நெடுங்குருதி எழுத்தாளர் எஸ் . ராமகிருஷ்ணன் எழுதிய நாவல் . எஸ்.ரா விருதுநகர் மாவட்டம் மல்லன்கிணறு கிராமத்தில் பிறந்து தற்போது சென்னையில் வசிந்து வருகிறார் . முதலில் எஸ் . ரா எழுத்துக்கள் எப்படி எனக்கு அறிமுகம் ஆகியது என்றால் நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் ஆனந்த விகடனில் அவர் எழுதிய "துணை எழுத்து " தொடராக வந்து கொண்டு இருந்தது . அதை படிக்க ஆரம்பித்த பின்பு அவரது எழுத்துக்கள் மிகவும் பிடித்து விட்டன. எந்த அளவுக்கு என்றால் ஆனந்த விகடன் வாங்கியதும் முதலில் துணை எழுத்து படிக்கும் அளவுக்கு . அதன் பின்பு அவர் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்களை படித்தாலும் அது துணை எழுத்து அளவுக்கு ஒட்டவில்லை .
அதன் பின்பு அவருடைய நெடுங்குருதி நாவல் பற்றி நிறைய பேர் சொன்னதும் , இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கி படித்து முடித்தேன் .
நெடுங்குருதி வேம்பலை என்னும் கற்பனை கிராமத்தில் வாழும் வேம்பர்கள் பற்றிய கற்பனை கதை . வேம்பர்கள் வெள்ளையர்களின் காலத்தில் குற்ற பரம்பரை சட்டத்தின் கீழ் அடக்கப்பட்டவர்கள் .
குற்ற பரம்பரை சட்டம் என்பது என்ன என்றால் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் ஆட்சியாளர்களால் சந்தேகிக்கப்படும் மக்களின் பெரு விரல் கை ரேகையை பதிந்து சென்று விடுவார்கள் .இப்படி பதிவு செய்யப்பட்டவர்கள் இரவு நேரங்களில் கச்சேரி என்று அழைக்கப்படும் ஒரு ஆடு மாடுகள் அடைத்து வைக்கப்படும் இடம் போன்ற ஒரு இடத்திற்கு மாலை 6 மணி ஆனதும் இந்த மக்கள் சென்று விட வேண்டும் .கச்சேரியில் இருப்பது என்பது சாதாரண விடயம் கிடையாது .கச்சேரியில் தூங்க இடம் இருக்காது . இரவு முழுவதும் உட்கார்ந்தபடியே தான் இருக்க வேண்டும் . விடியும் வரை அங்கே இருந்து தான் அந்த இரவில் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் தான் வாழ்நாள் முழுவதும் . இந்த சட்டத்தால் 15 வயது முதல் உள்ள ஆண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர் . இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் கச்சேரியில் அடைந்து மானம் இழந்து வாழ விரும்பாமல் தான் பெரு விரலை வெட்டி கொண்டவர்கள் நிறைய பேருண்டு .அதன் பின்பு பாதிக்கப்பட்ட மக்கள் போராடி அந்த சட்டத்தை தூக்க செய்தனர் .
முதலில் நெடுங்குருதி படிக்க ஆரம்பித்தும் எந்த ஈர்ப்பும் இல்லாமல் சென்றது . சில பக்கங்கள் வாசிச்சதும் கதை தான் ஓட்டத்தின் வழியே இழுத்து சென்றது .நானும் ஆற்று தண்ணிரில் அடிது செல்லப்படும் இல்லை போன்று அதன் கூடவே சென்றேன் . இது வேம்பலையில் வாழும் நாகு குடும்பம் மற்றும் நாகுவை சுற்றியே வருகிறது . வேம்பலை போன்ற ஒரு வெயிலின் வெக்கை ஆட்சி செய்யும் கிராமத்தின் கதையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது .
வேம்பர்கள் எப்படி குற்ற பரம்பரை சட்டத்தால் அடக்கப்படுகிறார்கள் அதற்கு முன்பு அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது போன்ற விடயங்கள் நம்மை 70 வருடங்களுக்கு பின்னாலே இழுத்து செல்கிறது .
கிராமங்களுக்கே உரிய முயல் வேட்டை பற்றிய பகுதிகள் சிறு வயதில் நான் முயல் வேட்டைக்கு சென்றதை நினைவுப்படுத்தியது .
இப்படி விறுவிறுப்பாக செல்லும் நாவல் அடுத்த தலைமுறையினர் குற்ற பரம்பரை சட்டத்தில் இருந்து விடுபட்டு வாழும் வாழ்க்கை பற்றி பேசும்போது சுவாரசியம் குறைந்து விடுகிறது . நாவலின் இறுதி பகுதிகள் நாவலை எப்படியாவது முடிக்க வேண்டும் என சவ்வு மாதிரி இழுக்கப்பட்டு திடீர் என்று முடிக்கப்பட்டது போல் உள்ளது .
இந்த நாவலின் தலைப்புக்கு ஏற்ற மாதிரி வேம்பலை தன் மக்களின் குருதியை ருசி பார்த்துகொண்டே இருக்கிறது .பொதுவாக சிறு நிலங்களின் வரலாறுகள் பதிவு செய்யப்படுவது இல்லை . அப்படி பதிவு செய்தது பல விடயங்களை வெளிக்கொண்டு வந்து உள்ளது இந்த நாவல் . எப்படி இருப்பினும் நெடுங்குருதி ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு பற்றி தமிழ் எழுத்து உலகில் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது . கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவலில் இதுவும் ஒன்று .
புத்தகம் பற்றிய பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteநெடுங்குருதி நம்ம லிஸ்ட்ல இருக்கு....
ReplyDeleteபாப்போம் டைம் கிடைக்கும் போது படிக்கணும்
பகிர்வுக்கு நன்றி மீன்ஸ்..:))
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் பிரபாகர் உங்களை அறிமுகம் செய்திருக்கிறார் பார்த்தீர்களா..??
இதோ பாக்குறேன் பலா
ReplyDeleteநானும் படிச்சிருக்கேன்.நல்லா சொல்லியிருக்கிறீர்கள். அப்பிடியே புக்ஃபேர்ல வாங்குன மத்த புத்தகங்களையும் படிச்சுட்டு எழுதுங்க நண்பா..
ReplyDeleteமீன், அதுக்குள்ளும் முடிச்சிட்டியா? புதினத்தைப் போலவே, உன்னுடைய புத்தக விமர்சனமும் அழுத்தமாகத்தான் வந்திருக்கிறது. :-)
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநெடுங்குருதி இன்னும் படிக்கவில்லை. எஸ்.ரா புத்தகன்கள் எனக்கும் பிடிக்கும். துணை எழுத்து சிறந்த புத்தகம்...
ReplyDeleteநன்றி தெகா அண்ணே . குமார் , புலி ,மயில்
ReplyDeleteஎஸ். ரா அருமையான எழுத்தாளர். இந்த வாரம் விகடனில் கூட அன்பளிப்பு (GIft) பற்றி என்ன அருமையா எழுதிருக்கார் படிசீங்களா? நாவல் குறித்த பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபார்த்தேன் மோகன் ..ரெம்ப பிடிச்சு இருந்தது
ReplyDeleteநாவல் குறித்த பகிர்வு அருமை..
ReplyDeleteur not mention about second half more & description about madurai streets(i enjoyed to read those part much ,i roamed lot in madurai ) naagus hostel life & while police ride people hide under well water r missing
ReplyDelete