மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள் செய்யும் அநியாயம்
இந்த ஏர்டெல் மட்டும் இல்லை . எல்லா மொபைல் சர்வீஸ் வழங்கும் நிறுவனங்களும் இப்போது யாருக்காவது கால் பண்ணி * ஐ அமுக்கினால் அவர்களின் காலர் பாட்டு நமக்கு அப்படியே மாறுகிற மாதிரி வச்சு இருக்காங்க...
இந்த முறை ரெம்பவும் மோசமான முறை .. இப்போ எல்லாம் குழந்தைகள் மொபைல வச்சு விளையாடுறது சாதாரணம் .. அப்படி சின்ன பசங்க மொபைல வச்சி விளையாடும்போது சும்மா நான்கு நம்பர் கால் பண்ணி * பட்டன் அமுக்கிட்ட அவ்ளோ தான் 100 ரூபாய்க்கு மேல எடுத்துரானுங்க .
இது மட்டும் இல்லை கிரிக்கெட் ஸ்கோர் அது இது அப்படின்னு சொல்லி ஏகப்பட்ட காசை புடுங்கிகிறாங்க (பெரிய புடிங்கிகள் தான் இவனுங்க )
என்னோட நண்பன் ரெண்டு தடவை என் மொபைல எடுத்து காலர் சாங் வச்சு விட்டு 100 ரூபாய்க்கு ஆப்பு வச்சுட்டான் ..
இவங்களுக்கு இப்படி கொடுக்கிறதை விட இல்லாதவங்களுக்கு கொடுத்த மன திருப்தியாவது இருக்கும் ..
TRAI ல complaint பண்ணலாம் என்றோ அல்லது அதிருப்தியை சொல்லலாம் என்றால் அதுவும் கிடையாது .
இந்த புடிங்கிகள் என்னைக்கு தான் திருந்துவாங்களோ
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
தப்போ ரைட்டோ பி.எஸ்.என்.எல்லையே மெயின்டெய்ன் பண்ணுங்க.
ReplyDeleteவருகைக்கு நன்றி ராமலிங்கம்.. நிறைய பேர் நீங்க சொல்லுறதைத்தான் சொல்லுறாங்க
ReplyDeleteஉங்கள் மனக்குமுறல் நல்லா தெரியுது......
ReplyDeleteராமலிங்கைத்தை வழிமொழிகின்றேன்.
ReplyDeleteசகித்துக்கொண்டால் பர்ஸ் குறையாது
ஒரு சிலர் இதை விளையாட்டாக செய்து வேட்டு வைக்கிறார்கள்... உனக்கு ஏற்பட்டதை போல..
ReplyDelete