Wednesday, December 9, 2009

தெலுங்கானா உதயம்

தெலுங்கானா உதயம்

தெலுங்கானா தற்போதைய ஆந்திரா மாநிலத்தின் 10௦ மாவட்டங்களையும்(வாரங்கல், அடிலாபாத் , கம்மம் , மகாபுப்நகர் , நல்கொண்டா , ரங்காரெட்டி , கரிம்நகர் ,நிசாமாபாத் , மேடக் , ஹைதராபாத் ) கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளையும் உள்ளடக்கிய பகுதி ஆகும் . தெலுங்கானா வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் நிசாம் வசம் இருந்தது . விடுதலைக்கு பின்னர் நிசாம் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார்.சர்தார் படேலின் முயற்சியால் தெலுங்கானா பகுதிகள் இந்தியாவுடன் இணைந்தன .நிசாம் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து விட்டார் .



1956 இல் தெலுங்கானா பகுதிகள் ஆந்திராவுடன் சேர்த்து ஆந்திரா மாநிலம் அமையும்போது ஒரு gentleman ஒப்பந்தம் தெலுங்கானா தலைவர்களுக்கும் ஆந்திரா மாநில தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்டது .

இங்கு ஆந்திரா மாநிலம் என்பது வெள்ளையர்களின் ஆட்சின் கீழ் இருந்த பகுதிகள் .

அந்த ஒப்பந்தத்தின் முக்கியமானவை "முதலமைச்சர் பதவி ஒரு பகுதிக்கு கொடுக்கபட்டால் , அடுத்த பகுதிக்கு துணை முதலமைச்சர் கொடுக்க வேண்டும் . அமைச்சரவை முதல் எல்லா இடங்களிலும் தெலுங்கானா பகுதிக்கு ஒதுக்கீடு வேண்டும் " என்பதே .

தெலுங்கானா தலைவர்கள் இவ்வாறு கேட்டதுக்கு ஒரு காரணம் இருந்தது . அது என்ன என்றால் "வெள்ளையர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி கல்வியில் சிறந்து விளங்கியது . தெலுங்கானா பகுதி விவசாயத்தில் சிறந்து விளங்கியது அது போக சில மாவட்டங்களில் பெரிதாக எதுவும் கிடையாது "

1969 இயக்கம் :

1956 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் எதுவும் நிறைவேற்றாத காரணத்தினால் 1969 இல் கலவரம் தெலுங்கானா பகுதிகளில் வெடித்தது . இந்த போராட்டத்தில் சுமார் 360 மாணவர்கள் தன்னுயிரை இழந்தனர் .

இதன் காரணமாக தெலுங்கானா மக்கள் இயக்கம் காங்கிரசில் இருந்து விலக்கப்பட்ட M சென்னா ரெட்டி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது .அடுத்து வந்த தேர்தலில் இந்த கட்சி ஓரளவு வெற்றியும் பெற்றது . 1971 இல் , போராட்டத்த கைவிட்டு இந்த கட்சியின் தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கே பிழைப்பு தேடி சென்றனர் .

2004 இயக்கம் :

1998 இல் பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முயற்சில் இறங்கியது . அப்போது அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்தால் அதில் இருந்து பின்வாங்கியது .. இதனால் மறுபடியும் தெலுங்கானா இயக்கம் வலுபெற்றது . இதன் காரணமாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி (TRS) கட்சி சந்திரசேகர ராவ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது . சந்திரசேகர ராவ் அவர்களின் தெலுங்கானா கோரிக்கையை ஆதரிக்க மறுத்து அவரை தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து நீக்கியது .

2004 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் TRS கூட்டணி அமைத்து போட்டி இட்டது . காங்கிரஸ் தனிமாநில கோரிக்கைக்கு அதரவு தெரிவித்தது . தேர்தலில் வென்றதும் வழக்கம் போல் காங்கிரஸ் தன நிஜ முகத்தை காட்டி தெலுங்கானா மக்களை ஏமாற்றியது . இதனால் மத்திய கூட்டணி அமைச்சரவையில் இருந்து TRS விலகியது . TRS சந்திரசேகர ராவ் நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்தார் . இடைதேர்தலில் கரிம்நகரில் போட்டி இட்ட அவர் பெரிய வித்யாசத்தில் மறுபடியும் வென்றார் .

2008 இல் மறுபடியும் TRS தனது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய செய்து காங்கிரஸ் அரசிற்கு ஒரு அழுத்தம் உண்டாக்கியது . ஆனால் அதற்கு பின் நடைபெற்ற இடைதேர்தலில் TRS பெரிதாக வெற்றி பெறவில்லை .

2009 இல் நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து TRS பெரிதாக வெல்ல முடியவில்லை .

10 நாட்களுக்கு முன்னர் திடீர் என்று சந்திரசேகர ராவ் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார் . ஆரம்பத்தில் இது சும்மாதான் என்று இருந்த காங்கிரஸ் , ஒரு கட்டத்தில் இவரின் மன உறுதியையும் , மக்களின் எழுச்சியையும் பார்த்து பயந்தது .

இது தவிர சந்திரசேகர ராவ் உடல்நிலை மோசமாக சென்று கொண்டு இருந்தது . இந்த சமயத்தில் அனைத்து கட்சியில் உள்ள தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர்களும் தெலுங்கானா கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்க காங்கிரஸ் நிலைமை பரிதாபமானது .

இந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது மாணவர்கள் போராட்டம் வேறு அரசாங்கத்தை பயமுறுத்தியது .. பள்ளி கல்லூரிகள் 15 நாள் விடுமுறை விடப்பட்டன தெலுங்கானா பகுதிகளில் . இந்நிலையில் தெலுங்கானா பகுதியை சேர்ந்த மாணவர்கள் சட்டமன்றத்தை முற்றுகை செய்ய போவதாக அறிவித்தனர் அவர்களின் கோரிக்கை "சட்ட மன்றத்தில் தனி தெலுங்கான மசோதாவை நிறைவேற்றுவது "

தெலுங்கானா முழுக்க நிலைமை மோசமானதால் அவசர அவசரமாக ஆலோசித்த மத்திய அரசு ஒரு வழியாக தனி தெலுங்கானாவை ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு அமைப்பதாக அறிவித்து உள்ளது .


சந்திரசேகர ராவ் அவர்களின் உறுதியான உண்ணாவிரதத்தால் தெலுங்கானா பிறந்தது .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

9 comments:

  1. ..well written...ஆந்திராக்கு விசாகபட்டினமா தலைநகர்???

    ReplyDelete
  2. அமுதா வருகைக்கு நன்றி ..

    நிறைய தகவல்கள் அடிபடுது ..

    விசாகப்பட்டினம் இல்லை என்றால் விஜயவாடா

    இப்போ ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதிகளில் இருந்து ஹைதராபாத்தை பிரிக்க எதிர்ப்பு வருவதால் ஹைதராபாத் "யூனியன் பிரதேசமாக " அறிவிக்ப்படலாம்

    ReplyDelete
  3. என்னவோ போ நினைச்சதை அழகா சாதிச்சிட்டாங்க...

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ஜாக்கி .. சும்மாவா வந்தது விடாமுயற்சி உறுதியான போராட்டம் ...
    இருங்க இன்னும் முடியல .. ஆந்திரா மக்களின் எதிர்ப்பு வேறு இப்போ கிளம்பி உள்ளது ...
    என்னதான் ஆகுதுன்னு பாப்போம்

    ReplyDelete
  5. நுவ்வு தெலுங்கானா கோசரம் செப்பண்டி. ..நமக்கு ஆந்திரா பப்பு ஜர்கண்டி.
    நம்ம தமிழ் நாட்டு அரசியலே தகிடதோம் போடுது. இதில் ஆந்திரா குச்சிபுடி வேறயா?
    நல்லா இருக்கு......

    ReplyDelete
  6. mmm... பொறுத்திருந்து பார்ப்போம் முழுசா என்னதான் நடக்குதுன்னு.

    ReplyDelete
  7. நிறைய தெரியாத விசயங்கள் இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொண்டேன், மீன் நன்றி!

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி தெக்கி அண்ணே

    ReplyDelete
  9. ஆமாம், இந்த கட்டுரையின் மூலம் தெலுங்கானா பறறி தெரிந்து கொண்டேன், நன்றி செந்தில்....

    இப்பொ அலகிரி தெற்கு தமிலகம் வெனும்னு கேட்டாலும் கேட்கலாம்... :(

    ReplyDelete