்தமான பெயர்கள் அதிகம்) ,ஐவேல் , வேலம்மா , வேலுத்தாய் , வேல் ராஜ் ,

முருகன் , கந்தன் ,ஆறுமுகம் - இது அனைவரும் அறிந்ததே

மேலே சொன்னவை எல்லாம் பொது பெயர்கள் .


கடற்கரை , கடலாச்சி , கடல் துரை - இந்த பெயர்கள் எல்லாம் திருச்செந்தூரில் கடலோரமாக இருக்கும் வேலனை குறிப்பன

இங்கு ஒரு முக்கியமான விடயம் என்ன என்றால் இந்த முருகன் பெயர் கொண்ட மக்கள் பெரும்பாலும் தன் குல தெய்வ கோவில் தவிர வேறு கோவிலுக்கு அதிகம் செல்லாதவர்கள் .

அடுத்து சிவன் சார்ந்த பெயர்கள் :

கருப்பசாமி - இந்த பெயர் பொதுவாக சிவனை குறிப்பது .. அறிந்தோ அறியாமலோ இந்த சாமி நாட்டுபுற மக்களின் முதல் தெய்வம் ஆகிவிட்டது .

கருப்பு சம்பந்தமான மற்றுமொரு பெயர் - கருஞ்சிவன் (இது என் தாத்தா ஒருவரின் பெயர்)

மாடசாமி , சுடலை - இந்த பெயர் சுடுகாட்டில் வாழும் சிவன் பெயர் .

அய்யனார் - இதுவும் சிவன் பெயர்தான்

ஆதிமூலம் - சிவன் தான் ஆதி என்பதை உணர்த்தும் பெயர் .

குருசாமி - இது சிவன் ஒரு குரு என்பதை சொல்லும் பெயர்

பெரியசாமி - இது சிவன் ஒரு பெரியவன் என்பதை சொல்லும் பெயர் .


அம்மன் பெயர்கள் :


இசக்கி - இது தென் மாவட்டங்களில் ஆண் பெண் இருபாலர்க்கும் வைக்கப்படும் பெயர்

மாரி - இது தென் மாவட்டங்களில் ஆண் பெண் இருபாலர்க்கும் வைக்கப்படும் பெயர்

இது தவிர தன் குல தெய்வங்களின் பெயர்களும் உண்டு .

தென்மாவட்டங்களில் பொதுவாக முன்னோர்களின் பெயரைதான் குழந்தைகளுக்கு வைப்பது வழக்கம் .. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்த சில மாற்றங்கள் இந்த பெயர் வைக்கும் பழக்கங்களை பாதித்து இருக்கின்றன .

இப்படி பெயர் வைத்த இந்த மக்கள் பெரும்பாலும் குல தெய்வ கோவில்களை தவிர வேறு எந்த கோவிலுக்கும் (குறிப்பாக பெரிய கோவில்கள் ) சென்றது கிடையாது .

இப்போ பெயர்களையும் சிதைத்து சாமின்னு சொல்லிட்டு கண்டவன்கிட்டேயும் கை கட்டி நிக்கிறோம் ...

இதுக்கு எங்க சாமிய பார்க்க போன நான் தொட்டு கும்பிட என்ன குளிக்க வச்சு அலங்காரம் பண்ணி அழகு பாக்க கூட முடியும் .




நீங்களும் இந்த மாதிரி பெயர்கள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

6 comments:

  1. வேல்ச்சாமி, வேலுச்சாமியை மறந்துவிட்டீர்களே!

    சமுத்த்ரக்க்னி, சமுத்திரப்பாண்டி, சுமுத்திரம் போன்ற திருச்செந்தூர் முருகனைக்குறிக்கும் பெயர்கள் தூத்துக்குடி மாவட்டமத்தில் பிரபலம். கட்ற்கரை, கடற்கரையாண்டி என்றும் முருகன் பெயருண்டும்.

    எழுத்தாளர் சு.சமுத்திரம் தூத்துக்குடி மாவட்டத்துக்காரர்.

    செந்திவேல், செந்தில், செந்தூர்பாண்டி - இவையும் பிரபலம். திருச்செந்தூர் முருகன் பெயர்தான். இப்பெயர்கள் இம்மாவட்டத்தைத்தாண்டி தமிழகம் முழுக்க காணப்படும்.

    ஆனாலும், பதிவாளரே...இப்பெயர்களெல்லாம் மக்கள் இப்போது விரும்பாமல், சம்ஸ்கிருதப்பெயர்களையே பிள்ளைகளுக்கு இடுகின்றனர்.

    கிராமங்களில், ஐஸ்வரியா, ப்ரியா (பல் ப்ரியாக்கள்) கார்த்திக், சந்தோஷ், ஆனந்த், ரமேஷ், சுரேஷ் , மகேஷ், சாயி, அஸ்வினி, ச்வாதி, இப்படியெல்லாம் ஆகி, பழந்த்தமிழ்ப்பெயர்கள் அழிந்துகொண்டே வருகின்றன.

    ReplyDelete
  2. //வேல்ச்சாமி, வேலுச்சாமியை மறந்துவிட்டீர்களே!

    சமுத்த்ரக்க்னி, சமுத்திரப்பாண்டி, சுமுத்திரம் போன்ற திருச்செந்தூர் முருகனைக்குறிக்கும் பெயர்கள் தூத்துக்குடி மாவட்டமத்தில் பிரபலம். கட்ற்கரை, கடற்கரையாண்டி என்றும் முருகன் பெயருண்டும்.

    எழுத்தாளர் சு.சமுத்திரம் தூத்துக்குடி மாவட்டத்துக்காரர்.

    செந்திவேல், செந்தில், செந்தூர்பாண்டி - இவையும் பிரபலம். திருச்செந்தூர் முருகன் பெயர்தான். இப்பெயர்கள் இம்மாவட்டத்தைத்தாண்டி தமிழகம் முழுக்க காணப்படும்.
    //

    கள்ளபிரான் வருகைக்கு நன்றி .. இந்த பதிவு சுமார் ஒரு 10 மாதங்களுக்கு முன்னால் யோசிச்சது .. அதனால் தான் எல்லா பெயர்களையும் கொண்டு வர முடியவில்லை ..

    வேலுசாமிய விட்டதற்கு காரணம் அது வேலுவில் வந்து விட்டதால்தான் .

    நீங்கள் சொன்ன சமுத்திரம் , செந்தூர்பாண்டி எனது உறவுகளில் அதிகம் . ...

    ReplyDelete
  3. சுப்ரமணி,குமார்,குமரன்,
    நெல்லையப்பன்,காசி,விஸ்வ-நாதன்,மணிகண்டன்,சுந்தர்,
    காந்திமதி,கோமதி,ஆவுடையம்மாள்,
    வேலம்மாள்,சங்கரி,செல்வி,
    தெருவிற்கு 10 பேர் இந்த பெயருடையவர்கள் தான் இருப்பர் திருநெல்வேலியில்...

    ReplyDelete
  4. ஆமாம் நீங்க சொல்லுவது சரிதான் .. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. தென்மாவட்டம் மட்டுமல்ல ஈழத்தின் சகல இடங்களிலும்(ஈழம் உங்களுக்கு தென்பாகம்தான்) இப்பெயர்கள் நிறைய இருக்கின்றன!

    வேலாயுதம் - ஐங்கரன் - சண்முகநாதன் - சண்முகசுந்தரம் - கடம்பன் - கார்த்திகேயன் - நீலகண்டன் -கைலாயபிள்ளை - அரிகரன் - அபிராமி -மங்களாம்பிகை - மகாலட்சுமி - ஜெயலட்சுமி - வாணி - கலைமகள் - கார்த்திகா -குமரன் - சுப்பிரமணியன் - கோகுலன் கோவிந்தன் - சடாட்சரன் -மயூரன் - கடவுளுடைய பெயர் மாத்திரமல்ல - லவன் -அர்ச்சுனன்- பார்த்தீபன் - புராண நாயகர்களுடைய பெயர்களும் அடியார்களின் பெயர்களும் இருக்கின்றன!

    ReplyDelete
  6. நீங்கள் சொல்வது மிகச் சரி....குலதெய்வப் பெயர்கள் தென்னகத்தின் பகுதிகளிலே மட்டும் தான் காணப்படுகிறது....தென்னகத்தின் மக்களே ஆதி தமிழினம் என்று கூற ஏதுவான சான்று இது....இதப் பற்றி ஒரு சிறிய பதிவைப் பதிந்துள்ளேன்.....நேரம் இருந்தால் படித்து பாருங்கள் தோழர்...!

    ReplyDelete