நெல்லை பயண கட்டுரை
பொங்கலுக்கு போறதுக்கு அனந்தபுரி ரயிலில் டிக்கெட் போட்டு இருந்தேன் .. ஊருக்கு போறதுக்கு முன்னாலே சில சுவாரசியமான விடயங்கள் நடந்தது .அது பத்தி தான் இந்த பதிவு .
எழும்பூர் ரயில் நிலையத்தில ஒரு ஆள் நின்னுகிட்டு இருந்தார் .(ஒரு ஆள்தானா அப்படின்னு கேக்காதீங்க ) . அவர எங்கயோ பாத்தமாதிரி இருந்தது . அவர் கிட்ட நீங்க திருநெல்வேலியா அப்படின்னு கேட்டேன் . ஆள் முடிவெட்ட பாத்து போலீஸா அப்படின்னு கேட்டேன் . ஆமா என்றார் . கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தோம் . திடீர் என்று சார் பொங்கலுக்கு எதாவது பாத்து செய்யுங்க அப்படி என்றார் . என் மரமண்டைக்கு ஒன்னும் புரியல . சார் ஒரு 1௦௦ ரூபாய் கொடுத்தா உங்க பேர சொல்லி தண்ணி அடிச்சுக்குவோம் அப்படி என்றார். அவர் ஏற்கனவே கொஞ்சம் குடிச்சு வேற இருந்தார் போல வாடை அடிச்சது . அப்புறம் அந்த ஆள சமாளிச்சு காசு கொடுக்கமா அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு ..
எப்படி தான் தெரியாத ஆள் கிட்ட கூச்சப்படாம காசு கேக்குறாங்க அப்படின்னு தெரியலை. ரெம்ப மோசமான ஒரு நிலைமையை நோக்கி போறதைதான் காட்டுது இது .
இந்த குடிப்பழக்கம் ஒரு மனிதனை எவ்ளோ தூரம் சுய மரியாதையை (இந்த காலத்துல இப்படி ஒன்னு இருக்கா அப்படின்னு கேக்காதீங்க) இழக்க செய்கிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவை இல்லை .இப்படி தான் குடிக்க வச்சு நிறைய பேர ஏமாற்றுகிறார்கள் போல .
எனக்கும் என் நண்பனுக்கும் டிக்கெட் போட்டு இருந்தேன் . என்னோட நண்பன் வராத காரணத்தால அவனோட நண்பன் ஒருத்தன் வந்தான் . ரயில் பரிசோதகர் வந்தார் . வழக்கம் போல டிக்கெட்டும் , ஐடி கார்ட்யும் கேட்டார் . நான் கொடுதேன் சரின்னு சொல்லி டிக் அடிச்சிட்டு போய்ட்டார் . எனக்கு ஒரு மாதிரி இருந்ததால கொஞ்சம் நேரம் தூங்கிட்டேன் .. கைய தலகாணி மாதிரி வச்சு .. எந்திச்சதுக்கு அப்புறம் தான் அதோட விளைவு தெரிஞ்சது . சரியான வலி .
ரயில் விழுப்புரம் போறதுக்கு 3௦ நிமிடத்துக்கு முன்னாலே ஒரு பறக்கும் படை ஆள் வந்தார் . வந்து எங்களோட berth number சொல்லி ஐடி கார்டு காமிங்க அப்படினார். நான் காமிச்சேன் .. என் கூட வந்த பயன் வேற பேர்ல பயணம் செய்றதால அவன் பேர் அப்பா பேர் எல்லாம் கேட்டார்.. அவன் சொன்னான் . அதுக்கு அப்புறம் அந்த பறக்கும் படை ஆள் இல்லை நீங்க பொய் சொல்லுறீங்க .உண்மையா சொன்ன அபாரதம் மட்டும் தான் . இல்லேன்னா 3 மாசம் சிறை தண்டனை அப்படின்னு மிரட்டினார் . அவன் வேற வழி இல்லாம உண்மையா சொன்னான் . அப்புறம் 608 ரூபாய் அவருக்கு மொய் எழுதிட்டு அப்படியே பயணத்தை தொடர்ந்தோம் .
அப்ப அந்த பறக்கும் படை நபர் சொன்ன முக்கியமான விடயங்கள்
1 . இந்த மாதிரி ஆள் மாறும்போது 48 மணி நேரத்துக்கு முன்னால ரயில் நிலையத்தில் எழுதி கொடுத்தா மாத்திடலாம்
2 . குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் ரேஷன் கார்டு கொடுத்து 24 மணி நேரத்தில மாத்திடலாம் .
3 . இல்லை மேல சொன்ன ரெண்டும் முடியல அப்படினா ஒரு waiting லிஸ்ட் டிக்கெட் எடுத்துட்டு அதே டிக்கெட்ல பயணம் செய்யலாம் . உறுதி செய்யப்பட்ட டிக்கட்க்கு பரிசோதகரிடம் ஒரு கடிதம் வாங்கிட்டு ரயில் நிலையத்தில் கொடுத்தால் 5௦% திரும்ப கிடைக்கும் .
இந்த மாதிரி சமயத்துல யார் பயணம் செய்கிறாரோ அவர் டிக்கெட்டில் பெயர் இருக்கும் நபரின் ஐடி கார்டு நகல் கொண்டு வந்து கொடுத்தால் போதும் என்று ஒரு விதி கொண்டு வரலாம் ..
இதுல என்ன கொடுமை என்றால் காகித டிக்கெட்களுக்கு இந்த மாதிரி எந்த வரம்பும் கிடையாது .. மின் டிக்கெட்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சினை . நிறைய ஊர்ல டிக்கெட் இல்லாம போறாங்க. அவங்கள எல்லாம் ஒன்னும் பண்ண முடியல . இந்த மாதிரி விடயங்கள தமிழ்நாட்டுல மட்டும் செய்து ரயில்வே வருமானம் பாக்குறாங்க . ரயில்வே இந்த மாதிரி வர அபராதத்தை ஒரு வருமானமாக பாக்க ஆரம்பித்தது இன்னும் கொடுமை.
கேட்டா முகவர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க பாடுபடுறோம் அப்படின்னு சொல்லுவாங்க . இவங்களே முகவர்களுக்கு சிறப்பு login கொடுத்து அவங்களுக்கு டிக்கெட் அதிகமா புக்கிங் பண்றமாதிரி செஞ்சிட்டு இந்த மாதிரி விடயங்களையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க . எல்லாம் நம்ம நேரம் .
அப்புறம் ஒரு சக பயணி அவன தூங்க சொன்னார். அதுக்கு ஒருத்தர் 608 ரூபாய் கொடுத்துட்டு எப்படிங்க தூங்குவார் அப்படின்னு கிண்டல் பண்ணினார் .. அப்புறம் எல்லோரும் தூங்க ஆரம்பிச்சிட்டாங்க . நான் ஏற்கனவே தூங்கிட்டதால எனக்கு தூக்கம் வரலை . என்னோட நண்பன கிண்டல் பண்ணிய நண்பர் சொன்னார். இந்த பறக்கும் படை ஆள் எப்போவும் ரெம்ப தெளிவான ஆள். நிறைய பேருக்கு ஆப்பு அடிச்சு இருக்கார் என்றார். அந்த பறக்கும் படை ஆளைய ஒரு நெல்லை பயணி வெறுப்பு ஏற்றி தப்பித்ததை சொன்னார்.
நெல்லை நபருக்கு 35 வயசு இருக்கும் போல . அவர் கிட்டே ஐடி கார்டு கேட்டதும் அப்படி எதுவும் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். அப்போ வாக்காளர் அடையாள அட்டை இருக்குமே அதை குடுங்க அப்படின்னு பறக்கும் படை ஆள் சொல்லி இருக்கார். அதற்கு நெல்லை நபர் எனக்கு ஓட்டே இல்லை . அப்புறம் வாக்காளர் அட்டைக்கு எங்கே போறதுன்னு சொல்லி இருக்கார் . அப்புறம் என்கிட்டே இருக்கிறது இந்த வங்கி அட்டை (ATM கார்டு) தான் . இதை ஐடி கார்ட நினைத்து கொள்ளுங்கள் என்று சண்டைய போட்டு தப்பிச்சு இருக்கார். இந்த பறக்கும் படை ஆளுக்கும் ஒன்னும் பண்ண முடியல போல .
அப்படியே பேசிகிட்டு இருந்தோம் .. கொஞ்ச நேரத்துல தூங்கிட்டோம் . காலைல எந்திரிச்ச ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சின்ன பயன் அவங்க மாமா கூட பொங்கலுக்கு அவன் தாத்தா ஊருக்கு போறேன்னு சொல்லி பேசிக்கிட்டு வந்தான் . அந்த பையனுக்கு மரங்கள் பற்றி அவ்ளோவா தெரியல . வேலி மரத்த பாத்து பலா மரம் என்றான் . இப்படி தான் நாம நம்ம தலைமுறைய வளர்த்து கொண்டு இருக்கிறமோ
நல்லபயண அனுபவம்தான். மின் டிக்கட் பயன்படுத்துற பலபேருக்கு அதன் விதிமுறைகள் தெரிவதில்லை. அதனால்தான் இத்தனை பிரச்சனைகளை சந்திக்கவேண்டி வருகிறது.
ReplyDeleteவிதிமுறைகளை படிக்கிறதும், அதன்படி நடக்கறதும் நம்ம இந்திய குடிமகன்களக்கு சுட்டுப்போட்டாலும் வராதே...
வருங்கால சந்ததியினர் பற்றி சொன்னத யோசிக்கவேண்டிய விசயம்தான் செந்தில்...
நல்ல அனுபவ பகிர்வு நண்பா,
ReplyDeleteஇந்த முறை என் அண்ணனுக்கு டிக்கெட் கிடைக்காததால் நெல்லை போக இயலவில்லை.
அந்தளவுக்கு பயங்கர டிமாண்ட்...
அங்க பதிவர் சந்திப்பு குறித்த கட்டுரைகளை எதிர் பார்த்து இருக்கிறேன்..
நெல்லை பயணம்........ எங்களையும் உங்கள் அனுபவ பதிவு ரயிலில் ஏற்றி அழைத்து சென்றதுக்கு நன்றி.
ReplyDeleteஅங்க போய் என்ன பண்ணினீங்கன்னு படிக்கலாம்னு வந்தா, ஊருக்கு போன கதையை சொல்லி முடிச்சிடீங்களே,
ReplyDelete//அதுக்கு அப்புறம் அந்த பறக்கும் படை ஆள் இல்லை நீங்க பொய் சொல்லுறீங்க .உண்மையா சொன்ன அபாரதம் மட்டும் தான் . இல்லேன்னா 3 மாசம் சிறை தண்டனை அப்படின்னு மிரட்டினார் . அவன் வேற வழி இல்லாம உண்மையா சொன்னான் . அப்புறம் 608 ரூபாய் அவருக்கு மொய் எழுதிட்டு அப்படியே பயணத்தை தொடர்ந்தோம் .//
ஆனாலும் ரொம்ப நல்லவங்களா இருந்திருக்கீங்க
சங்கர் ஊருக்கு வந்து ஒன்னும் பண்ணலை .. நல்ல தடுமம் (மூக்கடைப்பும் சளியும் ) பிடிச்சுகிச்சு ..வீட்ட விட்டு எங்கேயும் போகலை . அதனால தான் ஒன்னும் எழுதலை .
ReplyDelete//ஆனாலும் ரொம்ப நல்லவங்களா இருந்திருக்கீங்க//
ReplyDelete:)
நல்ல பயண அனுபவம் ..
ReplyDeleteதிடீரென இதுமாதிரி நடக்கும் போது என்ன பண்றதுன்னே தெரியாம போகும் ..
அப்போ கவனமா நடக்கனும் ..
நல்லாருக்கு ..
நல்ல பயண அனுபவம் உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி....
ReplyDeleteமீன்ஸ்.. நீ சொன்ன தகவல்கள் ரொம்ப நல்லது..
ReplyDelete4. E-Tickets
ReplyDelete4.1
The provision for specifying I/D proof at the time of booking an e-ticket has been dispensed with. The accommodation booked is not transferable and is valid only if one of the passenger booked on an e-ticket in a transaction presents any of the five identity cards(Voter identity card/Passport/ Pan card/Driving license/Photo I/d card of Central/State Government) in original during train journey and same will be accepted as proof of identity failing which the passengers will be treated as travelling without ticket and shall be dealt with as per extant Railway Rules.//
இதுக்கு என்ன அர்த்தம் மீன்ஸ்..?? ஒருத்தர் மட்டும் ஐடி வெச்சிருந்தா போதும்.மத்தவங்களுக்கு தேவை இல்லை. நீங்க உங்க நண்பரை வராத நண்பரின் பெயரை சொல்லி தயார் பண்ணி இருக்கனும். தமிழ்நாடு எல்லை தாண்டி நீங்க ஏசி கோச்ல கூட ஆல் இந்தியா சுத்தலாம்..
//அவர எங்கயோ பாத்தமாதிரி இருந்தது . அவர் கிட்ட நீங்க திருநெல்வேலியா அப்படின்னு கேட்டேன் . ஆள் முடிவெட்ட பாத்து போலீஸா அப்படின்னு கேட்டேன் . ஆமா என்றார் . கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தோம் . திடீர் என்று சார் பொங்கலுக்கு எதாவது பாத்து செய்யுங்க அப்படி என்றார் . என் மரமண்டைக்கு ஒன்னும் புரியல . சார் ஒரு 1௦௦ ரூபாய் கொடுத்தா உங்க பேர சொல்லி தண்ணி அடிச்சுக்குவோம் அப்படி என்றார்//
அது சரி மொதல்லயே 7 1/2 வரும்னு அசரீரி சொல்லி இருக்கு நீங்க தான் கவனிக்கல போல::))
பயண அனுபவங்களோட மூன்று முக்கிய குறிப்புகள் தந்ததுக்கு நன்றி.
ReplyDeleteபலா நீங்க சொல்லுறது சரிதான் . 1 வருடத்துக்கு முன்னால அப்படிதான் இருந்தது . முகவர்கள் மற்றும் பயணிகள் சில பேர் பண்ணும் தவறால் இப்படி ஆரம்பிச்சிட்டாங்க..
ReplyDeleteஎன்னோட நண்பன் எல்லாத்துக்கும் சரியாய் தான் பதில் சொன்னான் .. இருந்தாலும் அவன் மொய் எழுதிற மாதிரி ஆயிடுச்சு .
//எப்படி தான் தெரியாத ஆள் கிட்ட கூச்சப்படாம காசு கேக்குறாங்க அப்படின்னு தெரியலை. ரெம்ப மோசமான ஒரு நிலைமையை நோக்கி போறதைதான் காட்டுது இது//
ReplyDeleteநல்லாருக்கு ..
நல்ல பகிர்வு.
ReplyDelete