Friday, November 13, 2009

சென்னை மனிதர்கள்

நான் சென்னை வருவதற்கு முன்னால் சென்னை எந்திரமயமான வாழ்க்கை வாழும் மனிதர்களை நிரம்பிய ஊர் என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன் . நான் பார்த்த இரண்டு சம்பவங்கள் அதை மாற்றின .

நான் சூளைமேட்டுல அப்போ இருந்தேன் .. அலுவலகம் வடபழனில . கங்கை அம்மன் கோவில் தெரு வழிய 30 நிமிடம் நடந்த வடபழனி வந்துரலாம் .. வர வழில ஒருத்தர் தள்ளு வண்டில இளநீர் விற்பார் . தினம் அவர்கிட்டே ஒரு இளநீர் வாங்குவது பழக்கம் . அப்படி தான் ஒரு நாள் வாங்கும்போது " தம்பி ஒரு நிமிடம் அப்படி என்றார்" .
சரி அப்படினுட்டு நான் காத்து இருந்தேன் . பக்கத்தில ஒரு கடைல பீடி வாங்கிட்டு திரும்புனார் .. அந்த பக்கம் ஒரு நாய் அவர பாத்துகிட்டு இருந்தது .. அவர் வந்திட்டியா அப்படின்னு சொல்லிட்டு 50 காசுக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்தார் .

ஒரு நாள் வடபழனில இருந்து திருவல்லிகேணிக்கு பேருந்துல போய் கிட்டு இருந்தேன் , நல்ல மழை பேஞ்சுகிட்டு இருந்தது . பேருந்துல ஒரே ஒருத்தர் மட்டும் நின்னுகிட்டு இருந்தார் . ஒரு 20 வயசு இருக்கும் .. பெண்கள் பக்கம் ஒரு அம்மா மட்டும் ஒரு சீட்ல உக்காந்து இருந்தாங்க . அந்த அம்மாவுக்கு ஒரு 40 வயசு இருக்கும் . பேருந்து ஒரு நிறுத்தத்தை தாண்டி இருக்கும் .. அப்பவும் அந்த இருக்கை காலியாதான் இருந்தது .

அந்த அம்மா நின்னுகிட்டு இருந்தவரை குப்பிட்டு " ராசா என் நின்னுகிட்டு வரே . வா இங்கே வந்து ஊக்காரு . நீ என் புள்ளை மாதிரி கூச்ச படதே " அப்படின்னு சொன்னாங்க .


இது தவிர சென்னையில் என்னை கவர்ந்த மனிதர்கள் என்றால் அது கிராமத்தில் இருந்து வந்து நல்ல வேலை ஒன்றுக்கு சென்று தான் குடும்பத்தை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று கையில் சான்று இதழ்களுடன் கண்களில் கனவுகளை சுமந்து கொண்டு மடிப்பு கழியாத ஆடைகளுடன் ஓவ்வொரு நாளும் தான் வாழ்கையை தேடும் இளைஞர்கள்


அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

7 comments:

  1. நல்ல பதிவு..

    உண்மைதான், சென்னையிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்..

    நிறைய எழுதுங்கள்..

    ReplyDelete
  2. அதுசரி, அதென்ன மீன் துள்ளி செந்தில் என்ற பெயர்? காரணமென்ன?

    ReplyDelete
  3. தம்பீ,

    எப்படி இருக்க என்ன திடீர்னு எழுத ஆரம்பிச்சிட்ட :-) ?

    ஊருக்கும் வந்திட்டு சுத்திப் போட்டும் திரும்ப வந்து சேர்ந்துட்டேன், திட்டாதே மின் அரட்டையில பேசுவோம் மிச்சத்தை...

    ம்ம் பதிவைப் பத்தி சொல்லணுமே... (நல்ல?) மனுசய்ங்க எல்லா இடத்திலும் இருப்பாய்ங்க என்ன ஒண்ணு அதன் விகிதாச்சாரம் ஏறும்/இறங்கும் இடத்திற்கு தகுந்த மாதிரி அம்புட்டுத்தேய்ன்...

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி பழூர் கார்த்தி.. எனது சொந்த ஊர் மீன்துள்ளி , நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ளது .

    telecom testing panreengala

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி இதயம்

    ReplyDelete
  6. தெகா அண்ணாச்சி உங்ககிட்டே மின் அரட்டையில பேசுறேன்

    ReplyDelete