Monday, January 11, 2010

விடியும் வரை பேச்சு துணையாக


சில்லிடும் பனியும்
நிலவின் ஒளியும்

பின்னிரவை ஏகாந்தமாக்கி
கொண்டு இருந்தன

யாரோ நடந்து வரும் சத்தம்
கம்பை தட்டி கொண்டே

இரவுடன் தனிமையில் உரையாடலா
என்று யோசிக்கும் நேரம்

சத்தம் கூர்மை ஆகிக்கொண்டு
காதை நெருங்கியது

கூர்க்கா வந்து நின்றார்
கூச்சத்துடன்

என்ன என்று கேட்டால்
பேசியே நாட்கள் ஆகிவிட்டது

உங்களுடன் கொஞ்சம் பேச
வேண்டும் என்றார்

பேசி கொண்டே இருந்தார்
கேட்டு கொண்டே இருந்தேன்

விடியும் வரை பேச்சு துணையாக

4 comments:

  1. என்ன என்று கேட்டால்
    பேசியே நாட்கள் ஆகிவிட்டது
    ....................பாவம் ......... இரவின் தனிமையில், மௌன ராகம் மட்டும் கையில் இருக்கும் தடியின் தாளத்துக்கேற்ப வாசித்து கொண்டு இருப்பவர்.

    ReplyDelete
  2. ரொம்ப தனிமையா மீன்ஸ்..
    பொங்கல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. மௌனமான நேரம்...அவர் மனதில் என்ன பாரம்...

    மௌன இருளின் காவலன்...மௌனத் துணைவன் அல்லது மௌனக் காவலன்...
    ஐயோ விதம் விதமா கற்பனையை ஓட விட்டுட்டீங்களே....

    ReplyDelete
  4. இயந்திரமாகிப் போன உலகில்
    பேச்சு குறைந்துவிட்டதே உண்மை.
    பக்கத்து வீட்டுகாரனிடம் சிநேகப் புன்னகை மட்டுமே..!
    சில நேரம் அதுவும் மறந்து..!

    நல்ல கவிதை

    ReplyDelete