ராஜ்கண்ணன் ஒரு மென்பொருள் வல்லுநர் .இவன் எப்போவுமே ரெம்ப நல்ல டிரெஸ்ஸிங் பண்ணுவான்..பயலுக்கு ரெம்ப நாளா காதலிக்க ஆசை . ரெம்ப காஞ்சு போன பய .
அன்னைக்கு வழக்கம்போல அலுவலகத்துக்கு தாமதமாக சென்றான். இவன் எப்போவுமே லேட்டா போறதுக்கு ஒரு காரணம் இருக்கு.அது என்ன அப்படின "SHIRT IN" பண்றதுக்கே 30 நிமிடம் ஆகும்.ஆபீஸ்ல ஒரு அழகான அமைதியான பொண்ணு ஒன்னு அவன் சீட் பக்கத்துல உக்கார்ந்து இருந்தது . பய அப்படியே புல்லரிச்சு போய்ட்டான் நம்ம பக்கத்து சீட்ல ஒரு பொண்ண அப்படின்னு .
அந்த பொண்ணு வேற ரெம்ப அமைதியா இருந்ததால பய ரொமான்ஸ் (மேட்டுக்குடி கௌண்டமணி மாதிரி ) விட ஆரம்பிச்சிட்டான் .பய அதுக்கு அப்புறம் ஒரே இளையராஜா பாட்டு தான் .. அப்படியே அதை ஆபீஸ்ல இருக்கும் பொது வேணுமின்னே என்றே சத்தம் வச்சு கேக்குறதுன்னு சொல்லி அந்த பொண்ணுக்கு நூல் விட்டான் . அந்த பொண்ணு வழக்கம் போல அமைதியவே இருந்தது .
இந்த பய புள்ளைக்கு ஒன்னும் புரியலை . சரி நம்ம தமிழ் பாட்டு கேக்குரதல பதில் இல்லையோ அப்படின்னு யோசிச்சு இங்கிலீஷ் பாட்டு கேக்க ஆரம்பிச்சான் ... அதுலயும் ஒரே காதல் பாட்டுதான் .
இப்படியே ரெண்டு நாள் போச்சு ... அந்த பொண்ணுகிட்டே இருந்து எந்த பதிலும் காணோம் . சனி ஞாயிறு விடுமுறை ..
பய ஒரு மார்க்கமாகவே இருந்தான் .. அது வரைக்கு படமே பாக்காத பய சனி ஞாயிறு TV இல் போட்ட "காதல் மன்னனையும் அலைகள் ஒய்வதில்லையும் " பாத்து காதல் சுதி ஏறி போய் இருந்தான் .திங்கள் கிழமை எப்படியாவது அந்த பொண்ணு கிட்டே பேசிடனும் அப்படின்னு ஒரு முடிவுல இருந்தேன் .
திங்கள் கிழமை வந்தவுடனே அந்த பொண்ணு கூப்பிடுச்சு . பயலுக்கு அப்படியே வேர்த்துடுச்சு .
கண்ணன் அப்படின்னு கூப்பிட்டதும் பயலுக்கு அப்படியே வானத்தில பறக்கிற மாதிரி இருந்துச்சு .
அந்த பொண்ணு தன்னை அறிமுகபடித்திட்டு " நான் உங்க டீமா lead பண்ண போறேன் .. இந்த டீம்ல நீங்க தான் senior . எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க " அப்படின்னு சொன்னாள் .
அன்னையோட காதல் முயற்சியை விட்டவன் தான் இப்ப "ஒர்குட்ல profile" பார்க்கிறதோட சரி ..
பின்குறிப்பு : இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் கற்பனையே .இந்த கதை யார் வாழ்க்கையிலாவது நடந்து இருந்தால் கம்பெனி பொறுப்பு அல்ல
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
ஷர்ட்-இன் பண்றதில் ஆரம்பித்து ஓர்குட் இல் முடியும் நவீன
ReplyDeleteஒரு-தலை காதல் கதை. நல்லா இருக்கு!
முடிவில் சிரித்தேன்.. நன்று .. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteநீ கதைல சொல்ற ஆளுக்கும் நமக்கு பொதுவா தெரிஞ்ச ஒருத்தனுக்கும் ரொம்ப ஒத்துபோகுதே.. நீ அவன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே...
ReplyDeleteடேய் ஜான் இது அவனே தான்
ReplyDeleteவருகைக்கு நன்றி சித்ரா ,மலிக்கா...
ReplyDeletejamai meen :-), கதை கருவிற்கு இப்படித்தான் நம்மைச் சுற்றி பார்க்கணுமா...
ReplyDeleteevana pathi da pesittu irukeenga...
ReplyDeleteநண்பா யாருன்னு தனிய சொல்லுறேன் .. கொஞ்சம் நிசம் கொஞ்சம் கற்பனை ..முழுக்க அவன் கதை இல்லை
ReplyDeletesaya sangat senang lihat fitur ini rose flower sangat beautiful
ReplyDeleteரத்னா என்ன சொல்லுறீங்க . புரியலை
ReplyDeleteநல்ல கதைங்க... ஸார்ட் அன்ட் ஸ்வீட்டு...
ReplyDeleteநன்றி ராம்
ReplyDelete