Sunday, January 24, 2010

கி ரா பக்கங்கள்

கி . ரா என்று அழைக்கப்படும் கி . ராஜநாராயணன் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவலை சேர்ந்தவர் . தற்சமயம் புதுச்சேரியில் வசித்து வருகிறார். கரிசல் இலக்கியத்தின் இவரது பங்களிப்பு ரெம்ப முக்கியமானது . இவரது எழுத்துக்களை முதன் முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது கீற்று தளம் ஆகும் . அதில் இவரது எழுத்துக்கள் எனக்கு பிடித்து போனது . அதன் பின்பு நான் வாசித்த இவரது "கோபல்ல கிராமத்து மக்கள் " கிட்டத்தட்ட நான் வாழ்ந்த மண்ணின் வாழ்க்கையை பிரதிபலித்தது .இதன் காரணமாக அவரது எழுத்துகள் இன்னும் எனக்கு நெருக்கமாகின .



அதன் பின்பு இந்த வருடம் நடந்த புத்தக கண்காட்சியில் அவரின் கரிசக்காட்டு கடுதாசி வாங்கி படிக்க ஆரம்பித்தேன் . அதில் வந்த சில சுவாரசியமான விடயங்களை இந்த பதிவில் தொகுத்து உள்ளேன் ..


காபி வில்லை :

10 வருடங்களுக்கு முன்பு கூட நமது கிராமங்களில் "நீத்தண்ணி" காலையில் எழுந்து குடிக்கும் பழக்கம் இருந்தது . இது எதற்காக என்று பாத்தால் காலையில் எழுந்து இதை குடிப்பதால் உடல் சுடு குறைகிறது . ஆனால் இன்று நீத்தண்ணி குடிப்பது மறைந்து காலையில் என்திச்சதும் காபி குடிக்கும் பழக்கம் வந்து விட்டது . இது தானாக வரவில்லை நம்மிடம் புகுத்தப்பட்டது . எப்படி முதலில் காபி நமக்கு அறிமுகம் ஆனது என்று பார்ப்போம் .


முதன் முதலாக காபியை நமக்கு அறிமுகமானபோது அது வில்லையாக அறிமுகப்படுத்தப்பட்டது . ஏன் என்று பாத்தால் அப்ப மக்களுக்கு எவ்ளோ போடா வேண்டும் என்று தெரியாது . அதனால் இந்த மாதிரி ஒரு ஏற்பாடு . அந்த காலத்தில் காபி ஒரு வீட்டில் குடிக்கிறார்கள் என்றால் அது சமுகத்தில் மதிப்பிற்கு உரிய விடயமாக கருதப்பட்டது . இப்படித்தான் படிப்படியாக எல்லோரும் தன குடும்ப மதிப்பை சமுதாயத்தில் காப்பாற்ற காபி குடிக்க ஆரம்பித்து இன்று அது காலை கடமைகளில் ஒன்றாக ஆகிப்போனது . அது போக விருந்தாளிகள் தங்களுக்கு கொடுக்கப்படும் காபியை மறுத்தாலோ அல்லது மிச்சம் வைத்தாலோ அது மரியாதையை குறைவான செயலாக கருதப்பட்டது .

இது போன்றுதான் நம்மிடம் இருந்த நல்ல உணவு வகைகளை எல்லாம் பின் தள்ளி நாம் சமுக மதிப்புக்காக அரிசி சார்ந்த உணவுகளை அதிகம் தின்று வருகிறோம் .

மோட்டார் வண்டி (பேருந்து ) :

அந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் நடை பயணத்தில் தான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது . வெள்ளைக்காரன் காலத்தில் மோட்டார் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது மோட்டார் வண்டி முதலாளிகள் எல்லாம் மக்களை மோட்டார் பயணத்திற்கு பழக்கப்படுத்த ரெம்ப தவிச்சு போய்ட்டாங்க. அதனால் அந்த காலத்தில் யாரவது வண்டி வேண்டும் என்று கேட்டல் வீடு தேடி வந்து அழைத்து போவார்களாம் . அது போக நடந்து போகும் மக்களிடம் வண்டியை நிப்பாட்டி வர்ரீங்களா என்று கேட்டு தான் மக்கள் இந்த மோட்டார் பயணத்துக்கு பழகினார்களாம் .

இன்று பேருந்துக்காக நாம் எப்படி அல்லல்படுகிறோம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் .

சாப்பாடும் ஆயுளும் :


இது ஒரு கிராமத்து புனைவு என்றாலும் அதில் ஒரு அர்த்தம் இருப்பதால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
ஒவ்வொரு மனிதனையும் படிக்கும்போது அவனுக்கு உண்டான உணவு அளவையும் சேர்த்து முடிவு பண்ணிடுவராம் கடவுள் .. எவனொருவன் நிறைய திங்குறானோ அவன் சீக்கிரம் கடவுள் கிட்டே போய்டுவான் . எவனொருவன் கொஞ்சம் கொஞ்சம் திங்குறனோ அவன் கடவுளிடம் மெதுவாக போறான் .

பானக்கரப்பம் :
இது ஒரு உடலுக்கு குளிர்ச்சி தரும் வீட்டிலயே செய்யப்படும் ஒரு பானம் ஆகும் . பானக்கரப்பம் என்பது மருவிய சொல்லாக இருக்கலாம் . பானையில் புளி மற்றும் கருப்பட்டிய தண்ணி ஊத்தி குறஞ்சது 6 மணி நேரங்கள் கழித்து நன்றாக அதை கலக்கி அதன் பின்பு குடித்தால் அவ்ளோ சுவையாக இருக்கும் .

எனக்கு மிகவும் பிடித்த பானம் இது . எனக்கு சென்ற வருடம் அம்மை போட்டு இருந்தப்ப தினம் தினம் பானக்கரப்பம் குடிப்பது உண்டு . எங்க குல சாமி கோவிலில் கொடை முடிந்ததும் எல்லோருக்கும் இது வழங்கப்படுவது உண்டு .

16 comments:

  1. ஒரு நல்ல இலக்கியவாதியை அறிமுகுப்படுத்தியதற்கு நன்றி நண்பரே...

    நீத்தண்ணி மறந்து போச்சு.....

    ReplyDelete
  2. எல்லாம் நிதர்சனமான விசயங்கள். நீத்தண்ணின்னா இப்பவுள்ள பலபேருக்கு என்னன்னே தெரியாது.

    ReplyDelete
  3. பானக்கரப்பம் எனக்கு தெரியாது..:)
    இந்த மாதிரி பெரிய தலைங்கள பத்தி போடும்போது கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் சரி பார்த்துடுங்க, :))

    ReplyDelete
  4. மீனு, நிறைய பழைய விசயங்கள். இதில ஒண்ணு கூட எனக்குத் தெரியல. பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி. சீக்கிரம், சீக்கிரம் கி. ரா வை முடியப்பா. காத்துக்கிட்டு இருக்கோம்ல.

    //எவனொருவன் கொஞ்சம் கொஞ்சம் திங்குறனோ அவன் கடவுளிடம் மெதுவாக போறான் .//

    இது நிறையா sense கொடுக்குது, லாஜிக்கலாவே!

    ReplyDelete
  5. எங்க பக்கத்துல நீசத்தண்ணின்னு சொல்லுவாங்க. தண்ணி ஊத்தி வெச்ச பழய சோத்துல இருந்து எடுத்து எடுத்த தண்ணியில உப்பு சேர்த்து காலையில சாப்பிட்டா குளிர்ச்சியா இருக்கும்...

    நல்ல பகிர்வுங்க!

    பிரபாகர்.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி நாஞ்சில் , பிரபா , பலா , சுரேஷ் , தெகா , சங்கவி .

    ReplyDelete
  7. //பானக்கரப்பம் :
    //

    சின்ன வயசில்
    குடிச்ச மாதிரி நினைவு....

    ReplyDelete
  8. நீங்க ரசிச்சு படித்ததை எங்களுடனும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. நம்மூருல அதை பானகம், பானகிரயம்னு சொல்லுவாங்க,

    என்னைப் பொறுத்தவரை, கோபல்லபுரத்து மக்களை விட அதன் முதல் பாகமான கோபல்ல கிராமம் சுவாரசியமான புத்தகம்

    ReplyDelete
  10. சங்கர் அப்போ அதையும் படிக்க முயற்சி பண்றேன் . வருகைக்கு நன்றி சித்ரா , ஜெட்லி , சங்கர்

    ReplyDelete
  11. நல்ல சுவாரஸ்யமான இடுகை.
    கி.ரா-வை வாசிக்க தூண்டுகிறது!

    இது வரை அவரது படைப்புகள் எதையும் வாசித்ததில்லை. (ஆ.வி, குமுதம் போன்றவற்றில் வந்த சிறுகதைகளை கணக்கில் சேர்க்காமல் பார்த்தால்)

    ReplyDelete
  12. காலவோட்டத்தில் எல்லாமே மறந்து போகிறது. அவ்வப்போது எவர் மூலமாவது ஞாபகப் படுத்தப்படுகிறது. இந்த முறை உங்களால். நன்றி மீன்துள்ளியான்

    ReplyDelete
  13. உங்கள் ரசனையில் நாங்கள் நனைந்தோம் நல்ல பதிவு

    ReplyDelete
  14. செந்தில் பிரமாதமான பதிவு.... கிராம வாழ்க்கையிலிருந்து நாம் இழந்து வரும் விஷயங்களை எடுத்துரைத்த பதிவு... வாழ்த்துக்கள்...

    பானக்கரம் - நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் வீட்டில் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கள் வீட்டில் செய்வார்கள்... இப்பொழுதெல்லாம் இல்லை... ஏதாவது அய்யப்ப பூஜைகளில் குடித்தால் தான் உண்டு.... வைரமுத்கு பாற்கடல் என்ற புத்தகத்திலே பானக்கரம் செய்யும் முறையை அழகாய் விவரித்திருப்பார்....

    ReplyDelete
  15. //ஒவ்வொரு மனிதனையும் படிக்கும்போது அவனுக்கு உண்டான உணவு அளவையும் சேர்த்து முடிவு பண்ணிடுவராம் கடவுள் .. எவனொருவன் நிறைய திங்குறானோ அவன் சீக்கிரம் கடவுள் கிட்டே போய்டுவான்//

    அருமைங்க. உண்மை தான் இது

    ReplyDelete