Saturday, December 5, 2009

ரேணிகுண்டா - வாழ்த்துக்கள் பன்னீர்செல்வம்

ரேணிகுண்டா - வாழ்த்துக்கள் பன்னீர்செல்வம்

தமிழில் ரெம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கும் ஒரு நல்ல திரைப்படம்

தேவ கோட்டையில் தன் பெற்றோர் கொலைக்கு பழி வாங்கும் முயற்சியில் தோற்று சிறைச்சாலைக்கு சென்று அங்கு அறிமுகமாகும் நான்கு நண்பர்களுடன் தன் பெற்றோர் கொலைக்கு பழி தீர்த்து அங்கு இருந்து தப்பி ரேணிகுண்டா சென்று அங்கு காதல் வயப்பட்டு நண்பர்களையும் தன் உயிரையும் இழக்கும் ஒரு வாலிபனின் (ஜான் ) வாழ்க்கை தான் இந்த படத்தின் கதை . இந்த சாதாரண கதையில் திரைக்கதையும் வசனமும் காட்சி அமைப்புகளுடன் சேர்ந்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றன

இந்த படத்தின் சிறப்பம்சங்கள்

படத்தின் முக்கியமான காட்சிகளில் மழை வருவது போன்ற காட்சி அமைப்பு

சிறைச்சாலையில் முதன் முதலாக அடாவடியாக அறிமுகமாகும் நால்வர் கூட்டணி (குறிப்பாக டப்பா )

சிறைச்சாலையில் ஜான் பெற்றோர்களை கொன்றவனை கொள்ள முடிவு எடுக்கும்போது பின்னால் தோன்றும் மின்னல் (இயக்குனரின் காட்சி அமைப்பு திறமையை காட்டுகிறது )

தான் எப்படி இந்த அடிதடி தொழிலுக்கு வந்தோம் என்று நிஷாந்த் சொல்லும் காட்சி சமுதாயமும் குற்றவாளிகளை உருவாக்குவதில் பங்கு வகிப்பதை இயக்குனர் பதிவு செய்ய உதவி உள்ளது

முதன் முதலாக ஜான் கொலை செய்ய தயங்கும் காட்சியும் அதற்கு அவன் நண்பர்கள் கடைபிடிக்கும் ஒரு விதமான கிடுக்கு பிடியும் அருமை

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து TTR ஐ கலாய்க்கும் காட்சி சூப்பர்

ரேணிகுண்டா வந்து ஜான் மற்றும் டப்பா காதல் செய்யும் விதம் அருமை அதிலும் குறிப்பாக டப்பாவின் வாசனைகள் மற்றும் நடிப்பு அருமை .

இந்த காதல் காட்சிகளில் டப்பாவின் கெட் அப்பு உண்மையில கலக்கல் ..டப்பா ஜானிடம் யாரை ஜான் காதலிக்கிறான் என்று கேக்கும் காட்சியும் , டப்பா தன் நண்பர்களிடம் "என் ஆள இன்னும் நீங்க பாக்கல" என்று சொல்லும் காட்சியும் கலக்கல்

ரேணிகுண்டாவில் இந்த ஐந்து பேர் கூட்டணி செய்யும் கொலையும் அதற்கு இயக்குனர் தேர்வு செய்த இடமும் அருமை . எப்படி கொலை செய்தோம் என்று இந்த கூட்டணி விவரிக்கும் காட்சி மிரட்டல்

ஜானின் காதலியாக வரும் பெண்ணிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் தான் பால் முகம் மாற தோற்றத்தால் மனசில் நிக்கிறார்.

இந்த பெண்ணின் அக்காவாக வரும் பெண்ணின் நடிப்பு அருமை . அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரு குறும்படம் .

சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும் விதம் மிக அருமை

இந்த படத்தில் இயக்குனருக்கு பெரிதும் உதவியவர்கள் ஒளிப்பதிவாளர் சக்தியும் வசனகர்த்தா சிங்கம்புலியும் தான் ...

இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்தும் முகம் சுளிக்கும் விதத்தில் எதுவும் இல்லை

இறுதி காட்சியில் ஜான் கொல்லபடுவதாக சொல்லுவது ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது . இது தான் இந்த படத்தின் வெற்றியோ என்னவோ ? (இதை ஏற்கனவே ஒரு பதிவர் எழுதி இருந்தார் . அவர் சொன்னது சரி தான் என்று தோன்றுகிறது )

படம் முடிஞ்சதும் எல்லோர்கிட்டயும் ஒரு அமைதி திரை அரங்கை விட்டு வெளியே வரும் வரை ........

மறுபடியும் வாழ்த்துகள் பன்னீர்செல்வம் மற்றும் குழு .. மீண்டும் ஒரு நல்ல படத்தை எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து

அன்புடன்

மீன்துள்ளி செந்தில்

9 comments:

  1. I haven't seen the movie, yet. The review is good.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சித்ரா

    ReplyDelete
  3. நல்ல அலசல் நண்பா....
    என்னடா மீன்துள்ளி என்று ஒரு பெயரா வித்தியாசமா இருக்கே என்று நினைத்தேன்..
    பார்த்தால் இந்த வாரம் சனிக்கிழமை தினத்தந்தியில்
    உங்கள் ஊர் பெயர் வந்தது ...

    அப்போது நீங்கள் தான்
    என் நினைவுக்கு வந்தீர்கள்.....

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ஜெட்லி . எங்க ஊரை பத்தி என்ன போட்டுருந்தாங்க

    ReplyDelete
  5. ஒரு வரி கதைன்னு கேள்வி பட்டு இருக்கேன்... இப்போதான் பாக்குறேன்... உங்கள் பதிவின் இரண்டாம் பத்தி அருமை... எல்லோருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் கதையின் முடிவை அறிவிக்காமல் இருத்தல் நன்று....

    ReplyDelete
  6. நல்லா எழுதிருக்க நண்பா.. ஆன க்ளைமாக்ஸ்‍ சொல்லாத :(... ஜெட்லியும் அப்டிதான் க்ளைமாக்ஸ் சொல்லிட்டாரு :(

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி 250WcurrentIsay , ச ம ர ன் .
    இனிமேல் கிளைமாக்ஸ் சொல்லலை .

    ReplyDelete
  8. வித்தியாசமான ஊரு
    பெயர் என்று போட்டிருந்தார்கள்....
    @ ச ம ர ன்
    படத்தில் கிளைமாக்ஸ்
    ஒன்னும் புதிசில்லை பாஸ்....
    யூகிக்க முடிந்த ஒன்று ஆனாலும்
    அது நமக்கு சோகத்தை தரும்...

    ReplyDelete