Friday, December 4, 2009

இளையராஜாவின் இசை

இளையராஜாவின் இசை

என் வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு விடயங்களில் ஒன்று "இளையராஜாவின் இசை "
நான் சிறு வயதில் பெரிதாக திரை பாடல்கள் கேட்டது கிடையாது . கல்லூரி காலகட்டங்களில் தான் திரை பாடல்கள் அதிகம் கேக்க ஆரம்பிச்சேன் .

அந்த கால கட்டங்களில் எனக்கு அறிமுகமான இசைதான் இந்த இளையராஜாவின் இசை .

ஊருக்கு போறப்ப எல்லாம் ஒரு கேசெட் வாங்குவேன் .. இப்படியே கொஞ்ச நாள் கேட்டு கிட்டு இருந்தேன் ..

அப்புறம் தான் இணையத்தில் தேடி பாட்டுகளை கேக்க ஆரம்பித்தேன் . ஒரு ஒரு பாடலும் ஏதாவது ஒன்றை எனக்கு ஞாபகபடுத்தும் .

வா வா அன்பே - அக்னி நட்சத்திரம் - இந்த பாட்டு கேக்கும்போது ஏதோ ஒரு மலை பகுதில பயணம் செயுற மாதிரி தோணும் ( செந்தாழம்பூ பாட்டு மாதிரி )

அந்தி மழை பொழிகிறது - இதுவும் இதுக்கு வா வா அன்பே பாட்டு மாதிரி தான்

புத்தம் புது காலை பொன்னிற வேலை - இந்த பாட்டு கேக்கும் போது பெங்களூர் மடிவால மார்க்கெட் காலைல எப்படி இருக்குமோ அந்த மாதிரி ஒரு பீல் இருக்கும்

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் - இந்த பாட்டு கேக்கும் போது பெங்களூர் ல இருந்து ஓசூர் பயணம் செய்யிறமாதிரி தோணும்

என்ன பாட்டு பாட என்ன தாளம் போட - இந்த பாட்டின் இசை மாட்டு வண்டில போற மாதிரி தான் இருக்கும் .. ஆனா எனக்கு வானம் என்ற பெரிய போர்வைல முளைச்சு இருக்கிற வெள்ளி நட்சத்திரங்களை மாட்டு வண்டில படுத்துகிட்டு பாத்துகிட்டே ஒரு கிராமத்தை நோக்கி போற மாதிரியே இருக்கும் .

இந்த பாட்டு எந்த படம்னு யாரவது சொன்ன நல்ல இருக்கும் .. டவுன்லோட் லிங்க் கொடுத்த ரெம்ப மகிழ்ச்சி

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி - இந்த பாட்டு கேக்கும் போது காவேரி ஆறு அப்படியே மனசுல வந்து போகும்

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது - அப்படியே ஆத்தங்கரைல ஒரு டூயட் பாடுற மாதிரியே தோணும்

மேகம் கருக்குது மழை வர போகுது வீசி அடிக்குது காத்து - இந்த பாட்டை கேக்கும்போது ஒரு கிராமத்து விலக்குல இருந்து ஊருக்குள்ள போகும்போது அப்படியே நடக்கிற நிறைய விடயங்கள் வருமே அது எல்லாம் தோணும்

அமுதே தமிழே அழகிய மொழியே எனது உயிரே - இந்த பாட்டு கேக்கும் போது ரெம்ப மகிழ்ச்சிய இருக்கும்

ராஜா ராஜா சோழன் நான் - இந்த பாட்ட கேக்கும் போது நமக்கு ஒரு காதலி இருந்து அவ கூட அப்படியே பேசிகிட்டே யாரும் இல்லாத ரெண்டு பக்கமும் மரம் இருக்கிற சாலைல போகணுமுன்னு தோணும் (காதலிக்கு எங்கே போறது .. அதனால பாட்டை மட்டும் கேட்டுகிறது )

வானம் கீழே வந்தால் என்ன பூமி மேலே போனால் என்ன - இந்த பாட்டு கேக்கும் போது எதுக்குமே கவலை கொள்ளாமல் மகிழ்ச்சிய இருக்கணும்னு தோணும்

நிறைய பாடல்கள் இருக்கு இப்போதைக்கு நினைவுக்கு வரலை .

இது தவிர நிறைய இளையராஜா பாடல்கள் பிடிக்கும் . குறிப்பாக அவருடைய வாத்திய தொகுப்புகளான "nothing but wind" , "how to name it " ரெம்ப பிடிக்கும் .

இந்த வாத்திய தொகுப்புகளை எனது நண்பன் ஸ்ரீராம் எனக்கு அறிமுகபடுத்தினான் .

ரெம்ப சோர்வா இருந்த இந்த வாத்திய தொகுப்புகளை கேட்ட மனசு அப்படியே லேசா ஆகிடும்

இளையராஜாவின் இசை எனக்கு பெரிய துணையாக வாழ்கை முழுவுதும் வந்து கொண்டு இருக்கிறது .


இளையராஜாவின் இசையை கேட்டு தான் எனக்கு கிராமிய இசை மீது ஒரு பிடிப்பு வந்தது .. அது தவிர வாத்தியங்களையும் ரசிக்க வைத்தது இந்த இசை குறிப்பாக "நாதஸ்வரம் , கிடார் மற்றும் வயலின்" . இளையராஜா பாடல்களை வரும் உப இசை ரெம்ப பிடிக்கும் .சில சமயங்களில் பாட்டை விட்டு விட்டு அதை கவனிப்பேன் .

இளையராஜாவின் இசையை இந்த உலகில் இருந்து அழித்து விட்டால் நான் இசையை கேட்பது ரெம்ப குறைஞ்சுடும்

என்ன புதிய பாடல்களில் எல்லாம் இளையராஜாவின் இசையில் ஒரு உயிர் இருப்பதாக எனக்கு தோணவில்லை அது பா வாக இருந்தாலும் நந்தலலாவாக இருந்தாலும் .

பழைய பாடல்கள்ள வர்றா மாதிரி இசையில் உயிர் இல்லை .


இந்த மாதிரி உங்களுக்கு பிடித்தவற்றையும் பகிர்ந்து கொள்ளவும்

அன்புடன்

மீன்துள்ளி செந்தில்

9 comments:

  1. ரொம்ப சிலாகிச்சு எழுதியிருக்கே. இன்னும் நிறைய பாடலகள் இருக்கே, அதனையும் சேர்த்திருக்கலாம்.

    வித்தியாசமா மனசில நின்ற பாடலகளை வைத்து தைத்திருக்கிறாய். :-)

    ReplyDelete
  2. (காதலிக்கு எங்கே போறது .. அதனால பாட்டை மட்டும் கேட்டுகிறது )//

    என்னது, காதலியெல்லாம் பிடிச்சு கொண்டு வந்து கையிலயா கொடுக்க முடியும்... அதுக்கெல்லாம் காத்துக்கிட்டு இருக்காம, காதலியப்பா ... இங்கே என்ன பொண்ணுங்களுக்கா பஞ்சம், நீ வேற நெம்பாஆஆஆ நல்ல பையனா இருக்கே... :))

    ReplyDelete
  3. அண்ணே வருகைக்கு நன்றி .... பார்ப்போம் நீங்க சொல்லுறது நடக்குதானு

    இன்னும் கொஞ்சம் அப்படின்னு யோசிச்ச மலையோரம் மயிலே விளையாடும் குயிலே , கரகாட்டகாரன் பட பாடல்கள் , மம்மி பேரு மாறி என் ஊரு வேளச்சேரி அப்படின்னு ஒரு பாட்டு நெஞ்சத்தை கிள்ளாதே படத்துல உண்டு (கொஞ்சம் நகைச்சுவையான பாட்டு ).

    ReplyDelete
  4. சக்களத்தி என்ற படத்தில் அப்பாடல் இடம் பெற்றுள்ளது. மேலும் அதே படத்தில்"வாடை வாட்டுது. ஒரு போர்வை கேட்குது" என்ற மிக அற்புதமாக இருக்கும்

    ReplyDelete
  5. wow wonderfull song, we are same catogory, take care

    ReplyDelete
  6. Ilaiyaraja is a treasure. ஒரு பதிவு போதாது. காதல் பாடல்கள், நகைச்சுவை, சோக பாடல்கள் என்று பல வாரியாக பிரித்து அதற்கே தனி ப்ளாக் போடலாம்.

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி சித்ரா ... நீங்க சொல்லுறது உண்மை தான் ..

    ReplyDelete
  8. சக்களத்தி பாடல்களை இங்கே கேட்கலாம் :
    http://www.thiraipaadal.com/albums/ALBIRR00081.html
    மட்டுமல்ல, எல்லா ராசா பாட்டுக்களும் (அதாவது, தமிழ்) இங்கே இருக்குங்க :-)

    ReplyDelete