இளையராஜாவின் இசையும் பா மற்றும் சீனிகம்மும்
பெரும்பாலான பதிவர்கள் பா மற்றும் சீனி கம் படங்களில் இளையராஜாவின் இசை சிறப்பாக அமைந்து உள்ளது என்று சொல்லி வருகிறார்கள்..ஒரு தீவிர இளையராஜாவின் இசை ரசிகனாக இது மறுக்கதக்கது .
இளையராஜாவின் இசையில் ARR வருகைக்கு அப்புறம் electronics instruments அதிகம் தென்பட ஆரம்பித்தன. அது அவரின் இசைக்கு ஒரு உயிரை கொடுக்கவில்லை ... ஆனால் அது இனிமையாக இருந்து இருக்கலாம் .. இது மட்டும் அல்லாமல் சில வருடங்கள் அவருக்கு அதிக படங்கள் இல்லாதது , திரை உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற விசயங்களால் அவரின் பாடக தோழர்கள் SPB , M வாசுதேவன் , ஜானகி , சுசீலா , ஜேசுதாஸ் பயன்படுத்த முடியாமல் புதிய பாடகர்களை அவர் அறிமுகபடுத்தியது போன்றவை அவரின் இசையின் பழைய இனிமையை கொடுக்க முடியவில்லை .
சேது படத்தில் இளையராஜாவின் சிறந்த இசை கொஞ்சம் சிறப்பாக அமைந்து இருந்தது ரெம்ப நாளைக்கு அப்புறம் ... அதை விட்டால் ஒன்று இரண்டு பாடல்கள் அவ்ளோ தான் . அதற்கு அப்புறம் விருமாண்டியில் கூட அவரின் இசையை கேக்க முடியவில்லை ..
இன்றும் அவரது பழைய படங்களின் பாடல்களும் , பின்னணி இசையும் அவராலே மறுபடியும் இசைக்க முடியாதவை ...
"nothing but wind " மற்றும் "how to name it " போன்ற வாத்திய தொகுப்புகள் கிட்ட அவர் வெளியிட்ட திருவாசகம் , music of messiah போன்ற தொகுப்புகள் கூட நெருங்க வில்லை .
கேட்டு பாருங்கள்
ராஜா ராஜா சோழன் நான்
தென்றல் வந்து தீண்டும் பொது
பூங்காற்று புதிதானது
அடி ஆத்தாடி
கொடியிலே மல்லிகை பூ
ஊரு விட்டு ஊரு வந்து
புத்தம் புது காலை பொன்னிற வேளை
இன்னும் பல பல
அப்புறம் சொல்லுவீர்கள் நான் சொன்னது சரிதான் என்று
நீங்கள் குறிப்பிட்டுள்ள இளையராஜா அவர்களின் பழைய பாடல்கள் அனைத்தும் தெவிட்டாத பொக்கிஷம்.
ReplyDeleteநல்ல தொகுப்பு.ஏற்றமும்,இறக்கமும் எல்லோர் வாழ்விலும் சகஜம்தானே நண்பரே...
ReplyDelete//புத்தம் புது காலை பொன்னிற வேளை
ReplyDelete//
WoW
இசைஞானியின் இசையை ARR ன் வருகைக்கு முன், வருகைக்கு பின் என்றெல்லாம் பிரிப்பது தவறு. 90 களுக்கு பிறகு என்று வேண்டுமானால் சொல்லலாம். 90 களுக்கு பிறகும் இசைஞானி அற்புதமான பாடல்களை கொடுத்தார். உதாரணத்திற்கு மனோ பாடிய பாடல்கள். ஹிட்டாகாத காரணத்தால் அவை சிறந்த பாடல்கள் அல்ல என்றாகி விடாது. மனோ கலெக்சன் கிடைத்தால் கேளுங்கள். உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்வீர்கள். பிற்பாடு ஹரிஹரனை பயன் படுத்தி காசி படம் கொடுத்ததை மறந்துவிட்டீர்களா.
ReplyDeleteதமிழுதயம் நீங்கள் சொல்லுவது சரிதான் .. அவர் 90 களில் இசை அமைத்த ஆரம்ப கால படங்கள் சிறந்த இசையை கொண்டவை . தளபதி , வீரா ,மகாநதி ,தேவர் மகன் மற்றும் இன்னும் பல கார்த்திக் படங்கள் ..
ReplyDeleteநீங்கள் சொன்ன காசி படத்தில் பாடல்கள் வெற்றி பெற்றாலும் அவை அவரின் சிறந்த படைப்புகளின் வரிசையில் வைக்கத்தக்க அளவுக்கு சிறந்த இசை அல்ல.
அவரின் சிறந்த இசையை விதவிதமாக கேக்க முடியாமல் வருத்தப்படும் அவரது இசையின் தீவிர ரசிகன் ..
அவர் நாட்டுப்புற இசைக்கு செய்ய வேண்டியது நிறைய உள்ளது .. அவரை விட்டால் நாதஸ்வரம் , மோளம் போன்ற நாட்டுப்புற வாத்தியங்களை கொண்டு சிறப்பாக இசை அமைக்க ஆட்கள் கூட இல்லை .. அவர் நாட்டுப்புற வாத்தியங்கள் கொண்டு பல தொகுப்புகளை வெளியிடவேண்டும்
நன்றி துபாய் ராஜா ,கல்வெட்டு மற்றும் blogpaandi
ReplyDeleteஇனி இளையராஜா புதியதாய் தர வேண்டும் என்கிற அவசியமே இல்லை. இதுவரை அவர் இசையமைத்த பாடல்களை கேட்டு மகிழவே ஆயுள் போதாது. ஒரு அற்புதமான இசைஞானியின் பாடலை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்."ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அது தான்" படத்தின் பெயர்"நெஞ்சிலாடும் பூ ஒன்று" ரீலிசே ஆகாத படம். வாய்ப்பு கிடைத்தால் கேட்டு மகிழுங்கள்
ReplyDeleteதமிழ் உங்களிடம் உள்ள அறிய பாடல் தொகுப்பை என்னிடம் பகிர்ந்து கொள்ளவும் .. பாடல்களை தரவிறக்கம் செய்ய சுட்டிகளை கொடுத்தும் மிகவும் மகிழ்ச்சி .........
ReplyDeleteதமிழுதயம் அரிய பாடலை அறியத் தந்ததற்கு நன்றி...
ReplyDeleteமீன் துள்ளியான்...
உங்கள் பதிவில் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு... இருப்பினும் உங்கள் கருத்து...
‘ஜப்பானில் கல்யாண ராமன்’ படத்தில் ‘காதல் உன் லீலையா’ கேட்டுப் பாருங்கள்...(நன்றி: நாடோடி இலக்கியன்)
‘தம்பி பொண்டாட்டி’ படத்தில் ‘உன் எண்ணம் இங்கே’ பாடல் கேளூங்கள்(நன்றி: ரவிஷங்கர்)
தரவிறக்கம் பற்றித் தெரியவில்லை..
http://www.thiraipaadal.com/mdalbums.asp?MdId=MD00001
இங்கு போய் ஆன்லைனில் கேட்கலாம்...
இன்னும் ரசனை சுவைக்க http://raviaditya.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE
செல்லுங்கள்...
இப்போதைக்கு தமிழுதயத்தின் கருத்தோடு உடன்படுகிறேன்.ஹிட் ஆகாததால் நல்ல பாடல்கள் ஆகாது என்பது என் எண்ணமில்லை.
‘அமைதிப்படை’ -சொல்லிவிடு வெள்ளிநிலவே’
‘அதர்மம்’-’முத்துமணி முத்துமணி’
‘அவதாரம்’-’தென்றல் வந்து தீண்டும்’
‘பூமணி’- ‘எம்பாட்டு எம்பாட்டு’
’ரமணா’- வானவில்லே
‘விருமாண்டி-ஒன்னவிட இந்த ,மாடவிளக்கே யாரு இப்போ
‘என் மனவானில்’-என்ன சொல்லிப் பாடுவதோ
‘வீரா’- மலைக்கோவில் வாசலிலே
‘ராஜாவின் பார்வையிலே’- இவள் யாரோ வான் விட்டு
‘தேவதை’-ஒருநாள் அந்த ஒருநாள்
‘ஹேராம்’ நீ பார்த்த
‘காதல் கவிதை’ -டயானா,ஏ கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட, காதல் மீதிலொரு காதல்
‘கரிசக்காட்டுபூவே’-ஆயிரம் கோடி
‘நிலவே முகம் காட்டு’-தென்றலைக் கண்டு கொள்ள
‘அழகி’-ஒளியிலே
‘சொல்ல மறந்த கதை’- குண்டுமல்லி,காட்டுல தலையாட்டுற,அம்மா சொன்ன ஆரிரரோ
ஆவாரம்பூ-ஆலோலம் பாடி (படத்தின் அனைத்துப் பாடல்களும்)
பாண்டித்துரை-கானக்கருங்குயிலே
இது நம்ம பூமி-ஆறடிச்சுவருதான்,ஒரு போக்கிரி ராத்திரி
எங்க தம்பி-மானே மரகதமே....
கை வலிக்குதுங்க... இதையெல்லாம் இப்போ மறுபடியும் ஒருமுறைகேட்டுப் பாருங்க... பதின்ம வயதுகள்ல வேற மாதிரிக் கேட்டிருப்போம்...
இப்போ மறுபடியும் கேட்டுப் பாருங்க...
நம்மகிட்ட இருக்க பிரச்சினையே , அதை மத்தவங்க கேட்குறாங்களான்னு பார்க்கிறது...
அதெயெல்லாம் விடுங்க. நமக்காக இசை கேட்போம்.
வாங்க தமிழ்ப்பறவை ... பாடல் தொகுப்புக்கு நன்றி .. நான் சொல்ல வந்தது சிறந்த பாடல்களின் விகிதம் 90 களில் குறைந்ததைதான் ...
ReplyDeleteஇங்கு சிறந்த பாடல் என்பது எல்லோரு கேக்கும் பாடல்கள் அல்ல. உணர்வுபூர்வமான இசை கொண்ட பாடல்களைத்தான்
உங்கள் கருத்துகளை கேக்க விழைகிறேன்
புரிகிறது மீன் துள்ளியான்...
ReplyDeleteபழைய பாடல்களை விட ஒருதரம் மாற்றுக் கம்மிதான்.
அப்போதிருந்த ராஜாவுக்குக் கட்டுப்பாடு கிடையாது. காட்டாற்று வெள்ளம் போல...
தற்போது அவருக்கே அவர் விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகள் நிறைய... :-(
பாடல்களை விடப் பின்னணி இசையில் அவர் தரம் உயர்ந்துகொண்டுதானிருக்கிறது. நன்றி நண்பரே...
//‘ராஜாவின் பார்வையிலே’- இவள் யாரோ வான் விட்டு//
ReplyDeleteஇந்தப் பாட்டில் ஒருவர் அடர்த்தியாய் மீசை வைத்து கையை இருப்பக்கமும் விரித்து தலையை இருப்பக்கமும் ஒரு விதமாய் ஆட்டி ஒரு expression கொடுப்பாரே. அதுதான் அந்தப் பாடலுக்கே உயிர் கொடுத்தது என்கிறார்களேஉண்மையா?
சும்மா
நீங்கள் சொன்னது உண்மை என்ற போதும் தொண்ணூறுகளின் பின் இளையராஜாவின் இசை பற்றிய சிலக் கருத்துகளோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. நாம் கவனிக்கவில்லை அவ்வளவே தயவு செய்து சொல்ல மறந்த கதை,டைம்,அழகி,ஹேராம்(தேசிய விருது கிடைத்திருக்க வேண்டியது),விருமாண்டி,பிதாமகன் கேளுங்கள். எனக்கேதோ அட்டகாசமாகத் தெரிகிறது. ம்ம் கண்ணுக்குள் நிலவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை தொண்ணூறுகளின் பிற்பாதியில் வந்தவை அல்லது இரண்டாயிரங்களில்.
//இங்கு சிறந்த பாடல் என்பது எல்லோரு கேக்கும் பாடல்கள் அல்ல. உணர்வுபூர்வமான இசை கொண்ட பாடல்களைத்தான்//
ReplyDeleteஉணர்வுபூர்வமான பாடல்கள் என்பது அவரவர் ரசனைக்கேற்ப மாறக்கூடும் அல்லவா
நீங்கள் எவ்வளவு தூரம் ரசித்து, அவர் இசையில் மயங்கி இருக்குறீர்கள் என்று தெரிகிறது. பதிவும் கருத்தும் நல்லா இருக்குங்க.
ReplyDeleteநன்றி சித்ரா , தமிழ்ப்பறவை
ReplyDeleteநீங்கள் கூறிய அனைத்துப்பாடல்களும் காலத்தால் அழியாத பாடல்கள்........
ReplyDeleteரொம்ப ரசிச்சீங்களோ............
//கொடியிலே மல்லிகை பூ
ReplyDelete//
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...
இளையராஜா பற்றிய பதிவு...
ReplyDeleteஇளையராஜாவின் இரசிகராய் எழுதி இருக்கிறீர்கள்...இளையராஜாவின் ரசிகை என்றே ஒரு படம் உண்டு நினைவு உள்ளதா...'மாலைச் செவ்வானம்' என்ற அழகான பாடல் கூட உண்டு...
தமிழுதயம் சொல்லி இருப்பதும் சரிதான்...நீங்கள் சொல்லி இருப்பதும் சரிதான்.. அவரவர் ரசனைக்கேற்ப பாடல் தெரிவு...காசி பாடல்களை எனக்கும் பிடிக்கும். தமிழுதயம் மனோ பற்றி சொன்னார்...கூட அருண்மொழி பற்றி கூட சொல்லலாம்.(ஆராரோ பாட்டுப் பாட, வெள்ளிக் கொலுசுமணி....)
ஆமா ஸ்ரீராம் . நீங்கள் அருண்மொழியை சொல்லி இருக்கலாம் ... எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் படல்களை .. அது போக சுரேந்தர் கூட அருமையான பல பாடல்களை பாடி உள்ளார் ..
ReplyDelete//ரொம்ப ரசிச்சீங்களோ..//ஆமாங்க ..
ReplyDeleteநன்றி இட்லி மன்னிக்கணும் ஜெட்லி
நான் சிலகாலமாக இதே மனவோட்டத்தில் இருக்கிறேன்!
ReplyDelete90களுக்கு பிறகு அவர் இசையில் இந்த சரிவை நான் காண்கின்றேன். ஒரு வேளை செலவு காரணமா? முன்பிருந்தது போல அவருக்கு கேள்வி கேட்காத தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் synthesizer இசையிலேயே அவர் orchestrationஐ கொடுத்து விடுகிறார்? இல்லை அவரே அவருக்கு வகுத்துக்கொண்ட எல்லையா? இல்லை போதும் என்ற சலிப்பா?
தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவருடைய பழைய பாடல்களில் இருந்த அந்த freshness இப்போது இல்லை... அதற்கு முக்கிய காரணம் பழைய பாடல்களில் அவருடைய இணையற்ற இசைக்கருவிகளின் பயன்பாடு (e.g. Classical violin tracks merging east and west, small interludes in appropriate instruments).அதற்காக புதிய பாடல்கள் சலிப்பு தரவில்லை. ஆனால் அந்த haunting melody இல்லை.
நீங்க சொல்றது கரெக்ட். தொழில்நுட்பத்தின் அதிரடி வளர்ச்சி இளையராஜாவை இசைய பாதித்தது. அதை சமாளிக்க அவர் எடுத்துக்கொண்ட பல முயற்சிகள் அவருக்கு பல தோல்விகளை கொடுத்ததுதான் மிச்சம். ஆனால் அவரது சில தோல்விகளை வைத்து இளையராஜாவை குறைவாக மதிப்பிட முடியாது.
ReplyDeleteவிரும்பாண்டி பாட்டு சரியில்ல சொன்னிங்க தப்புங்க செந்தில்....உன்னை விட இந்த உலகத்துல அப்படிங்கிற பாட்டைக்கேட்டுப் பாருங்க எக்ஸலன்ட் மெலோடிஸ்...
நாஞ்சில் நீங்கள் சொல்லுற விருமாண்டியில் ஒன்று ரெண்டு பாடல்கள் நன்றாகவே இருந்தன .. நான் சொல்லுவது எல்லா பாட்டுகளும் அருமையாக அமைந்து வந்த காலங்கள் .
ReplyDeleteகருத்துக்கு நன்றி பிரேம்