Friday, January 1, 2010

மாயாண்டி குடும்பத்தார் கிளப்பிய கேள்வி

மாயாண்டி குடும்பத்தார் கிளப்பிய கேள்வி

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஒரு காட்சி . மணிவண்ணன் இறந்த பின் சுடுகாட்டில் தருண் கோபிக்கு மொட்டை அடிக்காமல் கை முடியை மட்டும் சிரைத்து விட்டு விடுவார்கள் . அதற்கு நடிகர் இளவரசு என்று நினைக்கிறேன் சொல்லும் காரணம் "தருண்கோபியின் மதினி மாசமாக இருப்பதால் புள்ளைக்கும் தாய்க்கும் எதுவும் ஆகி விட கூடாது " என்று சொல்லுவார் .

யாருக்காவது ஏன் இப்படி ஒரு செய்முறை என்று தெரிந்தால் சொல்லவும் ..

இது தவிர , தென் தமிழகத்தின் சில சாதிகளில் சுடுகாட்டுக்கு பிணங்களை தூக்கி செல்லும்போது "நாற்காலியில் உக்கார வைத்து தான் கொண்டு செல்வார்கள்" ஆனால் பெரும்பாலான தமிழ் படங்களில் படுக்க வைத்துதான் தூக்கி செல்கிறார்கள் .

யாருக்கவாது இது பற்றி தெரிந்தால் சொல்லவும்

17 comments:

  1. கேள்விய எழுப்பிட்டீங்க.. பதில் யாராவது சொல்றாங்களான்னு பாப்போம்...

    ReplyDelete
  2. Mr.மீன்துள்ளியான்,

    நான் உங்களுக்கு ஒன்னு சொல்லட்டுமா."கேள்வி கேட்பது ஈஸி ஆனால் பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்".

    ReplyDelete
  3. மிரட்டல் உங்களுக்கு சரியான பெயர் தான் ..
    இந்த விடயங்களை பற்றி பல பேரிடம் கேட்டு பதில் இல்லாமல் தான் இங்கே வந்து உள்ளேன் ..

    இது நம்மை பற்றியும் நம் பழக்கங்கள் பற்றியும் அறிந்து கொள்ளுவதற்கு தான் ...

    யாரவது சொல்லுவார்கள் என்று ஆசையில் பதிவிடப்பட்டது ......

    ReplyDelete
  4. நான் உண்மையை சொல்லுகிறேன்.
    எனக்கு தெரியவில்லை...

    யாராவது சொல்றாங்களான்னு பாப்போம்...

    ReplyDelete
  5. மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி நண்பர்களே ..
    புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்

    ReplyDelete
  7. நண்பரே..

    வீட்டில் ஒரு பிறப்பு ஏற்பட இருக்கும்போது தலையை மொட்டையடிப்பது கூடாது என்று சிலர் சொல்வார்கள்..!

    மரணத்திற்காக மொட்டையடிப்பது என்பது ஆவியை சாந்தப்படுத்த என்பார்கள். இப்பது அதே வீட்டில் வாரிசும் வரவிருப்பதால் இறந்த ஆவி மீண்டும் பிறக்க போகிறது என்ற அர்த்தத்தில் முழுமையான துக்கத்தை கொண்டாட வேண்டாம் என்பார்கள். இதுதான் இந்த அரைவெட்டுக்குக் காரணம்..! (எனக்குத் தெரிந்த விஷயம் இவ்வளவுதான்)

    ReplyDelete
  8. உண்மை தமிழன் அண்ணே தகவலுக்கு நன்றி .....

    ReplyDelete
  9. அவரவர் குடும்ப அல்லது பாரம்பர்ய வழக்கங்கள் காரணம். அவரவர் நம்பிக்கையை பொறுத்ததும், வாழ்ந்த சூழல், வசதிகளைப் பொறுத்து கடைப் பிடித்து வந்த வழக்கங்களினாலும் ஏற்பட்ட பழக்கங்களாய் இருக்கலாம்

    ReplyDelete
  10. //நான் உங்களுக்கு ஒன்னு சொல்லட்டுமா."கேள்வி கேட்பது ஈஸி ஆனால் பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்"//

    கன்னாபின்னான்னு ரிப்பிட்டு அடிக்கிறேன்,,

    எப்படிங்க இந்தமாதிரி டவுட்டுல்லாம் வருது? இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்... அவ்வளவுதான்

    ReplyDelete
  11. நாஞ்சில் நீங்களுமா ... நம்மள சுத்தி நடக்கிற விடயங்கள பத்தி தெரிஞ்சுக்கத்தான் ....

    நீங்க சொல்லுறது சரிதான்ஸ்ரீராம்

    ReplyDelete
  12. ம்ம்ம்... நல்ல இன்ரஸ்டிங்கான கேள்வியா இருக்கே. படுக்க வைச்சு கொண்டு போயி மண்ணுக்குள்ளர/எரிக்க போறதுக்கும் உட்கார வைச்சு கொண்டு போயி அதையே செய்யப் போறதிற்கும் இடையில கூட ஒரு அரசியல் இருக்காய்யா!?

    சரி, என்னவா இருக்கலாம், அதிலும் ஆளுமை/சாதீயம் சார்ந்து ஏதாவது இருக்குமோ?

    ReplyDelete
  13. தெரியலை அண்ணே .. யார்கிட்டேயாவது விசாரிப்போம்

    ReplyDelete
  14. அந்தக் காலத்திலே தீக்குச்சிக் கிடையாது.கிராமன்களிலே ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீடிற்குக் கூட கொஞ்சம் நெருப்பை எடுத்துப் போவார்கள்.
    சுடுகாட்டிற்கு நெடுப்பு வேண்டுமென்பதற்காகக் கொள்ளிச் சட்டி எடுத்துக் கொண்டு போனார்கள்.
    இப்போது மின்சார இடுகாட்டிற்குக் கொள்ளிச் சட்டி எடுத்துப் போவது ஏன் என்று கொஞ்சம் சொல்வீர்களா?
    மூங்கில் , மரம் கிடைச்சால் பாடை,இல்லாவிடால் நாற்காலி.
    பல ப்ழக்கங்கள் மூடப் பழக்கங்கள், தேவையில்லாதவை, மாற்றிக் கொள்ளப் பா வேண்டியவை.

    ReplyDelete
  15. Tarun Gopiya mudiyodave pakka mudiyilla, ethula mottai adicha, unil aluga ellam madu mutti sethu poiduvanuga. May this why Ilavarasu would have said that.

    ReplyDelete
  16. நல்லா கெளப்பறாய்ங்கய்யா கேள்வியை....

    உட்கார வைத்து கொண்டு போனால் ஊர்க்காரர்கள் பார்க்க வசதியாக இருக்கும்.படுக்க வைத்து தூக்கி கொண்டு போகும் போது யாரும் பார்க்க முடியாது என்பதே எனக்கு தெரிந்த காரணம் மீனு...

    ReplyDelete